மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்! துரதிர்ஷ்டம் துரத்தும்!

நாம் மறந்தும் கூட ஒரு சில பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் நம் வாழ்க்கையில் கஷ்டம் மேலும் மேலும் அதிகரிக்கும்.

தர்மம் தலை காக்கும் என்று சொல்வார்கள். பிறருக்கு தானம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் விலகி வாழ்க்கைக்கான அர்த்தம் கிடைக்கும்.

தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம்.

அப்படி நாம் தானம் கொடுப்பதற்கு முன் எந்தெந்த பொருட்களெல்லாம் தானமாக கொடுக்க கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

சில பொருட்களை தானமாக கொடுப்பதால் அந்த தானத்தால் வரக் கூடிய நன்மைகளை விட கஷ்டம் தான் அதிகமாக இருக்கும்.

வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்!

அந்த வகையில் எந்தெந்த பொருட்களை தானமாக கொடுக்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நம்முடைய கிழிந்த துணிகளை தானமாக கொடுக்க கூடாது. அதே போல் உடைந்த பொருட்களை தானமாக கொடுப்பதும் தவறு.

துடைப்பத்தை தானமாக வழங்குவது நம் வீட்டு செல்வத்தை அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு சமம். அதாவது நம்ம வீட்டு மகாலட்சுமி தேவியையே கொடுப்பது போல். அதனால் வீட்டில் நிதி ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.

கூர்மையான பொருட்களான கத்தரிக்கோல், கூர்மையான கத்தி, ஊசி போன்ற பொருட்களை ஒருவருக்கு தானமாக வழங்கினால் வீட்டில் துரதிர்ஷ்டம் துரத்தும்.

அடுத்து நம் வாழ்க்கையில நல்ல தானம் என்று பார்க்கும் பொழுது அன்னதானம் செய்யலாம். பொதுவாக பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் சிறுவர்கள் முதியோர்கள் பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம்.

அந்த மாதிரி நபர்களுக்கு முடிந்த வரை காசு கொடுக்காமல் சாப்பாடு, பழங்கள், டீ, தண்ணீர் போன்ற உணவு பொருட்களை தானமாக கொடுப்பது நமக்கு புண்ணியத்தை சேர்க்கும்.

தானத்தில் சிறந்தது அன்னதானம். அனால் பழைய கெட்டுப்போன உணவுகளை தானமாக கொடுப்பது மிகவும் தவறு. அது நம் வருமானத்திற்கு அதிகமான செலவை கொண்டு வந்து சேர்க்கும்.

பசியில் வாடும் ஒருவருக்கு வயிறார உணவளித்தால் அவர்கள் வாழ்த்தும் வாழ்த்து நம் சந்ததியையே வாழ வைக்கும்.

Leave a Comment