இந்தி நடிகை மற்றும் பாடகி சோனாக்ஷி சின்ஹா ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். நடிப்பில் அடியெடுத்து வைப்பதற்கு முன், நடிகை ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு, அவர் தபாங் மூலம் அறிமுகமானார். இவரின் வாழ்க்கை வரலாறை தரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.
ஆரம்ப கால வாழ்க்கை :
1987 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி பிறந்த சோனாக்ஷி சின்ஹா பிரபல திரைப்பட நடிகர்களான சத்ருகன் சின்ஹா மற்றும் பூனம் சின்ஹா ஆகியோரின் மகளாவார்.
இவர் தந்தை நடிகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். சோனாக்ஷி சின்ஹா உடன் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் பிறந்தார்.
இவர் தனது பள்ளிப் படிப்பிற்காக ஆர்ய வித்யா மந்திரில் பயின்றார். அதைத் தொடர்ந்து, பிரேம்லீலா விதல்தாஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் பேஷன் டிசைனிங்கில் பட்டம் பெற்றார். ஆனால் சினிமா நடிகர்களின் மகளான அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க விரும்பினார்.
டாம் குரூஸ் வாழ்க்கை வெற்றி பயணம்
தொழில் :
2005 ஆம் ஆண்டு , சோனாக்ஷி சின்ஹா திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போதே இவருக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை பட்டார்.
பின் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தபாங் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இது ஒரு அதிரடி-நகைச்சுவை படமாகும். இதில் அவர் நடிகை சல்மான் கானுடன் இணைந்து நடித்தார்.
சோனாக்ஷியின் நடிப்பு விமர்சன ரீதியாக மதிப்பிடப்பட்டது. இந்த படத்திற்க்காக ஃபிலிம்ஃபேர் மற்றும் IIFA விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் தனது அறிமுகத்திற்காக பெற்றார். பின் பல படங்கள் நடித்தார்.
வெற்றி பாதை :
பின் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு சோனாக்ஷிக்கு நான்கு படங்கள் வெளியாகின. அதில் முதலில் அக்ஷய் குமாருடன் ரவுடி ரத்தோர் நடித்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஆனது.
அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்த அவரது இரண்டாவது படமான ஜோக்கர் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பின் சோனாக்ஷி, அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக சன் ஆஃப் சர்தார் என்ற அதிரடி-காமெடி படத்தில்
தோன்றினார்.
மோசமான விமர்சனங்களைப் பெற்ற பிறகும், இது ஒரு பொருளாதார வெற்றி பெற்றது. பின் ஆக்ஷன்-காமெடி தொடரான தபாங் 2 இல் நடிகை தோன்றினார். இது 265 கோடி பாக்ஸ் ஆபிஸ் வருவாயுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
2013 ஆம் ஆண்டு, நடிகர் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சோனாக்ஷி காதல்-நாடகமான லூட்டேராவில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப்
பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாகச் செயல்பட்டது.
சோனாக்ஷியின் நடிப்பு மிகவும் நன்றாக விமர்சிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு சோனாக்ஷி மிஷன் மங்கள் என்ற நாடகத் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழ் சினிமா துறை :
இந்தி மொழித் படங்களில் நடிகையான போது 2014 ஆம் ஆண்டும் தமிழ்த் திரைப்படம்மான ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் இவர் நடித்தார்.
இது இவரது முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.
சர்ச்சை :
சோனாக்ஷி அதிகம் சர்ச்சையில் சிக்காத நடிகர் ஆவார். ஆனால் அவரது ஒரு எம்எம்எஸ் ஒருமுறை கசிந்து வாட்ஸ்அப்பில் வைரலானது. பின்னர் அது போலியானது என தெரியவந்தது.
சொத்து மதிப்பு :
இவர் ஒரு படத்துக்கு 2021 ஆம் ஆண்டு வரை 5 கோடி சம்பளம் வாங்கி வந்தார் . இவரின் சொத்து மதிப்பு 80 கோடி என சொல்லப்படுகிறது.
விருதுகள் :
2011 ஆம் ஆண்டு தபாங் படத்திற்க்கு ஃபிலிம்ஃபேர் மற்றும் IIFA விருது என பல விருதுகளை.
2014 ஆம் ஆண்டு லூட்டேரா படத்திற்க்கு 2 விருதுகள் வாங்கினார்.