நிஷா டீ கடை வெற்றி பயணம் – Nisha Tea Shop Success Story in Tamil

ராஜ்கோட்டைச் சேர்ந்த 28 வயதான நிஷா , வெற்றி என்பது எளிய விஷியம என நம்புகிறார். அவர் சிறிய வேளையில் கூட பணம் அதிகம் கிடைக்கும் என நம்புகிறார்.

நிஷா 2017 ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு தனது குடும்பத்திடம் சொல்லாமல் கை வண்டியில் இருந்து தேநீர் விற்கத் தொடங்கினார்.


மேலும் ‘தி சைலண்ட்’ என்று அழைக்கப்படும் அவரின் ஸ்டாலில் 10 விதமான தேநீர் வகைகள் கிடைக்கும்.


இவர் சாதாரண டீயை ரூ. 10 மற்றும் சுவையூட்டப்பட்ட டீயின் விலை ரூ. 30 மற்றும் ரூ. 40 விலையுள்ள தந்தூரி டீயும் விற்று வருகிறார்.

இந்த உலகத்தில் பலரும் பிடிக்காத வேலையை தான் செய்து வருகிறார்கள். இதற்க்கு காரணம். குடும்ப சூழ்நிலை.

பலருக்கும் சொந்த தொழில் செய்ய ஆசை ஆனால் பிடித்தமான வேலையை செய்ய குடும்பத்தினரே இருப்பார்கள்.

சிலர் யார் என்ன சொன்னாலும் கேட்காமல் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலையை விட்டு விட்டு தனுக்கு பிடித்த வேலையை நிஷா ஹுசைன் செய்து வருகிறார்.

நிஷா தனது வணிக நுணுக்கங்களை கற்றுக் கொள்ள, ஒரு ஹோட்டலில் பணிபுரிந்துள்ளார். இப்போது அதை கொண்டு நல்ல நிலையில் உள்ளார்.

ஆரம்பா காலம் :

ராஜ்கோட்டினை சேர்ந்த நிஷா ஹுசைன் 28 வயது உடைய பெண். இவர் சொல்லும் வெற்றிக்கான மந்திரம் பிடித்த வேலையை ரசித்து செய்ய வேண்டும் என்பதே.

பிறர் என்ன நினைப்பார்கள் என்று அவமானமாக நினைக்க கூடாது. இது தான்இவரின் சிறிய மந்திரம்.

இவருக்கு வேலை மீது வெறுப்பு ஆகையால் நிஷா தனியாக தொழில் தொடங்க ஆசைப்பட்டார் ஆனால் வீட்டில் நிஷாவுக்கு எதிர்ப்பு அதிகம். இருந்தாலும் தனக்கு பிடித்தமான வேலையையும் செய்ய ஆரம்பித்து விட்டார்.

ஆரம்பத்தில் தனது டீ விற்பனையை ரகசியமாக தொடங்கியவர், தற்போது ராஜ்கோட்டில் மக்களால் ராஜ்கோட்டின் சாய்வாலி என்று பாசமாக
அழைக்கப்படுகிறார்.

ஆரம்பா காலம் ஒரு பெண் தனியாக, புதியதாக டீ கடை நடத்துவதை கண்ட பலரும் கேலி கிண்டல் செய்தனர். சுமார் 15 நாட்கள் டீ-யினை கீழே தான் ஊற்றினார் இவர்.

ஜெஃப் பெசோஸ் வெற்றி பயணம்

தந்தூரி டீ :

இவரின் தந்தூரி டீயை ஒருவர் குடித்து விட்டு இன்ஸ்டா மூலம் ஒரு கடையினை பற்றி செய்தி வெளியிட்டார். அந்த செய்தி அனைவருக்கு பரவியதும் கடைக்கு மக்கள் வரத் தொடங்கினார்.

வழக்கமாக ஒரு கப் சாதாரண டீ 10 ரூபாய் தான். ஆனால் பல்வேறு சுவைகளில் உள்ள டீ-யின் விலை 30 ரூபாயாகும். இதே மிக பிரபலமான தந்தூரி டீயை 40 ரூபாயாகும் விற்றார். இந்த தந்தூரியின் டீயினை ருசி பார்க்க பலரும் வந்தனர்.

இதில் உருவாகும் புகை மற்றும் மண் தன்மை என அனைத்தும் சேர்ந்து ஒரு விதமான சுவையினை கொடுக்கிறது இது தான் இவர் தந்திரம் இந்த தந்திரம் இவரை பெரும் பிரபல படுத்தியதி.

வெற்றி பயணம் :

2015 ஆம் ஆண்டு உயர் கல்வி படிப்பை முடித்ததும் நிஷா அப்ரேட்டராக இருந்தார். பின் வேலையை பிடிக்காமல் விட்டுவிட்டு. பின் பல மாத உழைப்புக்கு பிறகு வெறும் 25,000 ரூபாயினை பயன்படுத்தி டீ கடையை தொடங்கினார்.

இது பற்றி வீட்டில் கூட சொல்லாமல் செய்து வந்தார். தினமும் காலை 7.30 மணிக்கு கடையை திறந்து இரவு அடைப்பார் .


பலர் காலையில் நடைபயணம் மேற்கொண்ட பிறகு டீ குடிக்க விரும்புகிறார்கள். அதை சாதகமாக வைத்து படிப்படியாக முன்னேறி ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய் வரை சம்பாதித்ததாகவும், கொரோனாக்கு பின் தொழில் கொஞ்சம் மெதுவாகவே போவதாக சொல்கிறார்.

பிடித்த வேலையை செய்யுங்கள்.மனம் தான் மனிதனின் இன்பம்

Leave a Comment