fbpx FB.AppEvents.logPageView();

வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்!

கல் உப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் எப்படி செல்வ நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

நாம் கல் உப்பை எந்த வகையில் பயன்படுத்தினாலும் நமக்கு அது செய்யக் கூடியது ஒன்று தான். அது நன்மை மட்டும் தான்.

இப்படிப்பட்ட கல் உப்பை நாம் எங்கு வைப்பதால் நம் வாழ்க்கையில் செல்வத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நமக்குள் இருக்கிற நேர்மறை சிந்தனைகளை மழுங்கடிக்கும் வல்லமை தீயசக்திகளுக்கு உண்டு. இவற்றையெல்லாம் போக்கும் சக்தி உப்புக்கு  உண்டு.

பண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் வந்து கொட்டும் தெரியுமா? அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது!

கல் உப்பை தண்ணியில் கரைத்து தென் மேற்கு திசையில் தெளிப்பது மிகவும் சிறந்தது. ஒரு டம்ளர் தண்ணீரில் கல் உப்பை கரைத்து தென்மேற்கு திசையில் வைத்து வந்தால் எதிர்மறை ஆற்றல் விலகிச் சென்று நேர்மறை ஆற்றலை பெறச்செய்யும்.

அதே போல கடல் உப்பை நீங்கள் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிப்பதால் உங்களுக்கு நல்ல சுபிட்சம் ஏற்படும்.

இதன் மூலம் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் மிக மிக எளிதாக கிடைக்கக் கூடும். இந்த நேர்மறை ஆற்றல் கிடைத்தால் நாம் வெளியே செல்லும்போது வசீகரம் அதிகரித்து நாம் செய்யும் செயல்களில் நல்ல வெற்றி கிடைக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும்.

தினசரி காலையில் எழுந்தவுடன் கல் உப்பை நீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிப்பது சிறந்தது இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெற முடியும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதைச் செய்ய வேண்டாம் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தவிர்ப்பது நல்லது.

வாரத்தில் ஒரு நாள் வீடுகளை கழுவி சுத்தப்படுத்தும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை சேர்த்து கரைத்து வீட்டை சுத்தப்படுத்தி வந்தால். வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி வீட்டில் நன்மைகள் பெருக தொடங்கும். 

நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கழுவும் போது தண்ணீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து, அந்நீரைக் கொண்டு உங்களின் வானங்களை சுத்தப்படுத்துதினால் அதில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும்.

அடிக்கடி வாகனங்கள் பழுதடைவது குறையும், எதிர்பாரா விபத்துகள் ஏற்படாமல் காக்கும். 

தென்மேற்கு திசையில் கல் உப்பைக் கொஞ்சம் கொட்டி வைப்பது நல்ல பலனைத்தரும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *