பொதுவாக பல நடிகைகள் வெள்ளி திரையிலிருந்து வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் வருவார்கள் ஆனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரை நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் மிகவும் பிரபலமாக உள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் இன்று ஒரு படத்திற்கு 30 லட்சம் பெறுகிறார். இவரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.
ஆரம்ப கால வாழ்க்கை :
31 டிசம்பர் 1989 ஆம் ஆண்டு பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் ஆகியோருக்கு ப்ரியா பவானி சங்கர் மகளாக சென்னையில் பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரர் உள்ளார்.
இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள SBOA மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின் பொறியியல் படித்தார். பின் இவருக்கு சினிமா துறையின் மீது வந்த ஆர்வத்தால்.
பல முயற்ச்சியை செய்தார். பின் அவர் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சோனாக்சி சின்கா வாழ்க்கை வரலாறு
சின்ன திரை மற்றும் சினிமா துறை :
பல முயற்சிகளின் பின் தமிழ் செய்தி சேனலான புதிய தலைமுறையில் தொகுப்பாளராக பணியிடம் இவருக்கு கிடைத்தது. பின் சின்ன திரையில் நுழைய ஆசைப்பட்டார்.
பின் இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரையில் தொடர் நடிகையாகவும் நடிக்க ஒப்பந்தம் ஆனார். பின் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு சினிமா துறையில் நுழைய வாய்ப்பு
கிடைத்தது.
மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நடிகருக்கு ஜோடியாக தமிழ் சினிமா துறையில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான SIIMA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு, கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கத்தில் நடித்தார். 2019 இல், அவர் S.J.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்தார். பின் பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அருண் விஜய்யுடன் யானை, அதர்வாவுக்கு ஜோடியாக குருத்தி ஆட்டம், இரண்டாவது முறையாக எஸ். ஜே. சூர்யாவுடன் பொம்மை என பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் இப்போது தமிழ் திரையில் முன்னனி நடிகையாக உள்ளார். ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டை நடிகை பிரியா பவானி சங்கருக்கு மிகவும் பிடிக்கும்.
சமூக வலைத்தளம் :
சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் ஒருவர் ஆவார். இவர் அடிக்கடி தன்னுடைய புதிய புகைப்படங்களை வெளியிடுவார்.
இதனால் இவருக்கு கடுமையாக அல்லது தகாத முறைகளில் விமர்சனம் வரும். இவர் விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு அவ்வப்போது தக்க பதிலடியும் கொடுப்பதில் வல்லவர்.
தனிப்பட்ட வாழ்க்கை :
இவர் பள்ளி பருவத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். இவர் இருவரும் 18 வருடங்களுக்கும் மேல் காதலித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் விரைவில் திருமணமும் செய்யவுள்ளனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து கடற்கரை பக்கத்தில் ஒரு வீடு கட்டியுள்ளனர்.
பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் நெட்டிசன்கள் பலர் அவருடைய காதலனை குறித்து பொறாமையில் பொங்குகின்றனர்.
அந்த புகைப்படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இதனால் பலரும் பழையதை மறக்காத இந்த இருவருக்கும் நல்ல வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு :
பிரியா பவானி சங்கர் ஒரு படத்திற்கு 30 லட்சம் சம்பளம் பெறுகிறார். இவரின் சொத்து மதிப்பு 6 கோடி ஆகும். இன்ஸ்டாகிராமில் சுமார் 3.3 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
டிவி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய பிரியா பவானி சங்கர் இன்று தனது கடின உழைப்பால் ஒரு சிறந்த நடிகையாக வளர்ந்துள்ளார் என்பது மிகவும் மகிழ்ச்சி மற்றும் நமக்கு ஒரு உத்வேகத்தையும் காட்டுகிறது.