இதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்!

மகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெற முடியும் என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மகாலட்சுமியை நம் இல்லத்திற்கு வாசம் செய்ய வைப்பது மற்றும் மகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெறுவது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மகாலட்சுமி நம் இல்லத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு சில சின்ன சின்ன விஷயங்களை நம் செய்தாலே போதும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் நமக்கும் நம் இல்லத்திற்கும் கிடைக்கும்.

ஒரு இல்லம் என்பது மகிழ்ச்சி நிறைந்த இடமாகவும் மங்கலம் நிறைந்த இடமாகவும் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தாலே மகாலட்சுமியின் வாசம் இல்லத்தில் இருக்கும்.

முதலில் நம் வாசலில் இருந்து ஆரம்பிக்கலாம். ஒரு இல்லத்தின் வாசலில் கோலமும் நறுமணமுள்ள மலர் செடி கொடிகளும் இருப்பது சிறந்தது.

அடுத்து நிலை வாசலில் நிலைக் கண்ணாடியோ அல்லது கற்பக விநாயகர் படமோ இருப்பது நல்லது. கண்ணாடியும் கற்பக விநாயகர் படமும் வரக்கூடியவர் பார்க்கும் இடத்தில் இருந்தால் கண் திருஷ்டியும் தீய சக்திகளும் அணுகாது.

இரண்டாவதாக நம் நிலை வாசலின் உள்புறமாக மகாலட்சுமியின் படம் இருக்க வேண்டும் இது மகாலட்சுமி நம் இல்லத்தை பார்ப்பது போன்று அமையும்.

மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்! துரதிர்ஷ்டம் துரத்தும்!

அதற்கு அடுத்த படியாக நம் இல்லத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக இருக்கும் இடத்தில் மகாலட்சுமியின் அருள் எளிதில் கிடைக்கும்.

அது மட்டுமல்லாது முக்கியமாக சமையலறையும் பூஜை அறையும் சுத்தமாக வைத்துக் கொள்வது சிறந்தது.

பூஜை அறையில் நல்ல நறுமணமுள்ள வாசனை எப்போதும் வந்து கொண்டே இருக்க வேண்டும் ஆதலால் பூஜை நறுமண பொருட்களை நம் பயன்படுத்தலாம்.

அடுத்தபடியாக நம் வீட்டிற்கு வருபவர்களை நாம் மலர்ந்த முகத்தோடு வரவேற்பது சிறந்தது. வீட்டிற்கு வரும் விருந்தினரை நம் முக மலர்ச்சியோடு வரவேற்றால் நம் இல்லத்தில் மகாலட்சுமியும் வருவாள் என்பது நம்பிக்கை.

நம் இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்களுக்கு வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு சின்ன சின்ன விஷயங்களை நம் கடைப்பிடித்தாலே நம் இல்லத்தில் மகாலட்சுமி அருளும், வாசமும் கிடைக்கும்.

Leave a Comment