கால்பந்து போட்டிக்கு பெயர் போன வீரர் என்று அழைக்கப்படும் லயோனல் மெஸ்ஸி. இன்றைய உலகின் இளைய தலைமுறைக்கு பெரும் பாதிப்பை தன் விளையாட்டு மூலம் ஏற்படுத்தியுள்ளார்.
சிறுவயதில் இருந்தே தீராத காதல் கொண்ட கால்பந்து விளையாட்டு வீரர் ஆவர். இவரின் கடின உழைப்பால் பல படிகளை தாண்டி இன்று உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற பெருமையை பெற்றும் உள்ளார்.
இவர் மெஸ்ஸி பெயரை தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள். 972 ஆட்டங்களில் மொத்தம் 764 கோல்களையும் 329 உதவி கோல்களையும் அடித்துள்ளார். இவர் கால்பந்து உலகில் பெறாத விருதே இல்லை.
இவர் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவரின் வெற்றி பயணத்தை தொடர்ந்து படிக்கவும்.
ஆரம்பகால வாழ்க்கை :
1987 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் லயோனல் மெஸ்ஸி. ஜார்ஜ் மெஸ்ஸி மற்றும் செலியா குசிட்டினி ஆகியோருக்கு பிறந்தார். இவரின் இயற்பெயர் லியோனல் ஆண்ட்ரஸ் குசிட்டினி மெஸ்ஸி. மெஸ்ஸி கால்பந்தை விருப்பமாக கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார்.
அவர் கிராண்டோலி கிளப்பிற்காக விளையாடினார். மெஸ்ஸி தனது 6 வயதில் நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸில் சேர்ந்தார். அவர் நியூவெல்ஸ் அணிக்காக சுமார் 6 ஆண்டுகள் விளையாடினார்.
அப்போது மெஸ்ஸிக்கு ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவர் இருந்த நியூவெல்ஸ் கிளப் எந்த உதவியையும் இவருக்கு வழங்கவில்லை. பின் ஸ்பெயினில் குடியேறிய அவருக்கு, பார்சிலோனா கிளப் மருத்துவ உதவி செய்ய முன் வந்தது அது மட்டும் இல்லாமல் மெஸ்ஸியை
ஒப்பந்தமும் செய்து, அவரது கால்பந்து திறமையை கண்டறிந்தது.
டாம் குரூஸ் வாழ்க்கை வெற்றி பயணம்
தனிப்பட்ட வாழ்க்கை :
மெஸ்ஸிக்கு தியாகோ, மேடியோ மற்றும் சிரோ ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர் 2017 இல் தனது டீன் ஏஜ் காதலியான அன்டோனெலா ரோகுஸோவை மணந்தார்.
வெற்றி பயணம் :
2004ம் ஆண்டு மண்டல அளவிலான முதல் போட்டியில் இஸ்பான்யாலுக்கு எதிராக அறிமுகமானார். இதிலிருந்து பார்சிலோனாவின் செல்லப் பிள்ளையாகவே மாறினார்.
வெறும் 16 வயதில் தனது முதல் போட்டியில் விளையாடிய இவர். அந்த நேரத்தில் ஒரு கிளப்பிற்காக கோல் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார். பின் எல் கிளாசிகோவில் ஹாட்ரிக் அடித்த பிறகு லியோனல் வழக்கமான தொடக்க வீரரானார்.
2007 இல் அவர் மரடோனாவின் ‘நூற்றாண்டின் கோல்’ என்ற போட்டியில் ஒரு கோலை அடித்தார். 2019 இல் பார்சிலோனா ரசிகர்கள் இந்த கோலை கிளப்பின்
வரலாற்றில் சிறந்த கோலாக வாக்களித்தனர்.
மெஸ்ஸிக்கு 10 ஆம் எண் சட்டை வழங்கப்பட்டது. 2008-09 சிறந்த பருவமாக அவருக்கு அமைந்தது அந்த ஆண்டில் மட்டும் இவர் 38 கோல்களை அடித்தார் மற்றும் பார்சிலோனா ட்ரெபிள் பட்டத்தை வெல்ல உதவினார்.
2009 ஆம் ஆண்டு மெஸ்ஸி தனது முதல் Ballon d’Or விருதை வென்றார். அவர் முதல் 5 ஐரோப்பிய லீக்களில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
21 வயதிற்குள்ளாகவே பல விருதுகளுக்கான, பால்லோன் டி’ஆர் மற்றும் உலகிலேயே ஆண்டின் சிறந்த வீரருக்கான ஃபிஃபா (FIFA) விருது ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.
25 வயதில், லாலிகாவில் 200 கோல்களை அடித்த இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் 27 வயதிற்குள், அவர் தனது பெயரில் 400 கோல்களைப் பெற்றுள்ளார்.
மெஸ்ஸி அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயினில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார். அவர் தனது தாய்நாடான அர்ஜென்டினாவுக்காக மொத்தம் 81 கோல்களை அடித்துள்ளார். தென் அமெரிக்க வீரர்களில் அதிக கோல்கள்
அடித்தவர் லியோனல்.
2021 ஆம் ஆண்டு மெஸ்ஸி பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த அர்ஜெண்டினாவின் (Argentina) நட்சத்திரக் கால்பந்து வீரரான இவர் ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது.
ஆகஸ்ட் மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பில், மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறப் போவதை உறுதிப்படுத்தினார். மெஸ்ஸி 2021 இல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுடன் 2 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம் :
லா லிகா – 10 கோபா டெல் ரே – 7 ஸ்பானிஷ் சூப்பர் கோப்பைகள் – 8 சாம்பியன்ஸ் லீக் – 4 ஐரோப்பிய சூப்பர் கோப்பைகள்- 3 கிளப் உலகக் கோப்பைகள் – 3 பார்சிலோனாவுகாக வென்றுள்ளார்.
அடிடாஸ் மற்றும் பெப்சி என பல பிரபலமான பிராண்டுகளை மெஸ்ஸி விளம்பரப்படுத்துகிறார்.
லியோனல் மொத்த கோல்கள் :
லியோனல் 2022 ஆம் ஆண்டு வரை 972 ஆட்டங்களில் மொத்தம் 764 கோல்களையும் 329 உதவி கோல்களையும் அடித்துள்ளார்.
இவருடைய ஆட்ட முறை மற்றும் திறமையின் காரணமாக இவர்,
கால்பந்தாட்ட சாதனையாளரான டீகோ மாரடோனாவுடன் ஒப்பிடப்படுகிறார்.
சர்வதேசப் போட்டிகள் :
2005 ஆம் ஆண்டு FIFA U-20 உலகக் கோப்பை.
2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கம்.
ஐரோப்பிய கோல்டன் ஷூ லியோனல் மெஸ்ஸி ஆறு முறை வென்றுள்ளார்.
லியோனல் மெஸ்ஸி ஏழு முறை கோல்டன் பால் விருதை வென்றுள்ளார். என பல விருதுகளை அவர் வென்றும் உள்ளார்.
சொத்து மதிப்பு :
இவர் ஆண்டுக்கு 1000 கோடி முதல் 1100 கோடி சம்பளம் பெறுகிறார். இவரின் சொத்து மதிப்பு 5000 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரமான கணிப்பு இல்லை.
2005 ஆம் ஆண்டு ஃபிபா இளையோருக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை அர்ஜெண்டினா அணிக்காக வென்று கொடுத்தார். இந்த தொடரில் சிறந்த வீரர் மற்றும் அதிக கோல்கள் அடித்த சாதனையையும் படைத்தார்.
2008 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல லயோனல் மெஸ்ஸி காரணமாக அமைந்தார். இவர் தனது ரசிகர்களால் எப்போதும் மாரடோனாவின் வாரிசாக போற்றப்படுகிறார்.