யார் இந்த விளாடிமிர் புடின். இவர் பெயர் என்று உலகில் எங்கு பார்த்தாலும் கேட்கிறது ஆனால் உண்மையில் இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று ரஷ்யா நாட்டின் அதிபராக உள்ளார் என்பது மட்டும் யாரும் மறுக்க முடியாத உண்மை.
முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ,அரசியல்வாதி ஆவார், ரஷ்யாவின் ஜனாதிபதி, அறிவாளி, ஆபத்தான மனிதர், உலகின் சக்தி வாய்ந்த மனிதர் என்று நாம் சொல்லி கொண்டே போகலாம் வாருங்கள் நாம் அவரின் வாழ்க்கை வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி பார்க்கலாம்.

பிறப்பு :
7 அக்டோபர் 1952 ஆம் ஆண்டு தந்தை விளாடிமிர் ஸ்பிரிடோனோவிச் புடின் மற்றும் மரியா இவனோவ்னா ஷெலோமோவா மகனாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் பிறந்து இறந்து விட்டனர்.
கல்வி :
Sgoil 281 என்ற பள்ளியில் படித்த பின்னர். புடின் 1970 இல் ஆண்ட்ரி ஜ்தானோவ் லெனின்கிராட் மாநில பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின் 1975 இல் இவர் பட்டம் பெற்றார்.
வெளிநாட்டு புலனாய்வு அகாடமியில் 1984 – 1985 படித்தார்.1997 இல், அவர் தனது Ph.D. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைனிங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில்
பட்டம் பெற்றார். புடின் ஜெர்மனி மொழியை நன்றாக பேசுவார்.
ஆரம்பா காலம் :
புடின் படித்து முடித்த பிறகு சோவியத் யூனியனின் வெளிநாட்டு உளவுத்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான கேஜிபியில் வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக விளாடிமிர் புடின் 15 ஆண்டுகள் பணியாற்றினார்.
அவர் பதிவியில் இருக்கும் போது அமெரிக்கா நாட்டு சதியால் சோவியத் ஒன்றியம் பிளவு படுவதை அறிந்து. மன வருத்தத்தில் அந்த வேலையை விட்டுட்டு வெளியே வந்து உள்ளார். பின் அவரிடம் பணம் இல்லாமல் Taxi ஒட்டி நாட்களை கழித்து வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
சிரிது அளவு சிந்தித்து பாருங்கள் இன்று அவர் உலகத்தின் மிக சக்தி வாய்ந்த மனிதர். 30 வருடங்களுக்கு பின் அவர் சாதாரண மனிதராக இருந்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் :
பின் இவர் பள்ளியில் படித்த நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேச தொடங்கினார்.சோவியத் ஒன்றியம் உடைந்ததால் ரஷ்யா நாட்டிற்கு புதிய வணிகச் சட்டத்தை எழுத வேண்டியதாக இருந்தது.
அந்த சட்டத்தை புடின் கல்லூரி பேராசிரியரான அனடோலி சோப்சா தான் எழுதி கொண்டு இருந்தார். இதனால் தன் ல்லூரி பேராசிரியரான அனடோலியிடம்
புடின் உதவியாளராக சேர்ந்தார்.
நாட்கள் செல்ல செல்ல புடின் அரசியல் பற்றி இவரிடம் இருந்து கற்று கொண்டார். பின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சோப்சாக்கின் நகரத்துக்கு புடின்
தலைவர் ஆனார். அப்போது தான் புடின் ரஷ்யாவின் அரசியலை கற்பிக்க ஆரம்பித்தார்.
இவர் ஒரு நகரத்தின் தலைவராக இருக்கும் போதே சோவியத் யூனியன் இப்படி இருந்ததோ அதே போல ரஷ்யாயவை மாற்றுவேன் என்று சபதம் எடுத்தார்.
நேட்டோ :
புடின் ஆரம்ப காலத்தில் இருந்தே தன் எதிரியாக அமெரிக்காவை பார்த்தார். எங்கோ இருந்து கொண்டு சோவியத் யூனியனை துண்டாக்கிய அந்த நேட்டோவை அழிக்காமல் விடமாட்டேன் என்று அவர் சபதம் எடுத்தார்.
ரஷ்யாவின் பிரதமர் :
பின் புடின் பல தந்திரமான வழிகளை பயன் படுத்தி அரசியலில் முன்னேறி கொண்டே இருந்தார். அப்போது ரஷ்யா பிரதமராக இருந்தவர் பல ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு இருந்தார்.
அவர் எப்பொழுதும் குடித்து கொண்டே இருப்பாராம். அது மட்டும் இல்லாமல் அமெரிக்காவிடம் நெருக்கமாக இருந்தும் உள்ளார். பின் சரியான நேரத்தை எதிர் பார்த்து கொண்டு இருந்தார் புடின்.
காரணம் இவர் யார் என்று மக்களுக்கு தெரியாது. இவர் எதிர்பார்த்த நேரமும் வந்தது செச்சென் போர்ஸ் எனப்படும் அமைப்பு ரஷ்யாவில் எப்போதும் சண்டை
போட்டு கொண்டே இருக்கும். அதே போல ஒரு முறை நடந்தது அப்போது புடின் அந்த அமைப்பிடம் பேசி போரை நிறுத்தியுள்ளார்.
இதை பார்த்த ரஷ்யா மக்கள் இவர் தந்திரத்தை பார்த்து வியந்தனர். அப்போது மக்கள் செல்வாக்கு பெற்ற புடின் 1999 ஆண்டில் இருந்து 2022 இன்று வரை செல்வாக்காக இருக்கிறார்.
இவர் பதவி பெற்றவுடன் ரஷ்யா GDP பல மடங்கு அதிகம் ஆனது. சோவியத் யூனியன் இருக்கும் போது எப்படி இருந்ததோ அதே போல இவர் ரஷ்யாவை மாற்றினார்.
பல நாடுகளிடம் போர் :
இவர் இதனால் தான் ரஷ்யா சுற்றியுள்ள பல நாடுகளிடம் போர் புரிந்து அந்த நாட்டை ரஷ்யா வசம் எடுக்க துடிக்கிறார். ஆகையால் இப்போதும் உக்கிரேன் போன்ற நாடுகளிடம் போர் புரிகிறார்.
ஒரு பக்கம் இவர் ரஷ்யாவை சோவியத் யூனியன் போல் மாற்றுவேன் என்றாலும். அங்கு இருக்க பிடிக்காமல் தான் பல நாடுகள் பிரிந்தது. ஆனால் புடின் நாடோவல் தான் இந்த சதி நடந்தது என்று நம்புகிறார்.
குற்றச்சாட்டுகள் :
புடின் பல ஊழல்களை செய்து உள்ளதாக பழைய அரசியல் தலைவர் சொல்லியுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரு மலையை வீடாக மாற்றியுள்ளார் என்றும் கருத்து உள்ளது. இவருக்கு பல கோடி சொத்துக்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் புடின் பல பெண்களிடம் தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு :
புடின் சொத்து மதிப்பு 5 லட்சம் கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது.
குடும்பா வாழ்க்கை :
1984 ஆம் ஆண்டு விளாடிமிர் புடின் மற்றும் லியுட்மிலா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மரியா மற்றும் கத்யா என்று இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
30 வருடம் பின் விளாடிமிர் புடின் லியுட்மிலாயை விவாகரத்து செய்தார். பின் பல பெண்களை திருமணம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவரது குடும்ப வாழ்க்கை இன்றும் பலருக்கும் தெரியாத ரகசியமாக இருக்கிறது.