2021 மகா சிவராத்திரியில் செய்யவே கூடாத தவறுகள் என்ன தெரியுமா? – மகா சிவராத்திரி விரத முறை

வருகிற மகா சிவராத்திரி 2021 தினத்தில் நாம் எப்படி விரதம் இருந்து பூஜை செய்து வழிபட வேண்டும் எந்தெந்த விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

நான்கு ஜாமங்களில் செய்ய வேண்டிய பூஜை :

மகா சிவராத்திரி என்பது சிவனை நினைத்து அன்றைய தினம் முழுதும் விரதம் இருந்து நான்கு ஜாமங்களிலும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு சிவனின் திருவருளை பெறக்கூடிய அற்புதமான திருநாள்.

முதல் ஜாமம் செய்ய வேண்டியது :

பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம் செய்யவும், ரிக் வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமம் செய்ய வேண்டியது :

பால், தயிர், நெய் கலந்த ரவை அதனுடன் சர்க்கரை கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும். பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்த வேண்டும். பின்னர், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர்வேத பாராயணம் செய்யவும்.

மூன்றாம் ஜாமம் செய்ய வேண்டியது :

தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல், மல்லிகைப் பூக்களால் அலங்காரம், வில்வ இலைகளால் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம் செய்யவும்.

நான்காம் ஜாமம் செய்ய வேண்டியது:

கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்தல், நந்தியா வட்டை மலர் சாற்றி வழிபடுதல், அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேதம் பாராயணம் செய்யலாம்.

மகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத விஷேசங்கள் என்ன தெரியுமா? – படிக்க இங்கே கிளிக் செய்யுவும்

மகா சிவராத்திரியில் செய்யக்கூடாத விஷயங்கள் :

பொதுவாக நாம் சிவ ராத்திரி தினத்தில் சிவனை தரிசனம் செய்ய அருகில் உள்ள சிவாலங்களுக்கு செல்வது வழக்கம்.

அப்படி செல்லும் பக்தர்களுக்கு அவர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வரிசையில் நிற்பவர்களுக்குப் பலரும் அன்னதானம் கொடுப்பது வழக்கம்.

அன்னதானம் எல்லா தானங்களிலும் மிக முக்கிய உன்னத தானம். இருப்பினும், சிவ ராத்திரி வழிபாடு என்பது அன்று முழுவதும் விரதமிருந்து, உணவு, உறக்கத்தை துரந்து இறைவனை எண்ணி வழிபடக்கூடிய மிக அற்புத நாள்.

கோயிலில் அன்னதானம் வழங்குவது தவறில்லை. ஆனால் அதை வாங்கி உண்ணும் பக்தர்களின் விரதம் முறிவது அவர்களுக்கே தெரியாத விஷயமாக உள்ளது.

அனைவராலும் விரதம் இருக்க முடியாது என்பது நிதர்சனம். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவர்கள் உடல் நிலையைப் பொருத்து உணவு எடுத்துக் கொள்வது அவசியம் தான்.

ஆனால், அதைத் தவிர பலரும் இறைவனுக்காக விரதமிருந்து சிவனை வழிபட ஆலயங்களுக்கு செல்வதுண்டு.

மனிதர்களுக்கு மிக முக்கியமான இரண்டு விஷயங்களான உணவு, நல்ல தூக்கம். இவை இரண்டையும் விலக்கி சிவனுக்காக விரதமிருக்கக்கூடியது தான் இந்த நாளின் நோக்கமாகும்.

இந்த இரண்டையும் விலக்கினால், நம் ஐம்புலன்கள் தானாகவே அடங்கும். அதன் மூலம் இறையுணர்வு நாம் பெற முடியும். நினைத்த எண்ணங்கள் சித்தியாகும்.

சிவ ராத்திரி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை :

சிவ புராணம், கோளாறு பதிகம் படித்தல், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அதோடு நடராஜர் பத்து, பரமசிவ ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம்.

திருமந்திரம் படித்தலும், பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தல் மிக நல்லது.

மற்ற நாட்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தால் கிடைக்கும் பலனை காட்டிலும், சிவ ராத்திரி தினத்தில் உச்சரிக்க நூறு மடங்கு அருட்காட்சம் கிடைக்கும்.

சிவ ராத்திரி அன்று மாலை 6 மணிக்குள் குளித்து சிவாலயத்திற்குச் செல்லுங்கள்.

பணிக்கு செல்பவர்கள் பணி முடித்து திரும்பியதும் குளித்து கோயிலுக்கு சென்று, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து சிவ சிந்தனையில் தியானம் செய்தாலே போதுமானது.

சிவ நாமத்தை உச்சரிப்பது நல்லது.

Leave a Comment