குதி கால் வலி பித்த வெடிப்பு பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும்!

கால் சருமத்தின் உலர்ந்த தன்மை, நீண்ட நேரம் நிற்பது, நடப்பது, தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல், குதிக்கால் மூடப்படாத செருப்புகளை அணிதல் போன்றவை பித்த வெடிப்பின் முக்கிய காரணங்களாகும்.

நாம் அருந்தும் நீரின் அளவு குறைதல், குளிரான கால நிலை, தைரொயிட் சுரப்பி நோய்கள், நீரிழிவு நோய் போன்றவையும் உங்கள் கால்களில் பித்த வெடிப்பை ஏற்படுத்தும்.

பித்த வெடிப்பை கட்டுப்படுத்த அல்லது முற்றாக குணமாக்க நீங்கள் மென்மைத் தன்மையைக் கொடுக்கும் காலணிகளை கால்களை மூடக்கூடிய விதத்தில் சரியாக அணிய வேண்டும்.

நாள் தோறும் போதுமான அளவு நீர் அருந்துதல் வேண்டும். கோடை களங்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக உடலில் உள்ள நீரின் அளவு குறையும். அதை ஈடு செய்ய அதிக அளவு நீர் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

படுக்கைக்குப் செல்லும் முன் கால்களைப் குளிர்ந்த நீரினால் கழுவி நன்றாகத் துடைத்து சிறிதளவு எண்ணெய் அல்லது ஈரப்பதம் தரக்கூடிய கிறீம் வகைகளைப் பூசிக்கொண்டு படுக்கலாம்.

நீங்கள் உடல் எடை கூடியவர் எனில் உடல் நிறையைக் குறைக்கும் வழிமுறைகளைக் கையாளவும்.

முழுமையான வழிமுறைகளை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பாருங்க.

Leave a Comment