fbpx

பெண்கள் எங்கு குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா?

பெண்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய சாத்திர குறிப்புகளைப் பின்பற்றி நடந்தால் அது அந்த பெண்ணுக்கும், அவள் சார்ந்த குடும்பத்திற்கும் சுப மங்கலம் உண்டாக்கும்.

பெண்கள் குங்குமத்தை திருமாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி ஆகிய மூன்று இடங்களில் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும் .இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.

குங்குமப் பொட்டு வைத்தாலே அது உடலுக்கு மிகவும் நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி போன்றவற்றை அணியலாம். நூலாகிய தாலி சரட்டில் பஞ்ச பூத சக்திகள் அதிகம் உள்ளது.

தாலி என்பது மிகவும் மங்கலமான பொருள். மற்ற அணிகலன்களை போல் தினமும் அதை கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் மிகப்பெரிய தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.

பெண்கள் காலையில் சமைக்க அடுப்பு பற்ற வைக்கும் போது அக்னி பகவானை வணங்கி, இன்று சமைக்கும் உணவை அனைவரும் உண்டு, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும்.

இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம் தெரியுமா?

காலையில் 9 மணிக்குள் அரச மரத்தை வலம் வர வேண்டும். மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது.

கோயிலுக்கு கொண்டு செல்லக்கூடிய எண்ணெய் கோயில் விளக்கில் தான் ஊற்ற வேண்டும். மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக் கூடாது.

பெண்கள் முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது. முந்தானை ஆடினால் குடும்பம் ஆடி விடும் என்பார்கள்.

தெற்கே பார்த்து நின்று கோலம் போடக்கூடாது. கிழக்கு முகமாக நின்று கோலம் போடவும்.

பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும் போது இடது கைக்கும், வலது கைக்கும் இடையே முந்தானை துணையை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.

பெண்கள் மஞ்சள் பூசி குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.