இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம் தெரியுமா?

மனிதனுக்குத் தேவையான முக்கியமான விஷயம் உறக்கம். உறக்கம் ஒரு மனிதனின் உடல் புத்துணர்ச்சி மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடியது.

அப்படிப்பட்ட உறக்கத்தின் போது கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை கெடுப்பது உகந்ததல்ல.

மனிதனுக்குத் தேவையான அடிப்படையான விஷயம், உணவு, உடை, இருப்பிடம். பலருக்கு இந்த அடிப்படைத் தேவைகள் சிறப்பாக நிறைவேறினாலும், பலருக்கும் கிடைக்காத வரமாக இருப்பது உறக்கம்.

அப்படியே தூக்கம் வந்தாலும் சிலர் அடிக்கடி வரக்கூடிய கெட்ட கனவால் பாதிக்கப்படுவதுண்டு.

என்ன தான் தூங்கி எழுந்தாலும், அந்த தூக்கத்தால் முழு திருப்தி அடைய முடியாத, நல்ல உடல் புத்துணர்ச்சி அற்ற நிலை கெட்ட கனவுகளால் ஏற்படுவதுண்டு.

2021 மகா சிவராத்திரியில் செய்யவே கூடாத தவறுகள் என்ன தெரியுமா? – மகா சிவராத்திரி விரத முறை

மருத்துவரை அணுகினால், தூக்கம் வர மருந்து தர முடியும், ஆனால் உங்களைத் துரத்தும் கெட்ட கனவுகள் விட்டுப்போகாமல் இருப்பது கொடுமை.

அப்படி மோசமான கெட்ட கனவுகள் நமக்கு வராமல் இருக்க, நாம் இரவு படுப்பதற்கு முன், படுக்கையில் அமர்ந்து கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை உச்சரிப்பதால், சில நாட்களில் கெட்ட கனவுகள் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஓம் பிரம்மாயை நமஹ;

ஓம் விஷ்ணுவை நமஹ;

ஓம் யமாயை நமஹ;

ஓம் காளியை நமஹ;

கருட மந்திரம் :

சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்.

இந்த மந்திரத்தை உறங்கும் முன் மூன்று முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. காலையில் புத்துணர்ச்சியுடன் எழலாம்.

கெட்ட கனவு பரிகார மந்திரம் :
ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ

Leave a Comment