வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு – V.O.Chidambaram History in Tamil

V.O.Chidambaram Pillai History in Tamil

தூத்துக்குடி என்றாலே பலருக்கும் நினைவில் வருவது முத்துக்கள் தான். அந்த முத்துக்களில் ஒன்றாக பிறந்தவர் தான் வ.உ. சிதம்பரனார். அவர் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிப்பில் பார்க்கலாம் V.O.Chidambaram History in Tamil. பிறப்பு மற்றும் கல்வி : வ.உ. சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஓட்டப்பிடாரம் என்னும் இடத்தில் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் உலகநாதர் – பரமாயி அம்மாள் என்ற  தம்பதிக்கு மகனாக பிறந்தார். வ.உ.சி – யின்  தந்தை உலகநாதர், … Read more

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு – Swami Vivekananda Tamil

swami vivekananda tamil

மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை சத்தமாக இந்த உலகிற்கு சொன்னவர், இந்து மதத்திற்கு புத்தெழுச்சி கொடுத்தவர், அமெரிக்கா வரை சென்று சிக்காகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தை பெற்றவர் Swami Vivekananda Tamil. அந்நிய நாட்டின் அடிமை தனத்தில் இருந்து நாடு விடுதலை பெற சிங்கம் போல் முழக்கமிட்டவர், இந்த பாரதத்தின் ஆன்மாவை தட்டி எழுப்பிய விவேகானந்தர் பற்றி இந்த தொகுப்பில்  விரிவாக பார்க்கலாம். பிறப்பு: சுவாமி விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி … Read more

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு – Veerapandiya Kattabomman History in Tamil

veerapandiya kattabomman

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஒட்டப்பிடாரமாக இருக்கும் இடம் தான் அப்போது வீர பாண்டிய புறமாக இருந்தது. அந்த பகுதியில் பிறந்ததாலேயே கட்ட பொம்மனுக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன் என பெயர் வந்தது. பூர்வீகம் : கட்ட பொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் தெலுங்கில் கெட்டி பொம்மு என்றால் வீரம் மிகுந்தவன் என்று அர்த்தம். நாளடைவில் அந்த பெயர் தான் மருவி கட்ட பொம்மன் என்று ஆனதாக சொல்லப்படுகிறது. கட்ட பொம்மனின் முன்னோர்கள் … Read more

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு – Bharathidasan Life History in Tamil

bharathidasan tamil

தென்னிந்தியாவின் புதுவையில் “கனகசுப்புரத்தினமாக” பிறந்து தமிழ் இலக்கிய, இலக்கணங்களை கற்று தேர்ந்து, பின் பாரதியார் மீது கொண்ட பற்றால் “பாரதி தாசனாகிய” கனகசுப்புரத்தினம் பற்றி இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம் Bharathidasan Tamil. பிறப்பு மற்றும் கல்வி : பாவேந்தர் பாரதிதாசன் தமிழகத்தை அடுத்துள்ள புதுச்சேரியில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி கனகசபை முதலியாருக்கு – இலக்குமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் “சுப்புரத்தினம்”. அவரது தந்தை பெயரின் முதல் பாதியை … Read more

சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்

independence day speech tamil

இந்திய சுதந்திர தினம் ( Independence Day ) சிறப்பு கட்டுரை 200 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மண்ணிலேயே அடிமையாக வாழ்ந்த ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர காற்றை சுவாசித்த நாள் ஆகஸ்ட் 15, 1947. ஆயிரம் ஆயிரம் போராட்டங்கள், லட்சக்கணக்கனாக உயிர்களை விலையாக கொடுத்து வாங்கப்பட்டது இந்த சுதந்திரம், இதன் நோக்கத்தையும், புனிதத்தையும்  சரியாக பயன்படுத்துவது இந்தியராகிய நம் ஒவ்வொருவரின் முதல் கடமை Independence Day Speech Tamil. தொடக்க கால இந்தியா: இந்திய நாட்டின் எல்லை … Read more

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு – Thiruvalluvar History in Tamil

thiruvalluvar in tamil

இனம், மதம், மொழி, தேசம் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாம் திருக்குறளை இயற்றி தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்தவர் திருவள்ளுவர். அவர் பற்றிய அறிய பல தகவல்களை இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம்…. காலம்: திருவள்ளுவர் வாழ்ந்த காலம், வாழ்ந்த இடம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனாலும் அவர் தற்போதைய சென்னை மயிலாப்பூர் பகுதியில் வாழ்ந்ததாகவும், கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்ததாகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி எனவும் … Read more

பென்சிலின் வாழ்க்கை – தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை

tamil quotes

கடையில் இருந்து வாங்கிவரப்பட்ட பென்சில் சில நிமிடம் கைகளில் கொஞ்சி விளையாடும். அலங்கரிக்கப்படும், பாதுகாக்கப்படும் ,அடுத்தவரிடம் காட்டி பொறாமை கொள்ள செய்யும். அடுத்த நிமிடமே தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்.பக்கங்கள் சீவப்பட்டு எதிர்கால பயன்பாட்டிற்காக தயார் செய்யப்படும்.பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வலித்தாலும் சுகமாக இருந்தாலும் மறுப்பு சொல்லாமல் கடக்க வேண்டிய காலம் அது. வலியுடன் வெளிவரும் எழுத்தாணி, சில தேவையில்லாத கிறுக்கல்களை சந்திக்கும்.  நான் பயனுள்ள எழுத்தாணி என்னை ஏன் இப்படி தேவையில்லாத கிறுக்கல்களுக்கு ஆளாக்குகிறீர்கள் என்னை வைத்து … Read more

Mahatma Gandhi in Tamil – தேச தந்தை மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாறு

Mahatma Gandhi

Mahatma Gandhi in Tamil – இந்தியாவின் தேச தந்தை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் என்ன பேசப்பட வேண்டும் என்பதை இந்தியாவிலிருந்து தீர்மானித்தவர் மகாத்மா காந்தி. அவரின் வாழ்க்கை பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்…… பிறப்பு மற்றும் இளமை பருவம்: மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் … Read more

Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு

bharathiyar in tamil

முறுக்கு மீசையுடன் முண்டாசு கட்டிக்கொண்டு “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று உணர்ச்சி பொங்க முழங்கிய கவிஞரை பார்த்து மிரண்டு நின்றது பிரிட்டிஷ்  அரசாங்கம் – Bharathiyar in Tamil. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பாரதியின் பேனாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறின. ஓர் கவிஞனாய் இருந்து கொண்டு தன் பாடல் வரிகள் மூலம் மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி பிரிட்டிஷ் ஆதிக்கத்தை மிரள செய்த மகாகவி பாரதி பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் – பிறப்பு … Read more

Kamaraj History in Tamil – கருப்பு காந்தி காமராஜர் வாழ்க்கை வரலாறு

kamarajar tamil

17000-கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த காமராஜர் என்று போற்றப்பட்ட காமராஜர் ஆட்சி நிர்வாகத்திலும் தலை சிறந்தவர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவரது ஆட்சி காலத்தில் தான் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம், கிண்டி டெலி பிரின்டர் தொழிற்சாலை, சேலம் இரும்பு எஃகு ஆலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்க … Read more