சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஒட்டப்பிடாரமாக இருக்கும் இடம் தான் அப்போது வீர பாண்டிய புறமாக இருந்தது. அந்த பகுதியில் பிறந்ததாலேயே கட்ட பொம்மனுக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன் என பெயர் வந்தது.
பூர்வீகம் :
கட்ட பொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் தெலுங்கில் கெட்டி பொம்மு என்றால் வீரம் மிகுந்தவன் என்று அர்த்தம். நாளடைவில் அந்த பெயர் தான் மருவி கட்ட பொம்மன் என்று ஆனதாக சொல்லப்படுகிறது.
கட்ட பொம்மனின் முன்னோர்கள் விஜய நகர பேரரசை ஆண்டு வந்தவர்கள். இப்போது உள்ள தமிழ் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியர்கள் மீது முகமதியர்கள் படை எடுத்து வந்து நாட்டை கைப்பற்றும் நிலையில் கட்ட பொம்மனின் முன்னோர்களிடம் உதவி கரம் கேட்டனர் தமிழக மன்னர்கள்.
பிறகு விஜய நகர போர் படை வந்து மீண்டும் நாட்டை மீட்டு கொடுத்தற்காகவும் அவர்களின் வீரத்தை பாராட்டும் விதமாகவும் அவர்களுக்கு பாஞ்ஜலம் குறிச்சியை பரிசாக கொடுத்தனர். அப்போது முதல் தான் கட்ட பொம்முவின் வம்சம் பாஞ்சாலம் குறிச்சியை ஆட்சி செய்து வந்தனர் .
பிறப்பு மற்றும் குடும்பம்:
1760-ஆம் ஆண்டு அனைவராலும் வீரபாண்டிய கட்ட பொம்மனாக அறியப்படும் கட்ட பொம்மன் பிறந்தார். அவருக்கு இரண்டு உடன் பிறந்த சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உண்டு. ஜக்கம்மாள் என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட கட்டபொம்மனுக்கு வாரிசுகள் ஏதும் கிடையாது.
அரசனாக அரியணை ஏறுதல் :
1990-ஆம் ஆண்டு தனது முப்பதாவது வயதில் அரசனாக முடி சூட்ட பட்ட கட்ட பொம்மன், வெறும் ஒன்பது ஆண்டுகள், எட்டு மாதம், பதினான்கு நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.
அவர் பதவி ஏற்ற கால கட்டத்தில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வணிகம் செய்வதாக நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை அடிமை படுத்தி கொண்டு இருந்தார்கள்.
ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி :
இந்திய மன்னர்களுக்கு நவீன போர் கருவிகளை விற்பனை செய்து பெரும் தொகையை பெற்று வந்தனர் ஆங்கிலேயர்கள். பல மன்னர்கள் எதிரி நாட்டிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேறு வழி இல்லாமல் போதிய பணம் இல்லாமல் இருந்தாலும், கடன் பெற்றாவது நவீன கருவிகளை ஆங்கிலேயர்களிடம் இருந்து வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்க பட்டனர்.
அப்படி ஆங்கிலேயர்களின் வலையில் வீழ்ந்தவர்தான் ஆற்காடு நவாப். அவரின் கட்டுப்பாட்டில் தான் அப்போதைய தமிழ்நாடு இருந்தது.
ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களிடம் இருந்து கடனுக்கு நிறைய ஆயுதங்கள் வாங்கி இருந்ததால் கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் இருந்தார்.
அவருக்கு கீழ் இருந்த சிற்றரசர்கள் சரியாக வரிகட்டாமல் இருந்தனர், வரியை முறையாக வசூல் செய்யும் திறமையும் அப்போது நவாபிற்கு இல்லாமல் போனது.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், நவாப்பிடம் நய வஞ்ஜகமாக பேசி தாங்களே வரி வசூல் செய்து கடனை ஈடு கட்டி கொள்வதாக ஓப்பந்தம் செய்து கொண்டனர். வேறு வழி இல்லாமல் நவாப்பும் அதற்க்கு சம்மதித்து விட்டார்.
இதுதான் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மோதல் உருவாக முதல் காரணமாக அமைந்தது.
இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு தமிழ், வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு தமிழ், veerapandiya kattabomman real history in tamil, veerapandiya kattabomman history in tamil, veerapandiya kattabomman essay, veerapandiya kattabomman family, veerapandiya kattabomman speech, history of veerapandiya kattabomman, veerapandiya kattabomman tamil, veerapandiya kattabomman in tamil.
ஆங்கிலேயர்களுடனான மோதல் :
வரி வசூல் செய்யும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் இந்திய சிற்றரசர்களிடம் வரி வசூல் செய்ய ஜாக்சன் துரை என்ற அதிகாரியை நியமித்தனர். இருந்த ஜாக்சன் துரை விவேகம் மிக்க ஆளுமையாக இருந்தார், எல்லா சிற்றரசர்களையும் கீழ் படிய செய்வதில் வெற்றியும் கண்டார்.
ஆனால் அவரது வீரம் வீர பாண்டிய கட்ட பொம்மனிடம் விலை போக வில்லை.
வணிகத்திற்காக இங்கு வந்த ஆங்கிலேயர்கள் பின்னாளில் இங்கு இருந்த அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி வரி வசூல் செய்யும் உரிமையை பெற்று ஆட்சி அமைப்பில் தலையிட்டனர்.
இதனால் அங்கும் இங்கும் சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்து சுதந்திர குரலை அன்றே எழுப்பினர் அதனால் முதலில் அவர்களை ஒடுக்குவதில் ஆங்கிலேயர்கள் குறியாக இருந்தனர்.
கட்டபொம்மன் – ஜாக்சன் துரை :
என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் கட்டபொம்மன் உறுதியாக இருந்தார். வரி தர மறுத்த கட்ட பொம்மனிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த ஜாக்சன் துரை சென்று வரி கேட்ட பொது, நான் ஏன் உனக்கு வரி தர வேண்டும் என்று வீர வசனம் பேசி அவமதித்து விட்டார்.
இதனால் கடும் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் கட்ட பொம்மனை பழி தீர்க்க துடித்தனர்.
அதே சமயம் மற்ற நாட்டு அரசர்கள் வீர பாண்டிய கட்ட பொம்மனின் வீரத்தை எண்ணி பெருமை பட்டனர். ஆனால் அவருக்கு ஆதரவு தர முன்வரவில்லை, காரணம் ஆங்கிலேயர்களை எதிர்த்து கொண்டு வாழ முடியாது என்பதை உணர்ந்து இருந்தனர்.
அதே சமயம் மைசூர் சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு பெரும் தலைவலியாக இருத்தலால் அவரை கொன்று விட்டு அடுத்ததாக வரிகட்டாத குற்றத்துக்காக வீரபாண்டியனை கைது செய்ய முடிவு செய்தனர்.
ஆங்கிலேயர்களுடனான போர் :
1797-ஆம் ஆண்டு பெரும் படையை திரட்டி கொண்டு முதல் முறையாக பாஞ்ஜலம் குறிச்சியை நோக்கி படை எடுத்து சென்ற ஆங்கிலேயர்கள், கோட்டையை தகர்க்க முடியாததால் தோல்வி அடைந்து பின் வாங்கினர்.
அதன் பிறகு மீண்டும் பேச்சு வார்த்தைக்காக வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கு அழைப்பு விடுத்து அவமான படுத்த நினைத்து பல இடங்களுக்கு சந்திக்க வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தனர் ஆங்கிலேயர்கள்.
இறுதியில் 1978 செப்டம்பர் 10-ஆம் தேதி ராமநாதபுரத்தில் சந்தித்து தந்திரமாக வீர பாண்டிய கட்ட பொம்மனை கைது செய்ய பார்த்தது ஆங்கிலேய படை. அதில் இருந்து லாவகமாக தப்பித்து பாஞ்ஜலம் குறிச்சி வந்து சேர்ந்தார் கட்ட பொம்மன்.
மீண்டும் சரியாக ஒரு வருடம் கழித்து பாஞ்சாலங்குறிச்சியை எப்படியும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்று பெரும் படைகளை திரட்டி கொண்டு பிரங்கி போன்ற நவீன ஆயுதங்களுடன் கோட்டையை சுற்றி வளைத்தனர்.
கடும் போர் நடைபெற்றது பல ஆங்கிலேயர்கள் இறந்த போதும் பிராங்கிகளுக்கு முன்னாள் கோட்டையால் தாக்கு பிடிக்க முடிய வில்லை.
கோட்டை எப்படியும் வீழ்ந்து விடும் என்பதை உணர்ந்த வீர பாண்டிய கட்ட பொம்மன் அங்கு இருந்து தப்பித்து அருகில் இருந்த விஜயரகுநாத தொண்டைமான் என்ற அரசரிடம் அடைக்கலம் புகுந்தார்.
ஆனால் அந்த மன்னரோ ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கட்ட பொம்மனை காட்டி கொடுத்துவிட்டார்.
மரண தண்டனை :
சூழ்ச்சியால் கட்டபொம்மனை கைது செய்த ஆங்கிலேயர்கள் தங்களை எதிர்த்து போர் புரிந்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.
அதன்படி 1799 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி கட்ட பொம்மன் திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
இறுதியில் தூக்கு மேடையை முத்தமிட்ட சமயத்திலும், வீரம் குறையாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்து பேசி, மண்டியிடாமல் வீர மரணமடைந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன், veerapandiya kattabomman history in tamil.
கட்ட பொம்மன் போன்ற வீரம் மிக்க இந்திய மன்னர்கள் பலரை நேரடியாக போரிட்டு வீழ்த்த முடியாத ஆங்கிலேயர்கள் முதுகில் குத்தியே வீழ்த்தினர்…..