திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு – Thiruvalluvar History in Tamil

thiruvalluvar in tamil

இனம், மதம், மொழி, தேசம் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாம் திருக்குறளை இயற்றி தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்தவர் திருவள்ளுவர். அவர் பற்றிய அறிய பல தகவல்களை இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம்….

காலம்:

திருவள்ளுவர் வாழ்ந்த காலம், வாழ்ந்த இடம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனாலும் அவர் தற்போதைய சென்னை மயிலாப்பூர் பகுதியில் வாழ்ந்ததாகவும், கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்ததாகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி எனவும் வள்ளுவரின் கவி புலமையை கண்டு வியந்து மார்கசெயன் என்பவர் தன் புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணமுடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

திருக்குறள் பெயர் வர காரணம்:

திருவள்ளுவர் குறளி என்னும் இனத்தை சார்ந்தவர் என்றும் அதனால் அவர் இயற்றிய நூலுக்கு குறளி என பெயர் வந்ததாகவும் பின்னாளில் அதுவே மருவி குறள் என ஆனதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மரியாதையை குறிப்பதால் அது திருக்குறள் என மறுவியதாகவும் கூறப்படுகிறது.

சாதி மறுப்பு:

திருவள்ளுவர் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ சாதியையோ சார்ந்தவர் அல்ல. அதனால் தான் கடவுளை பற்றி பல குறள்கள் எழுதியும் எந்த ஒரு குறிப்பிட்ட கடவுள் சார்ந்து குறள்கள் ஏதும் இயற்றப்படவில்லை. மேலும் சமூகத்தில் நிலவும் சாதி மத வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதை பல குறள்களில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

திருவள்ளுவர் இறப்பு, திருவள்ளுவர் திருக்குறள், திருவள்ளுவர் குறிப்பு in tamil, திருவள்ளுவர் வரலாறு தமிழில், திருவள்ளுவர் வரலாறு தமிழ், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது, thiruvalluvar in tamil wiki, thiruvalluvar katturai in tamil, thiruvalluvar death date, thiruvalluvar books, thiruvalluvar wife name, thiruvalluvar poems, thiruvalluvar other names in tamil.

சமயமும் திருவள்ளுவரும்:

திருக்குறளில் எந்த ஒரு குறிப்பிட்ட கடவுள் குறித்தும் கருத்துக்கள் ஏதும் சொல்லப்படவில்லை. மேலும் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள அற நெறிகள் சமண சித்தாந்தம் சார்ந்து உள்ளதால் வள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்க கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சைவமும் திருவள்ளுவரும்:

வள்ளுவரை திருவள்ளுவநாயனார் என்றும் இவர் ஒரு சைவர் என்றும், இவர் இயற்றிய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் கருதுகின்றனர். வள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் யாவும் சைவ சித்தாந்தத்தை விளக்குவதாக திருவாவடுதுறை ஆதீனம் வாலையானந்த அடிகள் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் இயற்றிய பிற நூல்கள்:

திருக்குறள் தவிர மருத்துவம் பற்றிய சில நூல்களையும் திருவள்ளுவர் இயற்றியுள்ளார். “ஞானவெட்டியான்”, “பஞ்ச ரத்னம்” இரண்டும் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூல்களாகும். இது தவிர “சுந்தர சேகரம்” என்னும் முக்கியமான ஜோதிட நூலையும் இயற்றியுள்ளார்.

திருக்குறள் பற்றிய சில முக்கிய தகவல்கள்:

திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குரள்களையும் கொண்ட நூல். திருக்குறள், அ-என்னும் எழுத்தில் தொடங்கி ன-என்னும் எழுத்தில் முடிகிறது. திருக்குறள் 14000 சொற்களையும் 42,194 எழுத்துக்களையும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 247 தமிழ் எழுத்துக்களில் 37 எழுத்துக்கள் மட்டும் திருக்குறளில் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளில் பயன்படுத்த படாத ஒரே ஒரு உயிரெழுத்து ஒள.

திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட இரு மலர்கள் குவளை மற்றும் அனிச்சம், ஒரே பழம் நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட இரு மரங்கள் பனை, மூங்கில், ஒரே விதை குன்றிமணி.

நினைவு சின்னங்கள் மற்றும் அரசு மரியாதை:

தமிழக அரசு திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயிர சிலையை முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் என்ற மண்டபம் அமைக்கப்பட்டு அவர் இயற்றிய 1330 குறள்களும் இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவர் பிறந்த இடமாக குறிப்பிடப்படும் சென்னை மயிலாப்பூரில் “திருவள்ளுவர் திருக்கோயில்” என்ற ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

Leave a Comment