பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு – Bharathidasan Life History in Tamil

தென்னிந்தியாவின் புதுவையில் “கனகசுப்புரத்தினமாக” பிறந்து தமிழ் இலக்கிய, இலக்கணங்களை கற்று தேர்ந்து, பின் பாரதியார் மீது கொண்ட பற்றால் “பாரதி தாசனாகிய” கனகசுப்புரத்தினம் பற்றி இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம் Bharathidasan Tamil.

பிறப்பு மற்றும் கல்வி :

பாவேந்தர் பாரதிதாசன் தமிழகத்தை அடுத்துள்ள புதுச்சேரியில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி கனகசபை முதலியாருக்கு – இலக்குமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் “சுப்புரத்தினம்”. அவரது தந்தை பெயரின் முதல் பாதியை சேர்த்து “கனகசுப்புரத்தினம்” என்று அழைக்கப்பட்டார்.

சிறுவயது முதலே தமிழ் மொழி மீது பற்றுடையவராக இருந்த பாரதிதாசன் , அப்போதய புதுவை பிரெஞ்சுக்காரர்களின் பிடியில் இருந்ததால் ஒரு பிரஞ்சு பள்ளியில் சேர்ந்து படித்தாகவேண்டிய கட்டாயம் உருவானது. தொடக்க கல்வியை திருப்புளிசாமி ஐய்யாவிடம் கற்ற அவர் சில தமிழ் அறிஞர்களின் உதவியால் தமிழ் பள்ளியில் சேர்ந்தார். அங்கு தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்ற அவர் சைவ சித்தாந்த வேத நூல்களையும் கற்று தேர்ந்தார்.

சிறு வயது முதலே அழகான பாடல்கள் எழுதும் திறன் பெற்றிருந்த பாரதிதாசன், தன் பதினாறாவது வயதில் புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார். அங்கு சீரிய முறையில் தன் தமிழறிவை விரிவுபடுத்தியவர் மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலை பட்டத்தை இரண்டே ஆண்டுகளில் கற்று தேர்ந்தார். கல்லூரி படிப்பு முடித்த உடன் 1919-இல் காரைக்காலில் உள்ள அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார்.

திருமண வழக்கை :

பாரதிதாசன் அவர்கள் பழநி அம்மையார் என்பவரை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மன்னர்மன்னன் என்ற ஒரு மகனும் சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மூன்று மகள்களும் பிறந்தனர்.

கனகசுப்புரத்தினம் “பாரதிதாசன்” ஆன கதை :

ஒரு துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் அதே துறையில் சிறந்து விளங்குபவர்கள் மீது பற்று கொள்வது இயல்பு. அதே போல்தான் தமிழ் மீது அதீத பற்று கொண்ட கனகசுப்புரத்தினமும் மூத்த கவி பாரதியரால் ஈர்க்கப்பட்டார்.

பாரதியாரை சந்தித்து தமிழ் மீதான தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு அவரின் பாராட்டையும், அன்பையும் பெற்றார். அன்று முதல் தன் பெற்றோர் வைத்த பெயரான “கனகசுப்புரத்தினம்” என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

பாரதிதாசன் வரலாறு தமிழ், பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு கட்டுரை, பாரதிதாசன் தந்தை பெயர், பாரதிதாசன் குறிப்பு in tamil, bharathidasan in tamil language, bharathidasan books, bharathidasan kurippu in tamil language, bharathidasan asiriyar kurippu in tamil, bharathidasan parents in tamil, bharathidasan patri katturai in tamil, bharathidasan life history tamil, history of bharathidasan, bharathidasan history in tamil, bharathidasan history tamil.

தொழில்:

பாரதிதாசன் என பெயரை மாற்றிக்கொண்ட பிறகு அந்த பெயரிலேயே தன் படைப்புகளை வெளியிட தொடங்கினார். திராவிட இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்ட இவர் , தந்தை பெரியார் போன்ற அரசியல் தலைவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர். அதற்காக பலமுறை சிறையும் சென்றார்.

அவரது தமிழ் இலக்கிய நடை கண்டு வியந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் அவருக்கு கதை வசனம் எழுத வாய்ப்புகள் வழங்கினர். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் 1954-இல் நடைபெற்ற புதுச்சேரி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால் 1960-இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பாரதிதாசன் படைப்புகள்:

கடவுள் மறுப்பு , சாதி ஒழிப்பு கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட இவர் அது சார்ந்து பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். “எதிர்பாராத முத்தம்”, “குடும்ப விளக்கு”, “இசையமுது”, “தமிழ் இயக்கம்”, “அழகின் சிரிப்பு”, “தமிழச்சியின் கத்தி”, “பாண்டியன் பரிசு”, “பெண்கள் விடுதலை” போன்றவை இவரது படைப்புகளில் மிக சிறந்ததாக கருதப்படுகின்றன.

விருதுகள் மற்றும் பாராட்டுகள்:

பாரதிதாசனுக்கு அறிஞர் அண்ணா “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் பெரியார் “புரட்சி கவிஞர்” என்ற பட்டத்தையும் வழங்கினார். தமிழக அரசாங்கம் அவர் பெயரில் “பாரதிதாசன் பல்கலைக்கழகம்” என்ற மாநில பல்கலைக்கழகம் ஒன்றை திருச்சியில் நிறுவியுள்ளது. மேலும் அவரது நினைவை போற்றும் வகையில்  ஆண்டு தோறும் தமிழில் சிறந்து விளங்குபவர் ஒருவருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது.

1970-ஆம் ஆண்டு அவரது மரணத்திற்கு பின் அவரது படைப்பான பிசிராந்தையார்’ நாடகத்திற்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது. 2001-இல் சென்னை தபால் துறையின் சார்பாக பாரதிதாசன் நினைவு அஞ்சல் தலை ஒன்றும் வெளியிடப்பட்டது Bharathidasan Tamil.

இறப்பு :

தன் படைப்பாற்றல் மூலம் தமிழுக்கு பல வழிகளில் தொண்டாற்றிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

Leave a Comment