நாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்?

அனைவரும் காலை விடியும் போது அந்த நாள் நல்ல இனிமையான மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என்பதையே விரும்புகின்றோம்.

காலையில் எழுந்தவுடன் யாரை பார்க்க வேண்டும் எதைப் பார்க்க வேண்டும் என்பது ஒரு சந்தேகமாகவே இருக்கிறது.

காலையில் முதலில் பார்க்கும் நிகழ்வை நாம் விழுப்பு தரிசனம் என்று கூறலாம். காலையில் எழுந்து நாம் முதலில் பார்க்கும் காட்சியை பொருத்தே அந்த நாளும் அமைகிறது.

ஏனெனில் எதைப் பார்க்கிறோமோ அந்த ஞாபகம் தான் அந்த நாள் முழுவதும் இருக்கும்.

இதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்!

அதனால் தான் நம் எழுந்தவுடன் சிரமமில்லாமல் விழிப்பு தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நம் உள்ளங்கையை பார்க்கலாம் என நம் முன்னோர்கள் கூறினார்கள்.

ஏனெனில் நம் உள்ளங்கையில் மகாலட்சுமி குடியிருப்பதாக நம் முன்னோர்கள் நம்பினார்கள்.

காலையில் எழுந்ததும் மகாலட்சுமி நினைத்துக்கொண்டு இரு கைகளையும் ஒன்றாக இணைத்து வைத்து பின் உள்ளங்கையை பார்த்தால் அந்த நாள் நல்ல இனிமையான வெற்றிகரமான மகிழ்ச்சியான நாளாக அமையும்.

அதைத் தவிர்த்து நம் வேறு என்ன காட்சிகளையெல்லாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கலாம் என்றால் பூரண கும்பம், கோவில் மணி, பசுமாடு, கன்று குட்டி, நல்ல இயற்கை காட்சிகள், மலர்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

இதை தவிர மங்கலம் பொருந்திய பொருட்கள் அதாவது மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி போன்ற மங்கலம் நிறைந்த அனைத்து விஷயங்களையும் காலையில் எழுந்தவுடன் பார்த்தால் அந்த நாள் நல்ல இனிமையான நாளாகவும் வெற்றிகரமான நாளாகவும் அமையும்.

மேலும் நமக்கு இஷ்டமான கடவுள்களின் முகங்களையும் கணவன் மனைவியின் முகத்திலும் மனைவி கணவனின் முகத்திலும் குழந்தைகள் பெற்றோர் முகத்திலும் பெற்றோர் குழந்தைகள் முகத்திலும் விழித்தால் அந்த நாள் மிகவும் சிறப்பானதாக அமையும்.

Leave a Comment