Tamil Actor Surya History in Tamil – நடிகர் சூர்யா வாழ்க்கை வரலாறு

சினிமா துறையில் முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் சினிமாவில் வந்து தன் முயற்சியால் ,ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான திறமையை குறுகிய காலகட்டத்தில் வளர்த்து கொண்டு, இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளவர் தான்  நடிகர் சூர்யா. 

இவரது அற்புதமான நடிப்புத்திறனால் ரசிகர்களின் மனதில் இடம்பெற்று நிற்கும் அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

23 ஜூலை 1975 ஆம் ஆண்டு சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக சூர்யா சென்னையில் பிறந்தார். இவருக்கு கார்த்தி என்று ஒரு தம்பியும், பிருந்தா என்ற சகோதரியும் உள்ளனர்.

இளமைப் பருவம் :

சென்னையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும் படிப்பை ஆரம்பித்து பின்னர், செயின்ட் பீட்ஸ் பள்ளியிலும் சேர்ந்தார். பின்னர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார்.

இவருக்கு சினிமா துறையில் ஆர்வம் இல்லாததால் ஆடை தயாரிப்புத் தொழிற்துறை மீது மிகுந்த ஆர்வமுடையவராகக் இருந்தார், ஒரு முன்னணி நடிகரின் மகனென்ற தோற்றம் இல்லாமல் ஒரு தொழிற்சாலையில் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்தார்.

ஆறு மாதங்கள் அங்கு பணியாற்றிய அவரை, இயக்குனர் வசந்த், அவரின் அடுத்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யவே, சினிமா துறைக்கு வந்தார். அதுவும் விருப்பம் இல்லமால் வந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு

திரையுலக வாழ்க்கை :

தமிழ்த் திரையுலகில் மணிரத்னம் தயாரித்து இயக்குனர் வசந் இயக்கத்தில் உருவான ‘நேருக்கு நேர்’ படம் முலம் . 1997ல் அறிமுகம் ஆனார் சினிமா துறையில்.

அதன் பின் , ‘காதலே நிம்மதி’ (1998), ‘சந்திப்போமா’(1999), ‘பெரியண்ணா’ (1999), ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ (1999), ‘உயிரிலே கலந்தது’ (2000) போன்ற பல படங்களில் நடித்த அவருக்கு, 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஃபிரண்ட்ஸ்’ திரைப்படம் இவர் வாழ்க்கைக்கு ஒரு மாற்றம் அளித்தது.

அதே ஆண்டில் இவரின்படமான ‘நந்தா’ வெற்றிபெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றுத்தந்து.

பின், கெளதம் மேனனின் ‘காக்க காக்க’ திரைப்படம், இவரை தமிழ் சினிமாவுக்கு மாஸ் ஹீரோவாக மாற்றியது. எந்தவொரு திரை அனுபவமும் இல்லாமல். தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அவர், பின் விரைவில் நல்ல நடிகர் என பெயர் வாங்கினார்.

கௌதம மேனனின் அடுத்தப் படைப்பான ‘வாரணம் ஆயிரம்’ படத்தை பார்த்த இளைஞர்கள் சூர்யா சிக்ஸ் பேக்ஸ் உடலை பார்த்து அவர்களுக்கு அதை செய்ய முயற்சித்தனர்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக சூர்யா :

ஜனவரி மாதம் 2012 ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைக்கட்சியில் தொடங்கப்பட்ட கேம் ஷோவான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திரைப்படமல்லாத அங்கீகாரங்கள் :

அவர், டிவிஎஸ் மோட்டார்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ், இமாமி நவரத்னா, நெஸ்கஃபே, ஜண்டு பாம், க்ளோஸ்-அப் டூத்பேஸ்ட், ஏர்செல், சன்ஃபீஸ்ட், மலபார் கோல்ட் போன்ற நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்தார்.

இல்லற வாழ்க்கை :

நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கும் போது, இவர்களுக்கு காதல் மலர்ந்ததால், பல ஆண்டுகளாக அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்தனர்.

பின் ஒருவழியாக செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, 2006 ஆம் ஆண்டு திருமண செய்தார். அவர்கள் இருவருக்கும் 2007ல் தியா என்ற மகளும், 2010ல் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.

பொது சேவை :

அவர், ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, பொது நலனுக்காகவும், பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக்காகவும் தொண்டாற்றி வருகிறார்.

2டி நிறுவனம் :

2டி நிறுவனம் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ்நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும்.

இதுவரை இந்த நிறுவனத்தில் எடுத்த திரைப்படங்கள் : 36 வயதினிலே,
பசங்க 2, 24, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், உறியடி 2, ஜாக்பாட்,பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, ஜெய் பீம்.

திரைப்படத்துறையில் அங்கீகாரம் :

இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறமை உள்ளவர் என்று விளங்குகிறார். இவர் நடித்த அணைத்து திரைப்பாடங்களுமே மாறுபட்ட வேடங்களை கொண்டு தான் இருக்கும்.

சூர்யாவின் முதல் சம்பளம் :

படிப்பை முடித்த பிறகு சூர்யா கார்மெட்ன்ஸில் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் வாங்கிய முதல் சம்பளம் 1200 ரூபாய். அந்த சம்பளத்தில் அம்மாவுக்கு பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தார்.

விருதுகள் :

2003  – சிறந்த நடிகருக்கான ‘ஐடிஎஃப்ஏ (ITFA) விருதை’, ‘காக்க காக்க’ திரைப்படத்திற்காகப் வென்றார்.

2003 – சிறந்த துணை நடிகருக்கான  ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘பிதாமகன்’ திரைப்படத்திற்காக வென்றார்.

2004 – சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘பேரழகன்’ திரைப்படத்திற்காக வென்றார்.

2008 – ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘விஜய் விருது’, மற்றும் ‘ஆண்டின் ஸ்டைலிஷ் யூத் ஐகான்’ என்று சொல்லி, ‘சவுத் ஸ்கோப் விருது’ வென்றார்.

2009 – ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, ‘விஜய் விருதுகளை’, ‘அயன்’ மற்றும் ‘ஆதவன்’ திரைப்படங்களுக்காகப் வென்றார்.

2010 – ‘சிங்கம்’ படத்திற்காக ‘பிக் FM’ மற்றும் ‘விஜய் விருது’ அவரை ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, விருதுகளை வென்றார்.

2012 – சிறந்த நடிகருக்கான ‘சினிமா விருதை’, ‘மாற்றான்’ திரைப்படத்திற்காக வென்றார்.

2022 ஆம் ஆண்டு தேசிய விருது

மேலும் சிறந்த நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை’, 2001 ஆம் ஆண்டில் ‘நந்தா’ திரைப்படத்திற்காகவும், 2005 ஆம் ஆண்டில் ‘கஜினி’ திரைப்படத்திற்காகவும், 2008 ஆம் ஆண்டில் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்திற்காகவும் வென்றார்.

Leave a Comment