Tipu Sultan History in Tamil – திப்பு சுல்தான் வாழ்கை வரலாறு

ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் ஒருவர் ஆவார். இவரை அனைவரும் மைசூரின் புலி என்று தான் அழைப்பார்கள் இவருடைய நோக்கமே ஆங்கிலேயர்களை அழித்து, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார திமிரை அடக்க நினைத்தார்.

தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை இதற்காக போராடிய மாவீரன் தான் திப்பு சுல்தான். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சி, நிர்வாகம் என பல துறையில் சிறந்து விளங்கினார்.

இவரின் உயிர் பிரியும் போது கூட ஆங்கிலேயர் இவரை தங்களுக்கு அடங்கி போக சொன்னார்கள். ஆனால் கர்ஜனையோடு முடியாது என்று சொன்னது மட்டும் இல்லாமல் . ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம் என கர்ஜனையோடு இறந்தார். இப்படிப்பட்ட மாவீரனின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

நவம்பர் 20 ஆம் தேதி 1750 ஆம் ஆண்டு இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார் திப்பு சுல்தான்.

இவருடைய குடும்பம் ராஜா வம்சம் கிடையாது.இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து தன் முயற்ச்சி மற்றும் தந்திரத்தால் ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்தார், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வென்றும் சாதித்தார். இவரின் மகன் தான் திப்பு சுல்தான் இவரை அனைவரும் ‘மைசூரின் புலி’ என அழைப்பார்கள்.

திருபாய் அம்பானி வாழ்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

இளம் வயதில் கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான் அப்பொழுதே தன்னுடைய தந்தையுடன் இணைந்து பல போர்களை கண்டார். இவர் பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என பல துறைகளில் தேர்ச்சிப்பெற்றார்.

இவர் 1776 ஆம் ஆண்டு படைத்தளபதியாக பதவி அடைந்த போது மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றினார். பின்பு 1780ல் தந்தையுடன் இணைந்து இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிர்த்து போரிட்டார்.

இவருடைய தந்தை மரணத்திற்குப் பிறகு, இவருடைய 32 வது வயதில் ‘
சுல்தானாக’ மன்னன் ஆகினார். இவருடைய ஆட்சிக்கு புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தினார்.

மூன்றாம்,நான்காம் மைசூர் போர் மற்றும் மரணம் :

திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக 1789 ஆம் ஆண்டு மூன்றாம் மைசூர் போரின் போது மராட்டிய பேரரசும், ஐதராபாத் நிஜாமும் ஆங்கிலேயர் இடம் இணைந்து சுல்தானுக்கு எதிராகப் செயல்பட்டனர். ஆனால், சற்றும் கலங்காத திப்புசுல்தான் அவர்களை எதிர்த்து துணிச்சலாக எதிர்த்து நின்றார்.

இந்த போர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நடந்தது இதில் சுல்தான் சில பகுதிகளில் மட்டும் தோல்வியடைந்தார். இறுதியில் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்கள் மைசூரில் உள்ள சில பகுதிகளை பிரித்து கொண்டனர்.

போரில் திப்புசுல்தானை முழுமையாக வீழ்த்தமுடியாது என அறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம். திப்பு சுல்தான் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைப்பேசி லட்சம் குடுத்து திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர்கள். இந்த சூழ்ச்சிக்கு இடையில் நான்காம் மைசூர் போர் தொடங்கியது.

திப்பு சுல்தான் துணிச்சலுடன் போர் புரிந்தாலும். பிரிட்டிஷ் அரசாங்கம்
படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது. அப்போது குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல்தானிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களுக்கு அடங்கி போக சொன்னார்கள்.

ஆனால் கர்ஜனையோடு முடியாது என்று சொன்னது மட்டும் இல்லாமல் . ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம் என கர்ஜனையோடு 1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.

ஆட்சி மற்றும் சீர்திருத்தங்கள் :

திப்புசுல்தான் ராணுவ படையில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல் பீரங்கிகளையும் பயன் படுத்தினார். பின்பு கடற்பயிற்சி மையம் உருவாக்கி ஆங்கிலேயருக்கு நிகராக ஆயுதங்களை உருவாக்கினார். முதன்முதலில் சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் என வரலாறு சொல்கிறது.

திப்புசுல்தான் பெண்களை மதிக்க கூடியவர். இவர் ஆட்சியில் தேவதாசி முறையை முழுமையாக நீக்கினார். இந்த நிகழ்வு பெரியதாக பார்க்கப்பட்டது. மூடநம்பிக்கை,மதுவிலக்கை என பல தீய செயல்களுக்கு முற்று புள்ளி வைத்தார். திப்பு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும்.அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர்.அதுவே அவரின் நல் உள்ளமாக இருந்தது.

இவர் மக்களிடம் அமைதியை மட்டும் விரும்பினார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் எழுதினார்.விவசாயம் , தொழில் வளர்ச்சி முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்புசுல்தான் சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் வாழ்ந்தார். அனைத்து துறைகளிலும் சாதித்தும் காட்டினார்.இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் ஒரு வீர வரலாறு படைத்தவர். திப்புசுல்தான் பெயர் நாடு முழுவதும் பரவியது என்றால் மிகையாகது.

காலவரிசை :

1750 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார்.

1776 ஆம் ஆண்டு படைத்தளபதியாக தந்தை உடன் காதிகோட்டையை கைப்பற்றினார்.

1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் மைசூர் பேரரசராக ஆனார்.

1780-84 ஆம் ஆண்டு பிரிட்டிஷாருடன் இரண்டாம் மைசூர் போர்.

1789-92 ஆம் ஆண்டு பிரிட்டிஷாருடன் மூன்றாம் மைசூர் போர்.

1799 ஆம் ஆண்டு பிரிட்டிஷாருடன் நான்காம் மைசூர் போர்.

1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி மரணம் நிகழ்ந்தது.

Leave a Comment