Comedy Tamil Actor Goundamani History in Tamil – நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வாழ்கை வரலாறு

தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான கவுண்டமணி தன்னுடைய நகைச்சுவை டயலாக் மூலம் தமிழ் திரையுலகை ஆட்டிப்படைத்தார். இவர் நடித்த கரகாட்டக்காரன்,சின்னக்கவுண்டர், நடிகன், மன்னன், இந்தியன், வரவு எட்டணா செலவு பத்தணா என பல படங்களில் நடித்த நகைச்சுவைக் காட்சியை நம்மால் இன்று வரை மறக்க முடியாது.

இவர் 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் செந்தில் உடன் இணைந்து நடித்துள்ளார். இவரது டயலாக் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் பேசும் பொருளாகத்தான் உள்ளது.

இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், பல குணச்சித்திரக் கதாபத்திரங்களிலும் நடித்து உள்ளார், புகழின் உச்சியை அடைந்த கவுண்டமணியின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

கவுண்டமணி 1939 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாள் கோயமுத்தூரரில் உள்ள வல்லகொண்டபுரம் என்ற கிராமத்தில் கருப்பையா மற்றும் அன்னாம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி.

ஆரம்ப வாழ்க்கை :

சினிமாவில் உள்ள ஆர்வத்தால் ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்துவந்த கவுண்டமணி . நாடகங்களில் பல கதாபாத்திரங்களை நடித்து பிரபலமாக இருந்தார். அதில் மிகவும் பிரபலமான நாடகம் தான் ‘ஊர் கவுண்டர்’. அதான் பிறகு இவரை கவுண்டமணி என அனைவரும் அழைத்தார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை :

கவுண்டமணி சாந்தி என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கருப்பையா சுமித்ர் மற்றும் கருப்பையா செல்வி என 2 மகள்களும் பிறந்தார்கள்.

திரையுலக வாழ்க்கை :

கவுண்டமணி அவரது 26வது வயதில் நாடகத்தில்இருந்து சினிமா உலகத்திற்கு நடிக்க வந்தார், ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக இருந்த அவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.

கவுண்டமணி இந்த படத்தில் பேசும் பத்த வெச்சுட்டியே பரட்டை என்ற டயலாக் ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. அவர் நடித்த 4வது படத்திலேயே அவருடைய திறமையை தமிழ் சினிமாவில் வெளிபடுத்தினார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக செந்திலுடன் சேர்ந்து 500 நகைச்சுவைக் காட்சிகளை வெற்றிகரமாக நடித்து உள்ளார்.

செந்திலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக ‘வாழைப்பழம் காமெடி’, ‘பெட்டெர்ம்ஸ் லைட் காமெடி’ என பல நகைச்சுவை காட்சிகளை நம்மால் இன்றளவும் மறக்கமுடியாது.

இவரின் பல டயலாக் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவையாக முத்திரைப் பதித்தது. சினிமா உலகம் இருக்கும் வரை கவுண்டமணி, செந்தில் டயலாக் இல்லாமல் இருக்காது அவர்களது புகழும் இருக்கும் . ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல குணச்சித்திர கதாபத்திரங்களிலும், பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

கவுண்டமணி 12 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

கவுண்டமணி நடித்த நகைச்சுவை திரைப்படம் சில :

கரகாட்டக்காரன்,சூரியன்,மாமன் மகள்,இவர் ராஜா எங்க ராஜா,பிறந்தேன் வளர்ந்தேன்,வரவு எட்டணா செலவு பத்தணா,ஜப்பானில் கல்யாண ராமன்,நானே ராஜா நானே மந்திரி,மன்னன், எஜமான்,உழைப்பாளி என சொல்லி கொண்டே போகலாம்.

கவுண்டமணியின் பிரபலமான டயலாக் :

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன், இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது, Petromax Light தான் வேணுமா, டேய் இந்த டக்கால்டி வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத.

Leave a Comment