Rettamalai Srinivasan History in Tamil – இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாறு

இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து இறந்தார். சீனிவாசனின் நோக்கமே சாதி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பதே. இதற்க்காக அவர் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார்.

இவர் வழக்கறிஞராக இருந்தாலும், அரசியல் நுணுக்கத்தில் தலைச்சிறந்த விளங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர், சாதி ஒழிப்பு ஆர்வலர் ஆவார். இவர் தலித் இனத்தை சார்ந்த காந்தியின் கூட்டாளி என்று சொன்னாலும் அது மிகையாகாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக போராடிய இரட்டமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1859 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி இரட்டைமலை சீனிவாசன் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

திப்பு சுல்தான் வாழ்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

அவரது தொடக்கக்கல்வியைக் கோழியாளத்தில் உள்ள ஒரு பள்ளியில் அவர் படித்து கொண்டு இருக்கும் போதே குடும்ப வறுமைக் காரணமாகவும், சாதியக் கொடுமை காரணமாகவும் அவர் குடும்பம் தஞ்சைக்கு குடிபெயர்ந்தது.

தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில், தனது பள்ளிப்படிப்பை மீண்டும் தொடர்ந்த அவர். கல்லூரி படிப்பை மட்டும் கோவையில் முடித்தார். எங்கு சென்றாலும் தீண்டாமைக் என்ற நோயை கண்ட அவர். அதற்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்.

இல்லற வாழ்க்கை :

1887 ஆம் ஆண்டு ரங்கநாயகி அம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

ஆரம்பகாலப் பணிகள் மற்றும் அவருடைய சட்டமன்ற பங்கு :

தனது கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு அவர் நீலகிரியில் உள்ள நிறுவனத்தில் 10 ஆண்டு வேலை செய்தார் . பின் 1890 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். இவர் நன்றாக எழுத ஊடியவர் ஆகையால் 1891 ஆம் ஆண்டு பறையர் மகாசன சபை மற்றும் 1893 ஆம் ஆண்டு பறையன் என்ற திங்கள் இதழை என இரண்டு இதழை தொடங்கினார்.

ஏழு ஆண்டு அந்த இதழை நடத்திய அவர், பின் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு ஒரு மொழிப்பெயர்பாளராக நீதிமன்றத்தில் வேலை செய்தார். பின் 1921ல் இந்தியா திரும்பினார்.

பின் அரசியலில் இணைந்த இவர் 1923 ஆம் ஆண்டு சட்டசபையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1924ல் சட்ட சபையில் இவர் இயற்றிய முக்கியமான தீர்மானத்தை வெளியிட்டார். அதன்படி பொது இடங்களில் சாதி பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் நடக்கலாம் இங்கே அனைவரும் சமம் என்றும் கூறினார் இந்த சட்டம் தான் இன்று நமக்கு பயன்படுகிறது.

மேலும், பள்ளர், பறையர் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர் என்று கூறவேண்டும் என கூறினார். சட்ட சபையில் மக்களின் நலனுக்காக மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம் என பல தீர்மானத்தை இயற்றி உள்ளார்.

லண்டன் வட்டமேஜை மாநாடு :

லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் 1930, 1931 மற்றும் 1932களில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இவரும் அம்பேத்கரும் கலந்து கொண்டார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என்று இவர்கள் இருவரும் அம்மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை அங்கு பதிவு செய்தனர்.

இறப்பு :

1945 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி இரட்டைமலை சீனிவாசன் இறுதி மூச்சை உடல்நிலை சரியில்லாததால் விட்டார்.

காலவரிசை :

1859 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் சிற்றூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி, தெய்வபக்தி இருக்கக் கூடிய ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

1887 ஆம் ஆண்டு ரங்கநாயகி அம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

1890 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார்.

1900 ஆம் ஆண்டு வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார்.

1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

1923 ஆம் ஆண்டு சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

1924 ஆம் ஆண்டு சட்ட சபையில், அவர் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

1930, 1931 மற்றும் 1932 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டார்.

Leave a Comment