fbpx

Shri Ramakrishna Paramahamsa History in Tamil – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு

இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆத்மார்த்தமாக வணங்கும் மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் , அவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர் இவர்.

கடவுள் ஒருவன் மற்றும் வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான வழி என தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் இருந்தார்.

அனைத்து மதங்களும் இறைவனை அடையும் மாற்று வழிகளே என்பதனைத் அறிந்து மக்களுக்கு அதையே வலியுறுத்தியவர் மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், மேற்குவங்காளம் மாநிலத்தில் குதிராம் என்பவருக்கும் தாயார் சந்திரமணி தேவிக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த நபர்.

அமிர்தானந்தமயி வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

சிறுவயதில் தெய்வங்களின் படங்கள் நன்றாக வரைவார், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வம் கொண்ட இவர். பள்ளி படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால்.

17 வயதில் அவரது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்கு தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக
வேலைப் பார்த்து வந்தார். அவர் அண்ணன் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் பயணம் :

இராமர் கல்கத்தாவிலுள்ள தட்சிணேஸ்வர கோவில் அர்ச்சகர் வேலைக்கு அமர்த்தப்பட்டார். தட்சனேஸ்வரர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்து வந்த ராமகிருஷ்ணருக்கு அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு.

காளி கடவுளாக இருந்தா அவருக்கு காட்சி தரனும் என்று தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்வார். அவரது முயற்சிக்கு
பலன் அளிக்கவில்லை.

இதனால் பொறுமை இழந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள் காளி சிலையின் கையிலிருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல
முயற்சித்தார்.அந்த நிமிடமே அவரும் சுயநினைவை இழந்ததாகவும்⸴ ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு பிறகு இவர் நடவடிக்கைகளில் அதிக மாற்றம் தெரிந்தது. பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். அதற்கு அவரே ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அந்த பெண்ணை தன்னை திருமணம் செய்ய பிறந்தவள் என்று கூறி, அவரையே திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் தாம்பத்தியம் ஏற்காமல் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார் அவர் .பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார்.

பல சீடர்கள் ராமகிருஷ்ணருக்கு இருந்தாலும். எனினும் அவர்களில் எல்லாம் முதன்மையானவராக விவேகானந்தரே வழங்கினார்.

மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் இருந்தார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் நீங்காத ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார்.

ஒருவன் வாழ்வில் இறைவன் அருள் முழுமையாக பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும் என்பதே இவர் சிந்தனைத் துளிகள்.

இறப்பு :

தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி ஆன்மிகத்துடன் வாழ வேண்டு என்பதை வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.

இவர் இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற மனித தெய்வமாவார். எந்த சமய ஆன்மிகக் கருத்துக்களையும் குறை சொல்லாமலும், எல்லா சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துச் சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய வாழ்க்கை வாழ்ந்தவர் மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சராவார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.