Actor Vivek History in Tamil – நடிகர் விவேக் வாழ்க்கை வரலாறு

நகைச்சுவை மட்டுமின்றி சிந்தனையை தூண்டும் வகையிலும் தமிழ் திரைப்படத்துறையில் இருந்தவர் தான் சின்னக்கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் அவர்கள். தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.

இவர் நகைச்சுவையில் நம்மை சிந்திக்கவும் வைத்தவர்.தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர்.

இவர் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணபின்பற்றி நடித்த அணைத்து படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை மையமாக வைத்து நகைச்சுவை செய்வார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக மட்டும் இல்லாமல் பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நம் மனதில் இருக்கும் விவேக்கின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் தமிழ் நாட்டில் உள்ள மதுரையில் சிவ.அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

விவேக் பள்ளிப்படிப்பை மதுரையில் படித்து முடித்தார். பின் மதுரையிலேயே அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர். பிறகு தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார்.

பின் அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் எழுதி வெற்றிப்பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் சேர்ந்தார்.

திரைப்படத்துறையில் அவரின் பயணம் :

தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தபோது, இயக்குநர் சிகரம் பாலசந்தரின் அறிமுகம் கிடைத்து உள்ளது. 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்தார் விவேக்.சினிமாவிற்கு வந்த பிறகுதான், விவேகானந்தன் என்கிற தனது பெயரை விவேக் என்று, அவர் மாற்றி அமைத்துக்கொண்டார்.


அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், விவேக் பேசிய இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.


அதன் தொடர்ச்சியாக, அவர் தொடர்ந்து பல படங்களில் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட இளம் ஹீரோக்கிளன் நண்பனாக நடித்து நகைச்சுவையில் கலக்கி வந்தாலும். வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிபடுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார்.

சின்ன கலைவாணர் விவேக் :

குறிப்பாக இவருடைய நகைச்சுவை மூட நம்பிக்கை, மக்கள் தொகை பெருக்கம், ஊழல், லஞ்சம், போன்றவையே கருப்பொருளாகக் கொண்டு அவற்றில் நக்கல், நையாண்டி, என்று பொளந்து கட்டி சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

ஆகச் சிறந்த சமுதாய சீர்திருத்த கருத்துகளையும் கூறி தொடர்ச்சியாக நடித்து வந்ததின் காரணமாக, நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டார்.

அப்துல் காலம் ஐயாவின் தீவிர ரசிகர் ஆனா விவேக் சொந்த வாழ்க்கையிலும்
சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன் எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.

புகழ்பெற்ற நகைச்சுவை வசனம் :

இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

சாதா காக்காயா சொன்ன அண்டங்காக்காவுக்கு கோவம் வருது பாரு

உனக்கு வெளிய நடமாடிட்டு இருக்குற அதே மிருகம்தான் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு

இறப்பு :

அவருக்கு இதய செயல்பாடு குறைந்த நிலையில், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க, அவருக்கு எக்மோ கருவி பொருத்தி இன்னும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இப்படி, அவருக்கு சிகிசிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 17 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுகள் :

இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.

ஃபிலிம்ஃபேர் விருது மூன்று முறை வழங்கப்பட்டது.

தமிழ் நாடு அரசின் மாநில விருது மூன்று முறை வழங்கப்பட்டது.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தேசிய தமிழ் திரைப்பட விருதுகள் பெற்றார்.

சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது.


Leave a Comment