fbpx

Periyar History in Tamil – பெரியார் வாழ்க்கை வரலாறு

தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்று போற்றப்பட்ட பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.


இவர் பெண்விடுதலைக்காகவும்,சாதி மறுப்பு போன்ற கொள்கைக்காகவும் போராடியவர். ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள்தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.

திருபாய் அம்பானி வாழ்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.

1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணம் இவர் நடத்தினார் அதில் அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர், இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.

காசிக்கு பயணம் :

இவருக்கு இவர் தந்தைக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனையால் காசிக்கு சென்ற அவருக்கு அங்கு நடந்த நிகழ்வால் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு வித்திட்டது. அங்கு அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார்.

இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் இலைகளில் இருக்கும் உணவை
உண்டு பசியாற்றினார்.

அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட இவருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை :

காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்னும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார்.

1921 ஆம் ஆண்டு வெளிநாட்டு கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டார். 1921-1922-ல் மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவரை தேர்தெடுத்தார்கள். பின் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.


இதை காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.

வைக்கம் போராட்டம் :

கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தலித் மக்களும், ஈழவர்களும் கோயிலுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள் இந்த தவறை எதிர்த்து சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார்.

இதில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்தினர். இந்த போராட்டத்தில் பெரியார்
மற்றும் அவருடைய துணைவியான நாகம்மையாரும் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்காள்.

இந்த போராட்டத்தை பெரியார் தொண்டர்கள் தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் வைக்கம் வீரர் என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம் :

1925 ஆம் ஆண்டு தீண்டாமை, மூடநம்பிக்கை,தேவதாசி முறை,குழந்தைகள் திருமணம், வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். இதற்காக சுயமரியாதை இயக்கம் தொடங்கினார்.

சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும்,
கூட்டங்களும் நடத்தப்பட்டு 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.

இந்தி எதிர்ப்பு :

1937 ஆம் ஆண்டு இந்தி கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன.

பெரியார் இதை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பின் 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் பெரியார்.

மு. கருணாநிதி வாழ்க்கை வரலாறு

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு :

பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். இந்த கட்சி சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால்.

பெரியார் இந்த கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற விரும்பவில்லை.
அதுமட்டுமல்லாமல் திராவிடநாடு வேண்டாம் தனி தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

ஆனால் அண்ணாதுரை மற்றும் பெரியாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டடு திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது,.

ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார்.
பின்னர் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இறுதிகாலம் மற்றும் இறப்பு :

இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார். இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரித்து போராட்டத்தையும் நடத்தி கைது செய்யப்பட்டார்.


கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது அதில் தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.

இவர் எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும்
சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.