Raja Ravi Varma History in Tamil – ராஜா ரவி வர்மா வாழ்க்கை வரலாறு

ஓவியர் என்றால் எளிய மக்களிடமும் அறிமுகம் கொண்டவர் ராஜா ரவிவர்மா மட்டுமே. மிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார்.

இந்திய ஓவிய மரபுகளில் தனித்துவம் ஏற்படுத்தி மாற்றத்தை நிகழ்த்திய பெருமை இவரைச் சாரும். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை அணிந்த பெண்களின் ஓவியங்களை மிக மிக சீராகவும், தெய்வீகமாகவும் சித்தரித்தார்.

மரபுவழி அறிவும், கலைப்பண்பும் இவரது ஓவியங்களில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு புதிய ஓவிய மரபு துவங்க அடிகோலியது. ராஜா ரவி வர்மா வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

ஏப்ரல் 29, 1848 அன்று ராஜா ரவி வர்மா அவர்கள், கேரளாவில், திருவனந்தபுரத்துக்கு பக்கத்தில் இருக்கும் கிளிமானூர் அரண்மனையில் உமாம்பா – நீலகண்டன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

சுப்பிரமணிய பாரதி வாழ்க்கை வரலாறு

ஆரம்பகால வாழ்க்கை :

இவரது சிறு வயதில் சமஸ்கிருதம், மலையாளம் என பல மொழிகளைப் கற்றுக்கொண்டார். பின் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் காட்டினார். 7 வயதில் அவர் கரித்துண்டுகளைப் பயன்படுத்தி அரண்மனை சுவரில் வரையத் தொடங்கினார்.

அப்பொழுது தான் இவர் ஓவியத்திறமையை கவனித்த அவரின் மாமாவான ராஜா ராஜாவர்மா, அவருக்கு ஓவியம் வரைவதற்கான பாடங்களை கற்பித்தார்.

பிறகு அவரது 14வது வயதில் ராஜா அவர்கள் ரவிவர்மரை திருவாங்கூர் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். பின் அரண்மனை ஓவியரான ராமஸ்வாமி உதவியோடு தண்ணீர் ஓவியத்தைக் கற்பித்தார். பின்னர் ஆங்கிலேய ஓவியரான, தியோடர் ஜென்சன் மூலம் எண்ணெய் ஓவியப் பாடங்களைக் கற்றார்.

ரவிவர்மரின் ஓவியங்கள் :

இவருடைய கற்பனைக் கண்ணால் பார்த்த காட்சிகளையே ரவிவர்மா வரைந்தார். அப்போது திருவிதாங்கூரை ஆண்டு வந்த மகாராஜா திருநாள் ரவிவர்மா ஓவியம் வரைவதற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தார்.

ரவிவர்மா அனைவரின் கவனத்தையும் பெற்றதால். பல சமஸ்தான மன்னர்களுக்கும் அவர் ஓவியம் வரைந்து தந்திருக்கிறார். 1873ல், ரவி வர்மா சென்னை ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசை வென்றார்.

தென்னிந்திய பெண்களை மிகவும் அழகானவர்கள் என்று கருதிய அவர், பல மாநிலங்கள் சென்று பல அழகான மகாராஷ்டிரப் பெண்களை வரைந்தார்.

ஐரோப்பிய ஓவியங்களில் ஈர்க்கப்பட்ட அவர், பின் இந்திய ஓவியக்கலைகளில் ஐரோப்பிய கலையை கலந்தார். இவை தான் அவரின் கலையை உயர்த்தியது.

அங்கீகாரங்கள் :

விவர்மா புகழ் இந்தியா மட்டுமல்ல, இங்கிலாந்து வரையும் பரவியது. இந்தியாவில் மைசூர், பரோடா, குவாலியர் மற்றும் ராஜபுதன அரண்மனைகளில் ரவிவர்மாவின் படங்கள் அணி செய்தன.

இந்திய கலைக்காக ரவிவர்மரின் பரந்த பங்களிப்பைப் பரிசீலிக்கும் விதமாக, கேரளா அரசு, ராஜா ரவி வர்மா புரஸ்காரம் என்று ஒரு விருதை, கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் மக்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவித்து வருகிறது.

கேரளாவில், மவேளிகராவில், ஒரு கலைக் கல்லூரி அவரது நினைவாக
அமைக்கப்பட்டது. கிளிமானூரிலுள்ள ராஜா ரவி வர்மா உயர்நிலைப் பள்ளி அவரது பெயரால் பெயரிடப்பட்டது. அவரது பெயரில் கேரளா முழுவதும் பல கலாச்சார அமைப்புகள் உள்ளன.

ரவிவர்மரின் புகழ்பெற்ற ஓவியங்கள் :

இராமர், உமையவள், பிள்ளையார், காளி என அணைத்து விதமான கடவுள் படங்களுக்கு உயிர் கொடுத்தது இவர் தான்.

இல்லற வாழ்க்கை :

ராஜா ரவி வர்மா 1866 ஆம் ஆண்டு பூரூருட்டாதி நல் பகீரதி பாய் தம்புராட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இறப்பு :

ரவி வர்மர் அவர்கள், உடல்நலக்குறைவால் 1906ல் அவரது 58ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

இவரது ஓவியங்கள் தொடர்பாக பல விமர்சனங்கள் இருப்பினும், மிக முக்கியமான முன்னோடியாகவும், பிதாமகராகவும் ராஜா ரவி வர்மா இருக்கிறார்.

Leave a Comment