fbpx

Subramania Bharati History in Tamil – சுப்பிரமணிய பாரதி வாழ்க்கை வரலாறு

நவீன தமிழ் கவிதைகளுக்கு தகப்பன் தான் நம் மீசை கவிஞ்சன் பாரதி. தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கதியவன் தான் நம் தேசிய கவிஞன். மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் இருந்தவர்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான், சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான்.

விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி , திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் மகனாக பிறந்தார்.

அவருக்கு தம் பெற்றோரோர் இட்ட பெயர் சுப்பிரமணி. அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில்
புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

இளமைப் பருவம் :

தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதையால் கர்ஜிக்க தொடங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றில் இருந்து இவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்றானது.

பாரதியாரின் திருமண வாழ்க்கை :

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி பாரதி தம் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது. 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு நடந்தேறியது பாலியல் திருமணம்.

பின் சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர
மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். இது போன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது எண்ணினார் என்னவோ தெரியவில்லை.


பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு எதிராக பொங்கி எழுந்தார் மகாகவி பாரதியார்.

பாரதியாரின் இலக்கிய பணி :

அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதல் முதலில் 1903 ஆண்டு அச்சில் வந்தது. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார் பாரதியார். பிறகு சுதேயசிய மித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு :

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.


அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞயான குருவாக ஏற்றுக்கொண்டார்.

1907 ஆம் ஆண்டில் இந்தியா என்னும் வார ஏட்டையும் பால பாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார். இந்தியா விடுதலை
போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். தாம் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார்.

சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது.

காந்தி, பாரதியார் சந்திப்பு :

வறுமையில் சில காலம் வாழ்ந்த பாரதியார், 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகா கவி பாரதியார் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

இறப்பு :

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதியார். அங்கு யாரும் எதிர்பாரா விதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எரிந்தது.

அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் எறியப்பட்டதால் மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது
வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியார் எழுதிய நூல்கள் :

பாஞ்சாலி சபதம், தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணிமாலை, கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, தோத்திரப்பாடல்கள்,விடுதலைப் பாடல்கள், சின்னஞ்சிறு கிளியே, பொன்வால் நரி, பாரதியார் பகவத் கீதை, ஞானரதம்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள் :

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது.

இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.