Soundarapandian Nadar History in Tamil – சௌந்தரபாண்டியன் நாடார் வாழ்க்கை வரலாறு

தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சியில் நாடார் சமூகம் பல கொடுமைகளை கண்டது. நாயக்கர் ஆட்சியைப் பிராமணர்கள் ஆட்சி என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. நாயக்கர்களின் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தனர்.

எனவே நாயக்கர் ஆட்சியில் பிராமணர்கள் அளவற்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர். பின் சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர் சௌந்தரபாண்டியன் நாடார்.

பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு, நாடார் சமூகத்தை இணைக்கப் பெரிதும் பாடுபட்டார்.சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, 1892 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருக்கும் திண்டுக்கல் அருகிலுள்ள பட்டிவீரன்பட்டியில் பிறந்தார்.

ராஜா ரவி வர்மா வாழ்க்கை வரலாறு

ஆரம்பகால வாழ்க்கை :

சௌந்தரபாண்டியன் நாடார் சின்ன வயதில் இருந்தே பிராமண ஆதிக்கத்தைப் பார்த்து வளர்ந்தார். தொடக்கக் கல்வியை தன்னுடைய வீட்டிலும், மேல்நிலைக் கல்வியை மதுரையிலும் கலை இளையர் கல்வியைச் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் பயின்றார்.

இவர் நாடார் சமூக மக்கள் அனைவருக்கும் உழைக்க வேண்டுமென்ற எண்ணம் அவரது மனதில் இளம் பருவத்திலிருந்தே விதையாய் அரும்பி வளர்ந்து வந்தது. அவர் இருந்த காலக்கட்டத்தில் சுதந்திரப் போராட்ட சூழலே நிலவியதால், அதன் தாக்கமும் அவரைப் பெரிதும் பாதித்தது.

அரசியல் வாழ்க்கை :

சௌந்திரபாண்டியன் திராவிட இயக்கங்களான அணைத்து அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார். பல பதவிகளை ஏற்றும் பணியாற்றினார். குறிப்பாகத் அவர் தந்தை பெரியாரோடு இணைந்து பணியாற்றினார்.

நாடார் சமூகத்தில் அரசியலில் ஈடுபட்டுத் முதல் தலைவர் சௌந்திரப்பாண்டியனார் . 1928 முதல் 1930 வரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக இருக்கும் போது பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யத் தடை இருந்ததைக் கண்டித்ததோடு தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யத் தடைசெய்யும் பேருந்துகளின் இருந்து அகற்றினார்.

1937 ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அவர், நாடார் சமூகத்தின் நலன்களை நீதி கட்சி முக்கிய நபராக செயல்பட்டார். மேலும் அவர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு தலைவராக 1928 முதல் 1930 வரை பணியாற்றினார். 1943 முதல் 1947 ஆம் ஆண்டு வரை, அவர் மதுரை மாவட்ட சபைத் தலைவராகவும் பணியாற்றினார்.

சமூக சீர்த்திருத்தங்கள் :

சிறு வயதில் இருந்தே சமூதாய முறைகேடுகளைக் கண்டு கோவம் கொண்ட அவர், பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இவர் சுய மரியாதை திருமணம் மற்றும் சாதிமத வேறுபாடின்றி உணவருந்தும் பழக்கத்தையும் அவரது சமூக மக்களிடம் வலியுறுத்தினார்.

அவரது இந்தப் புரட்சிகரமான செயல்களைக் கண்ட பெரியார் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குச் சௌந்திரபாண்டியனை தலைவராக நியமித்தார். அவர் சமுகத்திற்க்கு மட்டும் பாடுபடாமல்.

தலித்துக்கள், தியாக்கள் போன்றோரின் முன்னேற்றதிருக்கு பாடுப்பட்டார். அவர் கமுதி தண்டனை வரியை மிகக் கடுமையாக எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றி பெற்றார்.

இறப்பு :

சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து அவ்வியக்கத்தில் முழுமனதுடன் செயலாற்றிய சௌந்திரபாண்டியனார் இதய நோயால் பாதிக்கப்பட்டு 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22 ஆம் நாள் சென்னையில் முடிவெய்தினார். அவரின் உடல் அவரது சொந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் அவரது பண்ணையில் அடக்கம் செய்யப்பட்டது.

நினைவஞ்சலி :

தனது நாடார் சமூக மக்களிடம் அவர் ஆற்றிய பணிகள் கூட அவர்களைச் சாதி இழிவிலிருந்தும் பிற்போக்குத்தனத்திலிருந்தும் விடுவிப்பதற்கான உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்ததே தவிர தனது அரசியல் லாபத்திற்கு அவர் பயன்படுத்தியதே இல்லை. நாடார் சமூக மக்களிடையே விதவைத் திருமணங்களையும் சாதி ஒழிப்புக் கலப்புத் திருமணங்களையும்
அவர் ஏராளம் நடத்தி வைத்தார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள முக்கியக் கடைத்தெருவான பாண்டி பஜாருக்கு, சௌந்தரபாண்டிய நாடார் அவர்களின் பெயரிடப்பட்டது என்று பலரும் கூறுகின்றனர். அண்மையில், அந்தக் கடைத்தெருவின் நுழைவு வாயிலில், தலைவர் சௌந்தரபாண்டிய நாடார் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, சௌந்தரபாண்டியன் அங்கத் என்றும் ஒரு பேர் பலகை
வைக்கப்பட்டுள்ளது.

காலவரிசை :

1892 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருக்கும் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் அருகிலுள்ள பட்டிவீரன்பட்டியில் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, 1892 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1920 ஆம் ஆண்டு நாடார் மகாஜன சங்கத்தின் முக்கியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1920 ஆம் ஆண்டு சென்னை சட்ட பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1928 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு தலைவராகப் பணியாற்றினார்.

1943 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்ட சபைத் தலைவராகப் பணியாற்றினார்.

1929 ஆம் ஆண்டு பெரியார் அவரை, சுயமரியாதை மாநாட்டின் தலைவராக அவரை நியமித்தார்

1953 ஆம் ஆண்டு அவரது உடல் நலம் குன்றி, அவர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.

Leave a Comment