பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தமிழ் நாட்டின் சாக்ரட்டிஸ் என்றும் அழைக்கப்பட்டார். இவரின் அவர்கள் எழுச்சியூட்டும் அரசியல் மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை, சாதி வேற்றுமை போன்ற பல தீமைகளுக்கு போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.
இவர் பெண்விடுதலைக்காகவும்,சாதி மறுப்பு போன்ற கொள்கைக்காகவும் போராடியவர். ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். ஆனால் அந்த பெயரை சுருக்கு ஈ.வெ.இராமசாமி என்று அழைப்பார்கள். இவருடைய குடும்பம் வசதியான வணிக குடும்பமாக இருந்தது.
திருபாய் அம்பானி வாழ்கை வரலாறு
ஆரம்ப வாழ்க்கை :
தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் சேர்ந்தார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.
1902 ஆம் ஆண்டு சாதிய பாகுபாடு கடந்து கலப்புத் திருமணம் நடத்தினார் அதில் அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து உணவு அறிந்தினர். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இவருக்கு சண்டை ஏற்ப்பட்டது. பின்னர், இவருடைய பகுத்தறிவு சிந்தனையை ஏற்கமுடியாத இவரின் துறவு கொண்டு காசிக்கு சென்றார்.
காசிக்கு பயணம் :
இவருக்கும் இவர் தந்தைக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனையால் காசிக்கு சென்ற அவருக்கு அங்கு நடந்த நிகழ்வால் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு வித்திட்டது. அங்கு அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார்.
இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் இலைகளில் இருக்கும் உணவை
உண்டு பசியாற்றினார்.
அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட இவருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது.
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை :
காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை ஆகிய காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார்.
1921 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள வெளிநாட்டு கடைகளை மூட போராட்டத்தில் ஈடுபட்ட அவர், இதை எதிர்க்கும் விதமாக தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டினார். பின் போராடத்தில்,கைது செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
1922-ல் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவரை பலரும் ஒன்று சேர்ந்து தேர்தெடுத்தார்கள். பின் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதை காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் மறுத்தனர் பின் பெரியார் அவர்கள் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.
வைக்கம் போராட்டம் :
கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தலித் மக்களுக்கு கோயிலுக்குள் நுழைய தடை விதித்தார்கள் . இதில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்தினர்.
இந்த போராட்டத்தில் பெரியார் மற்றும் அவருடைய மனைவி நாகம்மையாரும் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்காள்.
இந்த போராட்டத்தை அப்போது பெரியார் தொண்டர்கள் விடாமல் கைதுக்கு பின்னும் நடத்தினர் இதில் வெற்றியும் கிடைத்தது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்பு :
இந்தி கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது 1937 ஆம் ஆண்டில். இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடத்தினர்.
பெரியாரும் இதை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பின் 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் பெரியார்.
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு :
பெரியார் , நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944 ஆம் ஆண்டு ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். இந்த கட்சி முழுமையாக சமுதாய மறுமலர்ச்சி, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு இதை மட்டும் கொள்கை கொண்டு இருந்ததால்.
பெரியார் இந்த கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற விரும்பவில்லை.
பெரியார் திராவிடநாடு நமக்கு வேண்டாம் தனி தமிழ்நாடு தான் நம் மக்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
அண்ணாதுரை, பெரியாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டடு திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது,.
ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான பெண்ணை திருணம் செய்யும் பொழுது. அண்ணாதுரை திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) தொடங்கினார் அண்ணா.
இறுதிகாலம் மற்றும் இறப்பு :
இந்து மத நம்பிக்கைகளை முழுவதுமாக எதிர்த்த பெரியார். ஒரு முறை ராமரின் உருவப்படம் எரித்து போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார்.
கடைசிவரை போராடிய பெரியார் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் கடைசி உரையை முடித்துக்கொண்டார்.
இவர் எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர் தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் மறைந்தார்.