Pakathsing History in Tamil – பகத்சிங் வாழ்க்கை வரலாறு

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் என்று போற்றப்படும் புரட்சியாளர் பகத்சிங் உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி இறந்தார் இவரை அனைவரும் மாவீரன் பகத்சிங் என அழைக்கப்பட்டார்.

கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர் என ஆங்கில அரசுக்கும் அவர்களின் ஆட்சிக்கு ஒரு அசாதாரண சக்தியாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின்
வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்தில் சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை :

பகத்சிங்கின் குடும்ப வரலாறே ஒரு விடுதலைப் போராட்ட குடும்பம். ஆகையால் இளம் வயதிலேயே இவருக்கு நாட்டின் மீது ஒருவித அன்பு. பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் சிறு வயதிலேயே நட்பு கொண்டிருந்தார்.

1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நடக்கும் போது, ஆயுதம் ஏதுமின்றி அந்த கூட்டத்தில் இருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் ஆங்கில அரசு கொன்று குவித்தது.

இந்த சம்பவம் பகத்சிங்கின் மனதில் பதிந்தது, இரத்தம் படிந்த அந்த மண்ணை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து கொண்டார். அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் செய்து கொண்டார்.

இதனால் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்த பகத்சிங் அகிம்சை வழியில் போனால் சுதந்திரம் பெறமுடியாது என்று முடிவு செய்து.

இந்துஸ்தான் குடியரசுக் கழகம் என்னும் அமைப்பில் இணைந்தார். பின் 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.

லாகூர் கொலை வழக்கு :

லாகூர் கொலை வழக்கு 1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தின் தலைவர் லாலா லஜபதிராய் ஆங்கில போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார்.

இதனால் கோபம்முற்ற பகத்சிங் அவர் நம்பர்களோட இணைத்து இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக்
கொன்றுவிட்டு தலைமறைவாயினர்.

அந்த நேரத்தில் ஆங்கிலேயர்களின் எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால் கோவம் கொண்ட ஆங்கில அரசு ஒரு புதிய
சட்டத்தை கொண்டுவந்தது.

இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் குண்டு வீசுவதென்று தீர்மானித்து குண்டு வீசினார்.இதனால் பகத்சிங், ராஜகுரு,
மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

இறப்பு :

இவருக்கு ஆங்கில அரசு பல தவறுகளுக்காக தூக்குத்தண்டனை விதித்தார்கள்.

தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம். பின் அவர் தூக்கு மேடையில் சொன்ன வார்த்தைகள்.

என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது.

என்ற வார்த்தைகளை சொல்லி 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.

Leave a Comment