தமிழ் திரைப்படங்களில் இருந்து தமிழ் புராணங்கள் வரை வீரம் என்று சொன்னாலே சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் தான். அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர்.
தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை இவரின் தைரியத்தால்
எதிர்த்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ கட்டபொம்மன் இவரது அடை மொழி.
தனிப்பட்ட வாழ்க்கை :
வீரபாண்டிய கட்டபொம்மன் அவரின் சிறு வயதில் இருந்து அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்களில் வேலைக்கு உதவியாக இருந்தார். கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை திருமணம் செய்தார். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார்.
ஆங்கிலேயர்களுடன் மோதல் :
வீரபாண்டிய கட்டபொம்மன் அரசனாக பொறுப்பை ஏற்ற நேரம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அவர்களின் நிறுவனத்தை தொடங்கினார்கள். இவர்கள் நிறுவனம் திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றி உள்ள பாளையக்காரர்களிடம் இவர்கள் வரி வசூலிக்க திட்டம் போட்டனர்.
இதனால் ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டினர். அப்போது, அந்த பகுதியில் கலெக்டராக இருந்தவர் ஜாக்சன் துறை.
ஒரு முறை ஜாக்சன் துறை. கட்டபொம்மன் இடம் வரி கேட்க வந்த போது.
நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா என்று ஆரமித்து?
வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று வீரமாக சாடினார்.
போர் :
இந்த நிகழ்வுக்கு பிறகு வீரபாண்டியன் வீரமும், விவேகமும் பல பாளையக்காரர்களிடம் கொடிக்கட்டி பறந்தது. ஜாக்சன் துரைக்குப் அந்த இடத்தில் லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார்.
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு மைசூர் மன்னரான திப்பு சுல்தான் இடையூறாக இருந்தார். அவரை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி
கொடுத்தப் பின்னர்.
பின் ஆங்கிலேயே அரசு கட்டபொம்மனை நோக்கி அடுத்த குறி வைத்தனர். இதனால் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போரில் ஆங்கிலேயருக்கு எதிராக இவர்கள் கடுமையாக போராடினார்.
இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால். கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் சென்றார்.
இவர் ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரை கட்டிக்குடுத்து விட்டார்.எட்டப்பன்.
இறப்பு :
பிடிப்பட்ட கட்டபொம்மன் தூக்கு மேடை ஏறும் போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் இருந்து. மனம் நொந்து அங்கு இருந்த மக்களிடம் ‘இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கூறினார்.
ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டியன் மரியாதைகள் :
1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்தார்.அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். சிவாஜியின் நடிப்பைப் பிறரும் விதமாக, எகிப்து பட விழாவில், அவருக்கு ‘சர்வதேச விருது’ கிடைத்தது.
கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் நினைவிடம் உள்ளது.அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.