நான்கு மனைவிகள் – நீதிக்கதைகள்

ஒருவன் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இருந்த போதும், அவனுக்கு நான்காவது மனைவி மீதுதான் அதிக பாசம். மற்ற மூன்று மனைவிகளை விட, அவள் மீது கொஞ்சம் அதிக அக்கறை காட்டுவான். நன்றாக பார்த்துக்கொள்வான்.

அவனுடைய மூன்றாவது மனைவியையும் அவனுக்கு பிடிக்கும். ஆனால் அவளை யாருக்கும் காட்ட மாட்டான். வேறு யாருடனாவது ஓடிவிடுவாளோ என்று பயம் அவனுக்கு. தன் நண்பர்களுக்கு கூட அவளை காட்ட மாட்டான்.

இரண்டாவது மனைவியிடம் அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் மட்டும் சென்று சொல்வான். அவளும் இவனது அனைத்து பிரச்சனைகளையும், அவளது பிரச்சனை போல் முன் நின்று தீர்த்து வைப்பாள்.

முதல் மனைவியை காண்டலே இவனுக்கு பிடிக்காது. அவளை பார்க்கவும் விரும்பமாட்டான். ஆனால் முதல் மனைவிக்கு மற்ற மனைவிகளை விட அவன் மேல் அதிக பாசம்.

இப்படியே சென்று கொண்டிருந்தவன் வயதாகி ஒரு நாள் மரண படுக்கையில் படுத்துவிட்டான். அப்போது அவனது மனைவிகளை பார்த்து உங்களில் யார் என் மீது அதிக பாசம் வைத்திருக்கிறீர்கள், என்னுடன் மரணம் வரை வர தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு அவனது நான்காவது மனைவி முடியாது, இவ்வளவு நாள் நான் உன்னுடன் இருந்ததே அதிகம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அடுத்து மூன்றாவது மனைவியிடம் நீ என்னுடன் கடைசி வரை வருவாயா என்று கேட்டான். நீ சாக போகிறாய், உன்னுடன் நான் ஏன் வரவேண்டும், எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டாள்.

இரண்டாவது மனைவியிடம் கேட்டபோது, என்னால் உன்னுடன் சேர்ந்து மரணம் வரை வர முடியாது. வேண்டுமென்றால், உன்னுடைய இறுதி பயணத்தில் கலந்து கொண்டு, உன்னை நல்ல முறையில் அடக்கம் செய்கிறேன் என்றாள்.

இதை கேட்டதும் கதறி அழுதவன், என்ன இது நாம் நேசித்த யாரும் நம்முடன் வர மறுக்கிறார்கள் என்று புலம்பினான்.

அப்போது வந்த அவனுடைய முதல் மனைவி, நான் உங்களுடன் சேர்த்து மரணிக்க தயார், மரணத்திற்கு பிறகும் உங்களுடனே இருப்பேன் என்றாள்.

நிமிர்த்து அவளை பார்த்தவன், இன்னும் அழுதான். காரணம் அவள் நலிந்து மெலிந்து போயிருந்தாள். நம் மீது இவ்வளவு பாசம் கொண்டிருக்கும் இவளை நாம் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற கவலையில் மரணமடைந்தான்.

இந்த நான்கு மனைவிகள், நம் எல்லோருக்கும் இருக்கிறார்கள். நான்காவது மனைவி நம்முடைய உடல். அதை அழகாக காட்ட, அதற்காக நாம் என்னென்னவோ செய்கிறோம். ஆனால் அது நம்முடன் மரணம் வரை வரப்போவதில்லை.

மூன்றாவது மனைவி நாம் சேர்த்து வைக்கும் பணம் சொத்து. இவைகளை நாம் மற்றவரிடம் கட்ட கூட பயப்படுகிறோம். காரணம் மற்றவர்கள் அபகரித்து விடுவார்களோ என்ற பயம்.

இரண்டாவது மனைவி நம்முடைய குடும்பம், அவர்கள் நமது இறுதி பயணத்துடன் திரும்பிவிடுவார்கள்.

முதல் மனைவி நம்முடைய ஆன்மா. இது தான் நம்முடன் கடைசி வரை வரப்போவது. ஆனால் நம்மில் பலரும் இந்த முதல் மனைவியை சரியாக பார்த்துக்கொள்வதே இல்லை. பல தீய பழக்கங்களினால் அவளை சித்திரவதை செய்கிறோம்.

அதனால் இறுதியில் நமக்கு ஆறுதலாக இருக்கவேண்டியவள் நலிவடைந்து போய்விடுகிறாள். எப்போதும் ஆன்மாவை வலுவாக வைத்திருங்கள். அதற்கு மனிதன் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழ வேண்டும்.

நீங்கள் மற்ற மூன்று மனைவிகளுக்காக தவறு என்று தெரிந்தும் ஒரு சில காரியங்களை செய்யும் போது தான் உங்களுக்குள் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு முதல் மனைவி இறந்து போகிறாள்.

மற்ற மூன்று மனைவிகளால் உங்களுக்கு உல்லாசத்தை மட்டும் தான் கொடுக்க முடியும். முதல் மனைவியால் மட்டும் தான் உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்க முடியும். உல்லாசத்துக்கும் சந்தோஷத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது சிந்தித்து பாருங்கள் புரியும்…

இந்த கதையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

ஆசிரியர் அறிவுரை கதைகள், தினம் ஒரு சிந்தனை கதை, நீதி கதைகள், தன்னம்பிக்கை கதைகள், மாணவர்களுக்கு ஆசிரியரின் அறிவுரை, தன்னம்பிக்கை கதை, தன்னம்பிக்கை கதைகள், neethi kathaigal in tamil, neethi kathaigal in tamil for students, neethi kathaigal in tamil with moral, neethi kathaigal in tamil books, siru kathaigal in tamil with moral, Motivational Stories in Tamil, thathuva kathaigal in tamil, arivurai kathaigal in tamil.

 

Leave a Comment