fbpx

எம்.ஆர்.எப் வெற்றி பயணம் – MRF Success Story

உலகத்தில் பல நாடுகள் தொழிலில் வளர்வதை போல இந்தியாவிலும் எஃகு, சிமெண்ட், கனரகப் போக்குவரத்து போன்ற பல தொழில் துறைகள் வளர்ந்து வருகிறது. இந்த விஸ்பரூப வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முக்கியமான ஒரு இந்திய தொழிலதிபரை பற்றிதான் நாம் பார்க்கப்போகிறோம்.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து எந்த ஒரு உதவி மற்றும் பாதுகாப்பு
இல்லாமல் இந்தியாவில் ஒரு தொழிலை தொடங்கி அதில் சுதந்திரத்திற்கு முன்பே வளர்ச்சி அடைந்தார் கே. எம். மாமென் மாப்பிள்ளை. அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

தொடக்கம் :

கே.எம் தந்தை வங்கி மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருந்தார். இவர் மேல் உள்ள கால் புணர்ச்சியால் டிரிவான்கோர் சமஸ்தானம் இவருக்கு இரண்டு ஆண்டுச் சிறை தண்டனை விதித்து மட்டும் இல்லாமல் அவரது குடும்பச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து.

அவரது குடும்பம் அனைத்து தொழில் மற்றும் சொத்துக்களை இழந்தது. இதனால் இவர் தந்தை கைது செய்யப்பட்டார் இதனால் யாரும் இல்லாமல் இவர் செயின்ட் தாமஸ் கல்லூரியின் ஹாலில் உறங்கத் தொடங்கினார்.

ஈரோட்டில் பிறந்த ஆர்த்தி ரகுராம் 28 வயதில் சுமார் 30 கோடி ரூபாய் வர்த்தகம்

பலூன் பொம்மைகள் விற்ப்பனை :

பின் தன் பட்டப்படிப்பை முடிந்த பிறகு அவர் திருமணம் செய்தார். சிறிது காலம் கழித்து கே.எம் தன் மனைவி குஞ்சம்மாவுடன் இணைந்து, சிறிய பலூன் பொம்மைகளை உற்பத்தி செய்யத் துவங்கினர்.

கே.எம் அவற்றை ஒரு பையில் எடுத்துச் சென்று தெருக்களில் வைத்து அவற்றை விற்பனை செய்தார். வாடிக்கையாளர்களிடம் வித்தியாசமான எளிய அணுகு
முறை அவரின் வெற்றிக்கு வித்திட்டது. நீண்ட காலம் ஒரே தொழில் செய்த பின் வியாபாரத்தைக் கே.எம் முன்நோக்கி அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

டயர் வியாபாரம் அவரது உறவினர்களில் ஒருவர் செய்து வந்தார். அவருக்குத் தேவையான ரப்பர் பொருட்களை வெளிநாட்டு டயர் நிறுவனங்கள் வழங்கி வந்தன. இதனால் ஸ்டீல் மற்றும் உணவகங்கள் துறையில் ஜாம்ஷெட்ஜீ டாட்டா செய்ததைக் கே.எம். செய்ய நினைத்தார்.

எம்.ஆர்.எப் பயணம் :

டிரீட் ரப்பர் சந்தையில் நல்ல முறையில் லாபத்தை ஈட்ட நினைத்த கே.எம். அந்த தயாரிப்பை தயாரிக்க முடிவு எடுத்தார்.பின் எம்ஆர்எப்(MRF) நிறுவனத்தை உருவாக்கி இவர் ஏற்கனவே பயன்படுத்திய டயர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முறையில் டிரீட் ரப்பர் தயாரித்ததால் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

எம்ஆர்எப்(MRF) மிக விரைவில் டிரீட் ரப்பர்களை உருவாகிற ஒரே இந்திய நிறுவனமாக உருவெடுத்தது. இதனால் எம்.ஆர்.எப். பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டது. தரமான பொருட்களை வழங்கி
எம்.ஆர்.எப் சந்தையில் 50% பங்குகளுடன் முன்னணி இடத்தைப் பிடித்தது.

எம்.ஆர்.எப் (MRF) போட்டி காரணமாகப் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது வியாபாரத்தைக் கைவிட்டன. சீரான வளர்ச்சிக்குப் பின் மீண்டும் வியாபாரத்தை விரிவுபடுத்த கே.எம் முடிவு செய்தார்.

இந்திய ஆட்டோமொபைல் டயர் சந்தையில் டன்லப், ஃபயர்ஸ்டோன் மற்றும் குட் இயர் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பங்குச் சந்தையில் முதலீடு இவரது டயர் தயாரிப்பு ஆலையை 1961-இல் நேரு துவங்கி வைத்தார்.

அதே ஆண்டில் இந்நிறுவனம் ஐபிஒ ஒன்றை வெளியிட்டு பங்கு சந்தையில் வெற்றிப் பெற்றது. பின் கே.எம். கூட்டு சேர்ந்த அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்பம் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக அமைக்க முடிவு செய்தார்.

ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. இதனால் பொருட்கள் வியாபாரம் சரிவடையத் துவங்கியது, இதை வைத்து இந்திய நிறுவனங்களால் டயர்களைத் தயாரிக்க முடியாது என்ற வாக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் வதந்திகளைப் பரப்பின.

மிகவும் மோசமான நிலை :

எம்.ஆர்.எப் நிலைமை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து விஷயத்தை அரசு அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல எம்ஆர்எப் முடிவு செய்தது. இதனால் இந்திய அரசு சாலை விதிமுறைகளின் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இது எம்ஆர்எப் போன்ற நிறுவனங்கள் போட்டியிட மறு வாய்ப்பாக அமைந்தது. கே.எம். பிறப்பில் ஓவியர் மற்றும் விளம்பரம் செய்வதில் திறன் கொண்டிருந்தார்.

தனது பலத்தைச் சரியாகப் பயன்படுத்திப் பல்வேறு விளம்பர நிறுவனங்களை அணுகி. இறுதியில் இதற்கான வாய்ப்பு அலிக்யூ பத்மஸ்ரீக்கு வழங்கப்பட்டது. விளம்பர துறையின் தந்தை அலிக்யூ இந்திய விளம்பர துறையின் தந்தையாக அறியப்பட்டார்.

இதன்பின் 1964-இல் MRF Muscleman பிறந்தது. மசுல்மேன் என்ற வார்த்தை எம்.ஆர்.எப் உருவாக்கிய டயர்களின் உறுதித் தன்மையை விளக்கியது. போட்டியாளர்களை நண்பர்களாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது. வித்தியாசமான கதைகள் மற்றும் தந்திரங்களைக் கொண்டு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தார்.

வெற்றி :

இவரின் முயற்சியால் டன்லப் மற்றும் ஃபயர்ஸ்டோன் நிறுவனங்கள் மட்டுமின்றி உலகின் முன்னணி வெளிநாட்டு பிறாண்டாக விளங்கிய மிக்கலின் நிறுவனத்தையும் வீழ்த்தினார். இதோடு 2015-இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்வதேச ஒப்பந்ததாரராகும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது இந்த நிறுவனம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.