fbpx

ஈரோட்டில் பிறந்த ஆர்த்தி ரகுராம் 28 வயதில் சுமார் 30 கோடி ரூபாய் வர்த்தகம் – Aarti Raghuram Success Story:

இந்தியாவில் பல வர்த்தகத் துறைகள் இருந்தாலும், அதில் சில துறைகளில் மட்டுமே புதிதாக வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்.அப்படி ஒரு துறை தான் பியூட்டி மற்றும் பர்சனல் கேர் பொருட்கள் துறை, இத்துறையில் பெரு நிறுவனங்களோ அல்லது வெளிநாட்டில் பிரபலமான நிறுவனங்கள் மட்டுமே தான் எளிதில் வெற்றி பெற முடியும்.


இப்படி பெரும் போட்டி இருக்கும் துறையில் தமிழ்நாட்டில் ஈரோட்டை சேர்ந்த ஆர்த்தி ரகுராம் என்பவர் 30 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை :

தமிழ் நாட்டில் இருக்கும் ஈரோட்டில் பிறந்த ஆர்த்தி ரகுராம் 28 வயதில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை உருவாக்கிய தேகா ஆர்கானிஸ் என்னும் ஸ்கின் கேர் மற்றும் பர்சனல் கேர் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

ஆர்த்தி ரகுராம் தந்தை ஆர்த்திக் கம்பிரசர் என்ற நிறுவனத்தை வைத்திருந்தார், இவர் சொந்தமாகக் கம்பிரசர் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். ஆர்த்தி 12ஆம் வகுப்பு வரையில் திருப்பூரிலும், கல்லூரி படிப்பை கோவையிலும் முடித்தார்.

கோவையில் பிஎஸ்ஜி ஆர்ட்ஸ் கல்லூரியில் பிஏ எக்னாமிக்ஸ், ஜேசன்ஸ் ஸ்கூல் ஆ பிஸ்னஸ்-ல் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பிஜி டிப்லோமா முடித்தார்.

16 வயதான பெண்ணுக்கு சென்சிடிவ் சருமம், பரு மற்றும் மாசு மருவால் பாதிக்கப்படும் அப்படி தான் ஆர்த்தியும் பாதிக்கப்பட்டால்.

ஒரு இளம் பெண்ணாக, பலவிதமான கடுமையான இரசாயனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மீதான நம்பிக்கையை இழந்த ஆர்த்தி , இந்திய அழகு பராமரிப்பு முறையின் ஆத்மாவை உருவாக்கும் ‘ஓல்ட் இஸ் கோல்ட்’
ஆலோசனைகளில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால்.

இது அவரது தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளித்தது மற்றும் இன்றி ஒரு தொழிலாக மாரி இருக்கிறது.

பிலிப்கார்ட் வெற்றி பயணம்

தொழில் பயணம் :

பின் அவருக்கு தானாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆகையால் வீட்டில் தயாரிக்கும் ஸ்கின்கேர் ஐடியா மீது ஆர்வம் அதிகரித்த பின்பு பல காஸ்மெட்டிக்ஸ் வொர்க்ஷாப்பில் பங்கேற்றார், அப்படி ஒரு வொர்க்ஷாப் தான் ஆர்த்தியின் வாழ்க்கையை மாற்றியது என்று கூறலாம்.

2017ல் அவர் சோப் செய்யும் வொர்க் ஷாப்-ல் கலந்துகொண்டார். இதன் பின்பு ஆர்த்தி தானாக பல முயற்ச்சி செய்து சார்கோல் சோப் தயாரித்தார், இதைத் அவர் பயன்படுத்திப் பார்க்கும் போது ஸ்கின் க்ளோ ஆனது மட்டும் அல்லாமல் முகப்பரு குறையத் துவங்கியது.

பின் அவற்றை சோதித்து பார்க்க நண்பர்கள், உறவினர்களிடம் அளித்த போது நல்ல ரிசல்ட் வந்தாக பூரிப்புடன் ஆர்த்திக் கூறுகிறார். பின் இந்த சார்கோல்
சோப் உடன் பிற, வீட்டில் செய்த ஆரஞ்சு தோல் சோப்பு, ரோஜா சோப்பு, மூலிகை சோப்களை ஈரோடு வேல்ஸ் அகடமி பள்ளியில் விற்பனை செய்த போது ஓரே நாளில் 11,050 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஆர்த்திக் கூறினார்.

தொழில் வளர்ச்சி :

பின் இவர் கட்டுமான துறையில் இருக்கும் ரகுராம் என்பவரை திருமணம் செய்தார். இவர் தொழில் நன்றாக சென்றதால் ரகுராம் மற்றும் குடும்பங்களின் உதவியுடன் தேகா ர்கானிஸ் என்ற பிராண்டை ஈரோட்டில் உருவாக்கி தொழிலை மேம்படுத்தினார்.

இவர் தொழில் நன்றாக சென்று கொண்டு இருந்த போது தேகா காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் அதன் இணையத் தளத்திலும், சில முக்கியமான கடைகளில் மட்டுமே கிடைக்கும் வகையில் வர்த்தகச் சந்தையை உருவாக்கியுள்ளார் ஆர்த்தி ரகுராம்.

தற்போது தேகா காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் பிற ஈகாமர்ஸ் தளத்தில் இல்லை எனவும் விளக்கம் கொடுத்துள்ள ஆர்த்தி, மக்களின் பரிந்துரை மற்றும் வாய் மொழியாகவே வர்த்தகம் விரிவாக்கம் அடைந்து வருவதாகக் கூறுகிறார்
ஆர்த்தி.

மேலும் மொத்த வர்த்தகத்தில் 8-10 சதவீதம் வெளிநாட்டு வர்த்தகம் என்றும் பெருமையாகக் கூறுகிறார் ஆர்த்தி. இன்று இவருடைய சார்கோல் சோப் மற்றும் பீட்ரூட் லிப் பாம் தான் அதிகம் விற்பனையாகும் பொருட்களாக உள்ளது.

சோப், பேஸ் பேக், ஹேர் ஆயில், ஹேர் சீரம் எனப் பியூட்டி மற்றும்
பர்சனல் கேர் பிரிவில் சுமார் 100 பொருட்கள் உடன் 30 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருவதாக ஆர்த்திக் கூறுகிறார்.

நம்பிக்கை :

முழு தேசத்தையும் முன்னேற்ற ஒரே வழி அந்த நாட்டின் பெண்கள் வளர்ச்சி அடைவதுதான் என்று ஆர்த்தி நம்புகிறார். ஏற்றத்தாழ்வுகளை சிதைக்க, நியாயமற்ற அழகு தரங்களை உடைக்க விழிப்புணர்வை ஊக்குவிக்கிறார். உலகில் இருக்கும் அணைத்து பெண்களும் அழகாக இருக்கிறார்கள் அது அவள் சரும நிறத்தை அழகாக வைக்க தூண்டுகிறது.


இயற்கை பொருட்கள் உங்கள் சருமத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கவசமாக செயல்படுகின்றன, இது ஒவ்வொரு நாளும் உங்கள் தோலில் பாதித்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் விளைவை தடுக்கிறது வெவ்வேறு சரும நிறம் என்பது இயற்கையின் வெவ்வேறு வண்ணங்களைப் போன்றவை, அவற்றில் எந்த ஒப்பீடும் இல்லை, ஒவ்வொரு வண்ணமும் ஒரு
தனித்துவமான கதையைக் கொண்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.