முருங்கையில் கோடிகளை அள்ளும் கரூர் பெண் – Deepika Success Story

இன்றைய இளம் தலைமுறையினர் வேலைக்கு போவதை காட்டிலும் சொந்த தொழில் செய்ய ஆசைபடுகிரர்கள். அதே வேளையில் எந்தத் துறையிலும் வெற்றி என்பது நமக்கு கிடைப்பது கடினம்.

அதிலும் விவசாயத் துறையில் வெற்றி பெருவது மிகவும் கடினம். அதில் ஒன்றைத் தான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபிகா என்ற பெண் செய்து உள்ளார்.

தொடக்கம் :

குழந்தையில் இருந்து தீபிகா அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் விளை பொருட்களை விற்க போதுமான சந்தைகள் இல்லை என்பதை உணர்ந்தார் இதனால் விவசாயிகள் பல சோதனைகள் மற்றும் இன்னல்களைப் அனுபவிப்பதை கண்டு மனம் உடைந்தார்.

அவரது தந்தை விவசாயி என்பதால் விளைபொருட்கள் குறித்து அவரிடம் நிறையப் பேசும் பொது கரூர் பகுதியில் முருங்கை அதிகப் படியாக விளையும் என்பதை அவர் தந்தை கூறியுள்ளதாகவும் தீபிகா குறிப்பிட்டு உள்ளார்.


அப்படிப் பேசும் போதும் விவசாயத்தின் நினுக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தீபிகாவிற்குத் அவர் தந்தை கற்று கொடுத்தார்.

இதை அடி மனத்தில் ஆழமாகப் வைத்து படிப்பை முடித்ததும் விவசாயத்தைச் சார்ந்த தொழிலில் இறங்கினார் தீபிகா.

எம்.ஆர்.எப் வெற்றி பயணம்

முடிவு செய்தார் தீபிகா :

தீபிகா Actuarial Science என்ற துறையில் எம்எஸ்சி பட்டம் பெற்றார். பின் கரூர் பகுதியில் அதிகம் விளையும் முருங்கையின் வளர்ச்சி இருப்பதை உணர்ந்து மட்டும் இல்லாமல்.

அதை விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாமல் இருப்பதையும் உணர்ந்துள்ளார். இதன் மூலம் முருங்கையை வைத்து ஏதாவது தயாரிக்க முடிவு செய்தார் தீபிகா.

GOOD LEAF நிறுவனம் :

பின் அவர் தந்தை இடம் இந்த யோசனையை சொல்லி தீபிகா அவரை இணைந்து GOOD LEAF என்ற நிறுவனத்தை உருவாக்கி , முருங்கையில் பல்வேறு அழகு சார்ந்த பொருட்களைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்தார்.

இவர் கரூர், திண்டுக்கல், வேலூர் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விவசாயிகளிடம் 5 முதல் 100 ரூபாய் வரையில் வாங்கி தயாரித்து மட்டும் இல்லாமல் பல ஏக்கரில் முருங்கை விவசாயமும் செய்து வருகிறார்.

பொருட்கள் தயாரிப்பு :

பேஸ் ஸ்கிரப், ஹேர் ஆயில், ஹேர் சீரம்,முருங்கை பாட் , முருங்கை ரைஸ் மிக்ஸ், முருங்கை சட்னி பவுடர், முருங்கை டீ , அதை சார்ந்து சோப் தயாரித்து வருகிறார்.

விற்பனை :

தற்போது முருங்கை ஹெர்பல் டீ மிகப்பெரிய அளவில் இவர் விற்பனை செய்து வருகிறார்.

GOOD LEAF பொருட்கள் தற்போது ரீடைல், ஆன்லைன் என அனைத்து வர்த்தகச் சந்தையிலும் விற்பனை செய்து வருகிறார் தீபிகா. இந்தக் கட்டமைப்பைக் கொண்டு தீபிகா கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து வருகிறார்.

Leave a Comment