fbpx

சுரேஷ்-ஜார்ஜ் வாழ்க்கையின் வெற்றி பயணம் – MacAppStudio Success Story :

சுரேஷ் மற்றும் ஜார்ஜ் இருவரும் திருச்சி பள்ளியில் இருந்து நண்பர்கள். வெவ்வேறு கல்லூரியில் பொறியியல் படித்தாலும் தொடர்பிலே இருந்தார்கள். பின் சென்னை வந்த இவர்கள் கார்ப்பரேட் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இருவரும் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தாலும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்னும் இவர்களுக்குள் இருந்தது.

அந்த சமயத்தில் இண்டெல் நிறுவனம் ஆப் போட்டியை நடத்தியது. சர்வதேச அளவில் பல நாடுகளில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் அந்த போட்டியில் இவர்கள் வெற்றி அடைந்தார்கள்.

அந்த சமயத்தில் 20,000 டாலர் பணத்தை இண்டெல் பரிசுத் தொகையாக வழங்கியது. அதனால் வேலையில் இருந்துகொண்டே பல போட்டிகளில் இவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் இவர்கள் 2 லட்சம் டாலர் அளவுக்கு பரிசுத்தொகையை வென்றார்கள்.

அப்போது தான் இவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அதனால் இந்த பரிசுத் தொகையை வீட்டில் கொடுத்துவிட்டு, பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ‘MacAppStudio’ நிறுவனம் 2012ல் தொடங்கினார்கள்.

முதல் மூன்று ஆண்டு :

முதல் மூன்று ஆண்டுகள் ஊழியர்கள் யாரும் இல்லாமல் இருவர்கள் மட்டுமே நிறுவனத்தை நடத்தினார்கள். ஆப்பிள் ஆப் ஸ்டோருக்காக ஆப் தயாரித்து பதிவுற்றினார்கள் மூன்று ஆண்டுகளில் சுமார் 18 ஆப் தயாரித்தார்கள். இதில் 6 ஆப் ஓரளவுக்கு வெற்றிபெற்றது.

இந்த ஆப் இந்தியர்களுக்கானது அல்ல. அமெரிக்கர்களுக்காக ஆப் தயாரித்தார்கள். அமெரிக்கர்கள் பணம் செலுத்தி ஆப் வாங்குவார்கள் அவையெல்லாம் மிக சொற்பமான வருமானம் மட்டுமே. இந்த மூன்று ஆண்டுகளில் இவர்களுடைய சேமிப்பு கிட்டத்தட்ட கரைந்துவிட்டது.

வீட்டுக்காக வாங்கிய கடனை சில தவணைகள் செலுத்த முடியவில்லை. மருத்துவச் செலவுக்கு கூட காசு இல்லை என்னும் நிலைமை. இந்த நிலையில், இவர்களுக்கு மாதம் சில ஆயிரம் வருமானம் கொடுத்த ஆப் என்றால் அது Moneybag என்னும் ஆப்தான்.

தனிநபர்களின் வருமானம், செலவுகளை நிர்வகிக்கும் ஆப் அது. மூன்று ஆண்டுகளாக பல ஆப்-களை இவர்கள் தயார் செய்திருந்தாலும் இந்த மணிபேக் ஆப்-க்காக பெருமளவு நேரம் ஒதுக்கி இருந்தார்கள். கிட்டத்தட்ட இவர்களுடைய மூன்று வருட உழைப்பு வீணாகிக்கொண்டிருந்தது.

போகர் விளையாட்டின் நாயகன் டான் பில்செரியன் வாழ்க்கை பயணம்

அமெரிக்காவில் இருந்து இ-மெயில் :

ஒரு நாள் டீ கடையில் இருக்கும் போது தீடிரென அமெரிக்காவில் இருந்து இவர்களுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அமெரிக்காவின் முக்கியமான ஆப் டிஸ்டிபியூட்டர். இவர்களின் ஆப்-களை அவர் நிறுவனம் மூலமாக விநியோகம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.

பின் இவர்களுக்கு பிஸினஸ் செய்ய விரும்புகிறார் என்பதைத் தாண்டி, எப்படி நம்மை கண்டுபிடித்தார் என்னும் கேள்வியே எங்களிடம் இருந்தது. டாரண்ட் தளத்தில் ’நீங்கள்தான் நம்பர் ஒன்’ எனச் சொன்னார் அந்த பிஸினஸ் மேன் . அவர்களுடைய விற்பனை யுத்தி என்பது பல ஆப்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்வது.

ஒரு டவுன்லோடுக்கு 3 டாலர் எனக் அந்த பிஸினஸ் மேன் கேட்டார். இவர்கள் 6 டாலர் கேட்டார்கள். இறுதியாக 4.5 டாலர் விலையை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் எண்ணிக்கை என்பது ஒரு லட்சம் டவுன்லோடு. கிட்டத்தட்ட 4.5 லட்சம் டாலர் ஒரே நொடியில் இவர்கள் வாழ்க்கை மாறியது. கிட்டத்தட்ட திவால் என்னும் நிலையில் இருந்து மீண்டார்கள்.

இண்டெல் நிறுவனம் அழைப்பு :

இந்த நிலையில் இண்டெல் நிறுவனம் ஒரு ஆப் தயாரிக்க திட்டமிட்டது. இவர்கள் இண்டெல் நிறுவனத்திடம் பல விருதுளை வாங்கி இருப்பதால் மற்றவர்கள் வடிவமைப்பதைவிட இவர்கள் வடிமைப்பதே நன்றாக இருக்கும் எனக் கருதினார்கள். அதனால் இண்டெல் செயலியை வடிவமைத்துக் கொடுத்தார்கள்.

இதனுடைய மதிப்பு 2.5 லட்சம் டாலர்கள். இன்டெலுக்கு பிறகு வேறு நிறுவனங்களுக்காக ஆப் வடிமைக்கத் கொடுக்க தொடங்கினார்கள். முதல் பெரிய புராஜக்ட் ஏஜிஎஸ் சினிமாஸ்.

ஆப் ஸ்டூடியோவின் வளர்ச்சி :

தற்போது 120 நபர்கள் மாக் ஆப் ஸ்டூடியோவில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவை இலவசமாக வழங்குகிறார்கள். சம்பளமும் சந்தை நிலவரத்தைவிட அதிகமாக வழங்குகிறார்கள் அதேபோல, வேலை வழங்குவதிலும் பெரிய படிப்பு படித்தவர்களை நாங்கள் எடுப்பதில்லை.

அதுமட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் ஊழியருக்கு தங்க செயின்,
1 லட்ச ரூபாய் பரிசு என அவ்வப்போது அவர்களின் வேலைக்கு ஏற்ப சன்மானம் வழங்கி ஊக்கப்படுத்துவது சுரேஷ் மற்றும் ஜார்ஜின் வழக்கம். இப்படி தங்கள் குழு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மீது நம்பிக்கை வைத்ததன் பலனாக மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது மாக் ஆப் ஸ்டூடியோ.

இதனால் பலரும் இவர்களிடம் வேலை கேட்டு வருகிறார்கள். அனைவரையும் இவர்களால் வேலைக்கு எடுக்க முடியாது. அதனால் பிரிட்ஜ் என்னும் ஆன்லைன் கோர்ஸ் நடத்தி இதில் டெக்னாலஜியை புரியும் படி சொல்லிக்கொடுப்பதால் இவர்களிடம் வேலை கிடைக்கவில்லை என்றால் மற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதில் பெறுவோருக்கு இருக்கும்.

கோவிட் காலம் :

கோவிட் காலத்தில் பல நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்தன. பலரை வேலையைவிட்டு நீக்கினர். ஆனால் இவர்கள் இதனைச் செய்ய வில்லை. ஒரு கட்டத்தில் புதிய புராஜ்க்ட்கள் குறைவான இருந்த சமயத்த்தில், இவர்கள் சொந்த பணத்தை நிறுவனத்தில் முதலீடு செய்து.

இதனை வைத்துதான் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வெண்டார்களுக்கான தொகையை இவர்கள் கொடுத்தார்கள்.

ஆப்கள் வடிவமைக்கும் திட்டம் :

ஆரம்ப காலத்தில் இருந்தது சொந்தமாக ஆப்கள் வடிவமைக்கும் திட்டம் இவர்களுக்கு இருக்கிறது. தற்போது புதிய நிறுவனம் ஒன்றினை உருவாக்கி வருகிறார்கள். இதில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்குக்கு மாற்றான சமூக வலைதளத்தை வடிவமைத்து வருகிறார்கள்.

குறைந்தபட்சம் ஒரு லட்சம் டாலருக்கு கீழே இவர்கள் எந்த ஆர்டரையும் எடுப்பதில்லை. இன்று இவர்கள் ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் அளவிற்கு டர்ன் ஓவர் பெறுகிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.