அடிமைப்பட்டு கிடக்கும் தமிழரின் விடுதலை, முன்னேற்றம் எதிர்காலத்திற்கு தடையாக உள்ள அரசியல், சமூக, வர்க்க பாகுபாடுகளை களைவதற்கு தமது வாழ்வையே முற்றுமுழுதாக அர்ப்பணித்து வரும் சீமான் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :
சீமான் 1966 ஆம் ஆண்டு, நவம்பர் 08 ஆம் நாள் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்திலுள்ள அரணையூர் எனும் கிராமத்தில் செந்தமிழன் மற்றும் அன்னம்மாளுக்கு மகனாக பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் ஒருவர்.
தி.வே. சுந்தரம் அய்யங்கார வாழ்க்கை வரலாறு
ஆரம்ப வாழ்க்கை :
தனது சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த செய்த சீமான், 1987-ம் ஆண்டு ஜாஹீர் உசேன் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் படித்தார்.
பட்டப்படிப்பை முடித்த சீமான் சினிமாதுறையில் அதிகம் ஆர்வம் கொண்டதால், 1991-ம் ஆண்டு ஊரிலிருந்து சென்னைக்குக் வந்தார் அங்கு மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.
பின் அவர் தம்பி,வாழ்த்துகள் முதலிய திரைப்படங்களை இயக்கியும், மாயாண்டி குடும்பத்தார் போன்ற பல திரைப்படங்களில் நடித்தும் திரையுலகில் அவரின் முத்திரையைப் பதித்தார்.
இல்லற வாழ்க்கை :
சீமான் முன்னதாக நடிகை விஜயலட்சுமியுடன் உறவில் இருந்தார், அவர் 2007 ஆம் ஆண்டில் தனது வாழ்த்துகள் திரைப்படத்தின் மூலம் சந்தித்தார். 2011இல், சீமான் தன்னை ஏமாற்றியதற்காக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 2011 ஆம் ஆண்டில், இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்வதில் சீமான் தனது ஆர்வத்தை காட்டினார்.
பின் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.
ஆரம்பகால அரசியல் :
சீமானின் ஆரம்பகால அரசியலுக்கு அடித்தளமாக அமைந்தது திராவிட இயக்க மேடைகள்தாம். கடவுள் மறுப்பு கொள்கை, நாத்திகம், சாதி ஒழிப்பு என்று பேசிவந்தவர், 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வை ஆதரித்து பிரசாரங்களையும் மேற்கொண்டார்.
அதன் பின்னர் தமிழீழ ஆதரவு, விடுதலைப்புலிகளின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்பி என்ற திரைப்படத்தை இயக்கினார். பின் 2007-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 53-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
2008-ம் ஆண்டில் இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமடைந்த வேளையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார்.
தமிழர் எழுச்சி உரை வீச்சு :
2008-ம் ஆண்டின் இறுதியில், ஈரோட்டில் நடைபெற்ற தமிழர் எழுச்சி உரை வீச்சு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் மட்டும் ஈழ ஆதரவு பேச்சுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட தொடர்ந்து ஐந்துமுறை கைதுசெய்யப்பட்டார் சீமான்.
நாம் தமிழர் :
இதன் விளைவாக, 2009-ம் ஆண்டு, மே 18-ம் நாள் மதுரையில் சீமான் தலைமையில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி நாம் தமிழர் என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்தனர்.
கலம் :
2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்தும் அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.
ஆனால் அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து
தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.
2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் 1.1 சதவிகித வாக்குகளை அக்கட்சி பெற்றது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் 4% வாக்குகளைப் பெற்றது, இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்தார்.
2021 சட்டமன்ற தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார். திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் தோல்வியடைந்தாலும் 48,597 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் அதிக தொகுதிகளில் மூன்றாமிடமும், 6.72 சதவிகித வாக்குகளையும் அக்கட்சி பெற்றது.
பங்களிப்பு :
தமிழர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான், ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகள், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சேலம் எட்டுவழிச் சாலை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற சூழலியல் சார்ந்த போராட்டம், நீட், என்.இ.பி., சிஏஏ, இஐஏ எதிர்ப்பு போன்ற மாநில உரிமைகள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்தும் வருகிறார்.