Tamil Quotes

சுரேஷ்-ஜார்ஜ் வாழ்க்கையின் வெற்றி பயணம் – MacAppStudio Success Story

சுரேஷ் மற்றும் ஜார்ஜ் இருவரும் திருச்சி பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். நண்பர்கள். கல்லூரியில் பொறியியல் படிப்பதிலும் ஒன்றாக படித்தார்கள். பின் சென்னை வந்த இவர்கள் கார்ப்பரேட் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இருவரும் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தாலும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்னும் இவர்களுக்குள் இருந்தது.

அந்த நேரம் இண்டெல் நிறுவனம் ஆப் போட்டியை உலகம் முழுக்க நடத்தியது. இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து பலர் கலந்து கொண்டார்கள். ஆனால் அந்த போட்டியில் இவர்கள் வெற்றி பெற்றனர்.

அவர்களுக்கு 20,000 டாலர் பணத்தை இண்டெல் நிறுவனம் பரிசுத் தொகையாக வழங்கியது. பின் வேலையில் இருந்துகொண்டே அவர்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரம் சேர்ந்து குறுகிய காலத்தில் 2 லட்சம் டாலர் பரிசுத்தொகையை வென்றார்கள்.

பின் இவர்கள் இருவரும் வேலையை விட்டுவிட்டு ‘MacAppStudio’ நிறுவனத்தை 2012ல் தொடங்கினார்கள்.

முதல் மூன்று ஆண்டு :

முதல் மூன்று ஆண்டுகள் பணியில் யாரையும் எடுக்காமல் இவர்கள் இருவரும் நிறுவனத்தை நடத்தினார்கள். இவர்கள் மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 18 ஆப் தயாரித்தார்கள்.18-ல் இதில் 6 ஆப் வெற்றிபெற்றது.

இவர்கள் இருவரும் சேர்ந்து அமெரிக்கா நபர்களுக்கு ஆப் தயாரித்து கொடுத்து வந்தனர்.ஆனால் இவர்களுக்கு ஓர் அளவு மட்டுமே பணம் கிடைத்தது.

வீட்டுக்காக வாங்கிய கடனை கூட கொடுக்க முடியவில்லை. மருத்துவச் செலவுக்கு கூட காசு இல்லை.கிட்டத்தட்ட இவர்களுடைய மூன்று வருட உழைப்பு வீணாகிக்கொண்டிருந்தது.

போகர் விளையாட்டின் நாயகன் டான் பில்செரியன் வாழ்க்கை பயணம்

அமெரிக்காவில் இருந்து இ-மெயில் :

ஒரு நாள் டீ கடையில் இருக்கும் போது ஒரு இ-மெயில் அமெரிக்காவில் இருந்து இவர்களுக்கு வந்தது. அந்த இ-மெயிலில் இவர்களின் ஆப்-களை அவர்கள் விநியோகம் செய்ய விரும்புவதாகத் கூறினார்கள்.

இவர்கள் இருவருக்கும் எப்படி நம்மை இவருக்கு தெரியும் என்ற கேள்வி பின் அவர் சொன்ன பதில் டாரண்ட் தளத்தில் ’நீங்கள்தான் நம்பர் ஒன்’ எனச் சொன்னார்.

பின் அவர்கள் ஆப் அவரிடம் பிற்பனை செய்ததில் கிட்டத்தட்ட 4.5 லட்சம் டாலர் ஒரே நொடியில் கிடைத்தது.

இண்டெல் நிறுவனம் அழைப்பு :

இந்த நிலையில் இண்டெல் நிறுவனம் ஒரு ஆப் தயாரிக்க இவர்களை அழைத்தார்கள் . அதனால் இண்டெல் செயலியை வடிவமைத்துக் கொடுத்தார்கள். அதற்காக 2.5 லட்சம் டாலர்கள் இவர்களுக்கு கிடைத்தது.

ஆப் ஸ்டூடியோவின் வளர்ச்சி :

பின் படிப்படியாக வளர்ந்து தற்போது 120 நபர்கள் மாக் ஆப் ஸ்டூடியோவில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவை இலவசமாக வழங்குகிறார்கள் சுரேஷ் மற்றும் ஜார்ஜ்.

அதுமட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் ஊழியருக்கு பல பரிசையும்
சன்மானம் வழங்கி ஊக்கப்படுத்துவது சுரேஷ் மற்றும் ஜார்ஜின் வழக்கம். இப்படி தங்கள் குழு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மீது நம்பிக்கை வைத்ததன் பலனாக மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது மாக் ஆப் ஸ்டூடியோ.

இதனால் பலரும் இவர்களிடம் வேலை கேட்டு வருகிறார்கள். அனைவரையும் இவர்களால் வேலைக்கு எடுக்க முடியாது. அதனால் பிரிட்ஜ் என்னும் ஆன்லைன் கோர்ஸ் நடத்தி இதில் டெக்னாலஜியை புரியும் படி சொல்லிக்கொடுப்பதால் இவர்களிடம் வேலை கிடைக்கவில்லை என்றால் மற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதில் பெறுவோருக்கு இருக்கும்.

கோவிட் காலம் :

கோவிட் காலத்தில் பல நிறுவனங்கள் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளத்தைக் குறைத்தது மற்றும் வேலையைவிட்டு நீக்கினர். ஆனால் இவர்கள் இதனைச் செய்ய வில்லை. அவர்களின் சொந்த பணத்தை வைத்து தான். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள்.

ஆப்கள் வடிவமைக்கும் திட்டம் :

ஆரம்ப காலத்தில் இருந்தது சொந்தமாக ஆப்கள் வடிவமைக்கும் திட்டம் இவர்களுக்கு இருந்தது இப்போது புதிய நிறுவனம் ஒன்றினை உருவாக்கி வருகிறார்கள். இதில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்குக்கு மாற்றான சமூக வலைதளத்தை வடிவமைத்து வருகிறார்கள்.

குறைந்தபட்சம் ஒரு லட்சம் டாலருக்கு கீழே இவர்கள் எந்த ஆர்டரையும் எடுப்பதில்லை. இன்று இவர்கள் ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் அளவிற்கு டர்ன் ஓவர் பெறுகிறார்கள்.

Exit mobile version