Ilayaraja History in Tamil – இளையராஜா வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதுவரை 1850 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களுக்கு பாடல் மற்றும் இசை அமைத்தும் இருக்கிறார்.

தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.

இளையராஜா வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள்.

இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், கமலாம்மாள், பத்மாவதி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர்.

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார்.

பின்னர், லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கமும் வென்றார்.

இல்லற வாழ்க்கை :

அவர், ஜீவா என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் பிறந்தனர்.

இசையுலகம்:

1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் வேலை செய்தார். அவரது இசைக்குழுவில் இளையராஜா 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

இந்தக் காலக்கட்டங்களில் தான், அவருக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி, சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.

திரையுலக வாழ்க்கை :

1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார் இளையராஜா . சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.

பஞ்சு அருணாச்சலம் இவரை 1975ல் ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய “மச்சானைப் பாத்தீங்களா..” என்ற பாடல்.

அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.


பல நூற்றுக்கணக்கானப் படங்களுக்கு இசையமைத்துப் புகழின் உச்சிக்கே சென்றார். தமிழ் மொழி மட்டுமல்லாமல், அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என 1850 க்கும் மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.

எழுத்தாளராக இளையராஜா :

அவரது பெற்றோர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், அவர் இந்துமதத்தின் மீது மிகவும் பற்றுகொண்டவர். இவர் ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

அவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’ போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

அரசியல் :

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதில் 2022 ஆம் ஆண்டு இளையராஜாவை தேர்வு செய்து உள்ளார்கள்.

விருது :

1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பித்தது.

2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு ‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்.

1988 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது.

4 முறை தேசிய விருது.

மிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது 3 முறை.

Leave a Comment