fbpx

A.R. Rahman History in Tamil – ஏ.ஆர். ரகுமான் வாழ்க்கை வரலாறு

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட
இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.

தமிழ்நாட்டு இசை பாணி என்று பல பாணிகளை ஒன்று கலந்த ஒரு வித்தியாசமான இசை மக்களை ஈர்த்தது. அந்த வித்தியாசமான புதிய பாணியிலான இசையை கொண்டு தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்திய மக்களையும் தன் இசை திறமையால் கவர்ந்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

இசைக்கென்றே தன்னை அர்ப்பணித்த இசை வேந்தன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி ஆர்.கே.சேகர் – கஸ்தூரி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார்.

இளையராஜா வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

ஏ.ஆர். ரகுமான் தந்தை இவரது சிறு வயதிலேயே காலமானார். இதனால தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து இசை கற்க ஆரம்பித்தார்.

ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார்.

இதனால் தான் இவருடைய குடும்பம் முழுமையாக இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. அப்பொழுது தான் இவருடைய திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.

இசை பயணம் :

தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்ட ஏ.ஆர். ரகுமான் . தன்னுடைய 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார்.

பின் டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு தனது முதல் படமான ‘ரோஜா’ வில் அறிமுகமானார்.முதல் படமே இவருக்கு பெரும் பெயரை சேர்த்தது.

இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. 25 வருட திரைப்பட வாழ்வில் தமிழ், இந்தி, தெலுங்கு, சீனா, பெங்காலி, ஈரான், ஆங்கில படங்களின் மூலம் புதிய புதிய பாணியிலான இசையை உலக மக்களுக்கு வழங்கி அவர்களை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று இசையை ரசிக்க வைத்தார். பல மொழித்திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.

இல்லற வாழ்க்கை :

ஏ. ஆர். ரகுமான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏ.ஆர். அமீன் என்ற மகனும். கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் என்ற இரு மகளும் பிறந்தனர்.

சாதனைகள் :

1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கண்ணா’ என்ற திரைப்படத்திற்கு தேசியவிருது.
2002 ஆம் ஆண்டு ‘லகான்’ என்ற திரைப்படத்திற்கு தேசியவிருது.
2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திற்கும் தேசியவிருது.
ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருது.
ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருது.
காதலன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருது.
மின்சார கனவு படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருது.

ஆஸ்கார் விருதுபெற்ற ஸ்லம் டாக் மில்லியனியர் :

‘ஆஸ்கர்’ என்பது ஆங்கில படங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பரிசு. அதை உலக நாடுகளுக்கும் வழங்க ஆஸ்கர் கமிட்டி கொடுக்க முன் வந்த போது இந்தியா சினிமாக்காரர்களும் அதை பெறுவதை.

தங்கள் வாழ்நாள் கனவாக நினைத்தனர். வருடா வருடம் சில படங்கள் சென்றாலும் இது நாள் வரை எந்த படமும் வாங்கியதில்லை.சத்யஜித்ரே
என்பவர் மட்டும் வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருதை பெற்றார்.

ஆனால் 2008 ஆம் ஆண்டு, A.R.ரஹ்மான் இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், 2008-க்கான “கோல்டன் குளோப்” விருதும், “பாபடா” விருதும் இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே.

ரஹ்மானின் குணங்கள் :

எளிமையானவர், நேர்மையானவர், அமைதியானவர், இறைப்பற்று மிக்கவர், தாய் பற்று உள்ளவர், ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை இன்றும் செய்து வருகிறார்.


தான் துவக்கிய இசைக்கல்லூரியில் இசை ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாய் கற்றுத் தருகிறார். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் தன் இயல்பான குணம் மாறாதவர், பண்புள்ளவர்.

ஆல்பம் :

ஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் 1989 ஆம் ஆண்டு தீன் இசை மாலை என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். இதை தொடர்ந்து ஆல்பத்தை வெளியிட்டார்.


ஆனால் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த வந்தே மாதரம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.

ரஹ்மானின் விருதுகள் :

தேசிய விருதுகள் மொத்தம் 4 (ரோஜா, மின்சாரகனவு, லாகன், கன்னத்தில் முத்தமிட்டால்).

1997 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ.

பிலிம்பேர் விருதுகள் 13 .

பிலிம்பேர் (சவுத்) விருதுகள் 12.

தமிழக திரைப்பட விருது 6.


20 ஆண்டு கால உழைப்பை பாராட்டி பெர்கலின் இசை பல்கலைக் கழகம் வழங்கிய ‘டாக்டர்’ பட்டம்.

ஆஸ்கர் விருதுகள் (2)

கோல்டன் குளோப் விருது. உத்திப் பிரதேசம் அலிகர் பல்கலைக் கழகம் வழங்கிய ‘டாக்டர்’ பட்டம்.

2010 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது.

2013 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.