fbpx

Swami Vivekananda History in Tamil – சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனான இவர் வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர்.

தனது இளம் வயதிலேயே அனைத்து விடயங்ளையும் ஆராய்ந்து அறிந்து முன்னோக்கு சிந்தனையுடன் இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

சுவாமி விவேகானந்தர் அவர்கள், விசுவநாத் தத்தா மற்றும் புவனேஷ்வரி தேவி என்று தம்பதியினருக்கு 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.

கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு

ஆரம்பகாலக் கல்வி :

ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். தனது தொடக்க கல்வியினை அவர் பயிலும் போது அவர் மிகச்சிறந்த நினைவாற்றலோடு இருந்துள்ளார்.

இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார்.
அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். கொடுப்பதில் வல்லவராக சிறு வயதிலேயே இருந்தார்.

உயர்கல்வியும், ஆன்மீக ஈடுபாடும் :

பின் கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார்.

அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம்
அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது.

அந்த சமயத்தில் தான் காளி கோவிலில் பூசாரியாக இருந்த ராமகிருஷ்ண
பரமஹம்சருடன் அவருக்கு சந்திப்பு ஏற்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை நேரில் பார்த்தவர் என்று விவேகானந்தரின் நண்பர்கள் அவரிடம் கூற அதுபற்றி முழு விடயத்தினையும் தெரிந்து கொள்ள முதன்முறையாக ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்க விவேகானந்தர் சென்றார்.

விவேகானந்தர் பரமஹம்சரிடம் கடவுளை நீங்கள் நேரில் கண்டுளீர்களா? என்று தனது கேள்வியினை அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த பரமஹம்சர் நான் உன்னை பார்ப்பதை விட தெளிவாக கடவுளை பார்த்துள்ளேன் என்று கூறினார்.


அதனை விவேகானந்தர் நம்ப வில்லை பிறகு ஒரு சோதனையை செய்த விவேகானந்தர் அதன் பின் ராமகிருஷ்ண பரமஹம்சரை நம்ப தொடங்கினார்.

சீடன் விவேகானந்தர் :

சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார்.

1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.

இந்தியாவில் அவரது பயணம் :

1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார்.

விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.

கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார்.
அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.

சிகாகோ உலக மாநாட்டில் சொற்பொழிவு :

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1893ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற விவேகானந்தர். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் கரவொலி பெற்றார்.

இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் ஆற்றிய உரையின் மதிப்பினை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்களாக மாறினார். மேலும் 4 ஆண்டுகள் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்த அவர் உலகம்
முழுவதும் விவேகானந்தா மிஷன் மற்றும் விவேகானந்தா மடம் என்று நிறுவி தனது கருத்துக்களை போதித்து வருகிறார்.

இறப்பு :

மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

சுவாமி விவேகானந்தரின் இறப்பு குறித்த எண்ணற்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வருவதை நன்மால் பார்க்க முடிகிறது. அவர் கான்செர் நோயால் பாதிக்க பட்டு இணைந்தார், காமத்தை அடக்கியதால் இறந்தார், ஆஸ்துமா மற்றும் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இப்படி ஆளுக்கு ஒருவர் ஒரு கதையை பரப்பி விடுகிறார்கள். ஆனால் அவர் உண்மையில் எப்படி இறந்தார் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.அவர் இறந்த அந்த நாளில், எப்போதும் போல அவர் காலையில் எழுந்து, பேலூரில்
உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று தியானம் செய்த்துள்ளார்.

அதன் பிறகு மாலை 7 மணி அளவில் தன்னுடைய அறைக்குள் சென்ற அவர், தன்னை யாரும் தொந்தரவு செய்யாதபடி பார்த்துக்கொள்ளுமாறு தன்னுடைய சீடர்களிடம் கூறியுள்ளார். அதன் பிறகு ஆழ்ந்த தியானத்திற்கு சென்ற அவர், இரவு 9 மணி அளவில் தன்னுடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்களில்
உச்சந்தலையில் உள்ள சஹஸ்ரார சக்கரத்தை உடைத்து தன்னுடைய உயிரை தானே வெளியேற்றி முக்தி அடைந்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.