fbpx

Gemini Ganesan History in Tamil – ஜெமினி கணேசன் வாழ்க்கை வரலாறு

காதல் என்றால் உடனே நினைவுக்கு வரும் அளவுக்கு, நடிப்போடு காதலிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும்.

தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டும் நடிக்காமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். காதல் மன்னன் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். இயக்குனர் பாலச்சந்தரின் படங்களில் தொடர்ந்து நடித்த ஒரே நடிகராகவும்ஜெமினி விளங்கினார். நான் அவன் இல்லை என்ற படத்தில் இவர் 9 வேடங்களில் நடித்தார்.

இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஜெமினி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1922 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை என்ற இடத்தில் ராமசாமி என்பவருக்கும் கங்கம்மாவிற்க்கும் மகனாக ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜெமினி கணேசன்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

சிறுவயதில் தன்னுடைய தாத்தா நாராயண சாமி ஐயர் வீட்டில் வளர்ந்த ஜெமினி கணேசன் அவர்கள், அதன் பிறகு புதுக்கோட்டையிலுள்ள குலமது பாலையா பிரைமரி ஸ்கூல் மற்றும் சென்னையில் உள்ள ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியிலும் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார்.

பின் சென்னை தாம்பரம்கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இவரை ஜெமினி ஸ்டுடியோவின்கேமராமேன் ராம்நாத் சந்தித்த பின்னர் வாழ்க்கையே மாறியது.

திரைத்துறையில் ஜெமினி கணேசனின் பயணம் :

1947ல் கல்லூரி வேலையை விட்டுவிட்டு சினிமா ஆசையில் ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக சேர்ந்தார் கணேசன்.அதுமுதல் ஜெமினி கணேசன் ஆனார். 3 ஆண்டுகள் அங்கு வேலை பார்த்த ஜெமினி, மிஸ் மாலினி படத்தின் மூலம் நடிப்புக்கு வந்தார்.

ஆனால் அந்தப் படம் சரியாகஓடவில்லை. ஆனாலும் ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்தார். 1952 ஆம் ஆண்டு கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார்.

இத்திரைப்படம், தோல்வி அடைந்தாலும் கூட, விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. பின் வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் அவர்கள் கதாநாயகனாக மாறி, ‘காதல் மன்னன்’ எனப் பெயர்பெற்றார்.

இல்லற வாழ்க்கை :

ஜெமினிக்கு நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோர் தவிர பாப்ஜி (அலமேலு) என்ற மனைவியும் உண்டு. பாப்ஜியைத்தான் ஜெமினி முதன்முதலில் திருமணம் செய்தார்.


பாப்ஜியை மணக்கையில் ஜெமினிக்கு வயது 19. தனது 22வது வயதில் ஒருகுழந்தைக்கு தந்தையானார். பின்னர், இந்தி நடிகையான புஷ்பவள்ளியை திருமணம் செய்துகொண்டார்.


இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஜயசாமூண்டிசுவரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் பிறந்தனர்.

வெற்றிப் பயணம் :

தொடக்கத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் அவர்கள், அதற்கு அடுத்த ஆண்டே ‘பெண்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.


இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியிடப்பட்ட மனம்போல மாங்கல்யம் என்ற படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்தார்.


இந்த திரைப்படம் ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்ததோடு சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைபடத்தில் கதாநாயகியாக நடித்த சாவித்திரியை திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் என அனைத்து விதமான படங்களின் தன் நடிப்பை வெளிபடுத்திய ஜெமினி கணேசன் அவர்கள், இயக்குனர்களின் நாயகனாகவும், திரைக்கதாநாயகிகளின் நாயகனாகவும், சினிமா ரசிகர்களின் நாயகனாகவும் விளங்கி, தமிழ் திரைப்படத்துறையில் ‘காதல் மன்னன்’ என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் சாதாரணமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். பல படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு முன்னணி கதாநாயகனாக இருந்தபொழுதும், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம். ராஜன்
போன்ற பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை.

சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஜெமினிகணேசன் அவர்கள், 1970 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘லலிதா’ என்ற திரைப்படமே அவர் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக அமைந்தது.

பின் இறுதிக்காலம் வரை கமல்ஹாசன், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் இணைந்து சிறு கதபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

இறப்பு :

இறுதி காலத்தில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.

விருதுகள் :

1970 ஆம் ஆண்டு காவியத் தலைவி திரைப்படத்திற்க்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.

1971 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.

1974 ஆம் ஆண்டு நான் அவனில்லை திரைப்படத்திற்க்காக ஃபிலிம்பேர் விருது.

1993 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சவுத் ஃபிலிம்பேர் விருது.

கலைமாமணி விருது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.