ஈரோட்டில் பிறந்த ஆர்த்தி ரகுராம் 28 வயதில் சுமார் 30 கோடி ரூபாய் வர்த்தகம் – Aarti Raghuram Success Story:

இந்தியாவில் பல துறைகள் சில துறைகளில் மட்டுமே நாம் சாதிக்க அதிக வாய்ப்பு இருக்கும். அப்படி ஒரு துறை தான் பியூட்டி மற்றும் பர்சனல் கேர் துறை, இந்த துறையில் வெளிநாட்டில் உள்ள பிரபலமான நிறுவனங்களால் மட்டுமே வெற்றி பெற முடியும்.


இப்படி போட்டி இருக்கும் இந்த துறையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்த்தி ரகுராம் என்பவர் 30 கோடி ரூபாய் மதிப்பிலான வருமானத்தை உருவாக்கியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை :

தமிழ் நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்த ஆர்த்தி ரகுராம். அவரின் 28 வயதில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை உருவாக்கி தேகா ஆர்கானிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி சாதனை படைத்தது உள்ளார்.

ஆர்த்தி 12ஆம் வகுப்பு வரை திருப்பூரிலும், பிறகு கல்லூரி படிப்புக்காக கோவை சென்று பிஏ எக்னாமிக்ஸ் படித்தார்.

16 வயதான பெண்களுக்கு சருமம், பரு மாசு வருவது போல ஆர்த்தியும் பாதிக்கப்பட்டால்.

பின் மருந்துகளை பயன்படுத்திய இவர். சரியாகத காரணத்தால் மருந்தின் மீது இருந்த நம்பிக்கையை இழந்த ஆர்த்தி. பாட்டி வைத்தியத்தை செய்தார் இது அவரது தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளித்தது மற்றும் இன்றி ஒரு தொழிலாக மாரி இருக்கிறது.

பிலிப்கார்ட் வெற்றி பயணம்

தொழில் பயணம் :

பின் இதை மற்றவர்களுக்கு கொடுக்க ஆர்வமாக இருந்தார். ஆகையால் வீட்டில் தயாரிக்கும் ஸ்கின்கேர் ஐடியா மீது ஆர்வம் அதிகரித்த பின்பு ஒரு வொர்க்ஷாப் தான் ஆர்த்தியின் வாழ்க்கையை மாற்றியது என சொல்லலாம்.

2017ல் அவர் சோப் செய்யும் வொர்க் ஷாப்-ல் கலந்துகொண்டார். அந்த போட்டியில் இவர் பல முயற்ச்சி செய்து சார்கோல் சோப் தயாரித்தார், இதைத் அவர் பயன்படுத்திப் பார்க்கும் போது நல்ல பயன் கொடுத்தது.

பின் அவற்றை சோதித்து பார்க்க நண்பர்கள், உறவினர்களிடம் கொடுத்தார். பின் இந்த சார்கோல் சோப்பில் ஆரஞ்சு தோல் சோப்பு, ரோஜா சோப்பு, மூலிகை சோப்களை ஈரோடு வேல்ஸ் அகடமி பள்ளியில் விற்பனை செய்த போது ஓரே நாளில் 11,050 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஆர்த்திக் கூறினார்.இதுவே இவரின் முதல் படி.

தொழில் வளர்ச்சி :

பின் இவர் கட்டுமான துறையில் இருக்கும் ரகுராம் என்பவரை திருமணம் செய்தார். இவர் தொழில் நன்றாக சென்றதால் ரகுராம் மற்றும் குடும்பங்களின் உதவியுடன் தேகா ர்கானிஸ் என்ற பிராண்டை ஈரோட்டில் உருவாக்கி தொழிலை மேம்படுத்தினார்.

இவர் தொழில் நன்றாக சென்று கொண்டு இருந்த போது தேகா காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் அதன் இணையத் தளத்திலும், சில முக்கியமான கடைகளில் மட்டுமே கிடைக்கும் வகையில் வர்த்தகச் சந்தையை உருவாக்கியுள்ளார் ஆர்த்தி ரகுராம்.

தற்போது தேகா காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் பிற ஈகாமர்ஸ் தளத்தில் இல்லை எனவும் விளக்கம் கொடுத்துள்ள ஆர்த்தி, மக்களின் பரிந்துரை மற்றும் வாய் மொழியாகவே வர்த்தகம் விரிவாக்கம் அடைந்து வருவதாகக் கூறுகிறார்
ஆர்த்தி.

மேலும் மொத்த வர்த்தகத்தில் 8-10 சதவீதம் வெளிநாட்டு வர்த்தகம் என்றும் பெருமையாகக் கூறுகிறார் ஆர்த்தி. இன்று இவருடைய சார்கோல் சோப் மற்றும் பீட்ரூட் லிப் பாம் தான் அதிகம் விற்பனையாகும் பொருட்களாக உள்ளது.

சோப், பேஸ் பேக், ஹேர் ஆயில், ஹேர் சீரம் எனப் பியூட்டி மற்றும்
பர்சனல் கேர் பிரிவில் சுமார் 100 பொருட்கள் உடன் 30 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருவதாக ஆர்த்திக் கூறுகிறார்.

நம்பிக்கை :

முழு தேசத்தையும் முன்னேற்ற ஒரே வழி அந்த நாட்டின் பெண்கள் வளர்ச்சி அடைவதுதான் என்று ஆர்த்தி நம்புகிறார். ஏற்றத்தாழ்வுகளை சிதைக்க, நியாயமற்ற அழகு தரங்களை உடைக்க விழிப்புணர்வை ஊக்குவிக்கிறார். உலகில் இருக்கும் அணைத்து பெண்களும் அழகாக இருக்கிறார்கள் அது அவள் சரும நிறத்தை அழகாக வைக்க தூண்டுகிறது.


இயற்கை பொருட்கள் உங்கள் சருமத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கவசமாக செயல்படுகின்றன, இது ஒவ்வொரு நாளும் உங்கள் தோலில் பாதித்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் விளைவை தடுக்கிறது வெவ்வேறு சரும நிறம் என்பது இயற்கையின் வெவ்வேறு வண்ணங்களைப் போன்றவை, அவற்றில் எந்த ஒப்பீடும் இல்லை, ஒவ்வொரு வண்ணமும் ஒரு தனித்துவமான கதையைக் கொண்டுள்ளது.

Leave a Comment