Flipkart Success Story – பிலிப்கார்ட் வெற்றி பயணம்

இன்று உலகமே இணையத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு பொருளை வாங்குவதற்கு கூட்டநெரிசலில் கடைகளுக்கு சென்று அந்த பொருளை வாங்குவோம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைனில் நம்மால் வாங்க முடியும்.

தற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகங்கள் கொடி கட்டி பறக்கின்றன. அதில் ஒன்றுதான் ஃபிலிப் கார்ட். இந்த நிறுவனத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

Flipkart என்பது இந்திய இ-காமர்ஸ் நிறுவனமாகும், இது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது ஸ்டார்ட் ஆப் நிறுவனமாக, பூஜ்யத்தில் இருந்து உருவானதுதான் பிலிப்கார்ட் நிறுவனம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில்
பிலிப்கார்ட் மிகப்பெரியதாகும். புத்தகம் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் இதில் கிடைக்கும்.

ஆகஸ்ட் 2018 இல், அமெரிக்க சில்லறை விற்பனைச் சங்கிலியான வால்மார்ட் Flipkart இல் 77% கட்டுப்பாட்டுப் பங்குகளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.

2 பெட்ரூம் கொண்ட வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம், இன்று 8 லட்சம் சதுரடியில் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த அபார வெற்றிக்கு காரணமானவர்கள் பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் என்ற இரண்டு இளைஞர்கள்.

கல்வி மற்றும் வேலை :

பின்னி பன்சால் இந்தியாவில் உள்ள சண்டிகரை சேர்ந்தவர். டில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர். இவருடைய தந்தை வங்கியில் ஓய்வுபெற்ற தலைமை மேலாளர்.

தாய் அரசாங்க துறையில் பணியாற்றுபவர். சச்சின் பன்சால் இந்தியாவில் உள்ள சண்டிகரைச் சேர்ந்தவர்.

இவர் செயின்ட் அன்னேஸ் கான்வென்ட் பள்ளியில் படித்தார். இவருடைய தந்தை தொழிலதிபர் ஆவார்.

பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் இருவரும் 2004ஆம் வருடம் டெல்லி ஐஐடியில் படித்தனர். பிறகு இருவருக்கும் அமேசானில் வேலை கிடைத்தது. இருவரும் அமேசானில் பணியில் இணைந்தார்.

அமேசானில் நல்ல வேலை, நல்ல சம்பளம் எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.நாம் ஏன் அடுத்தவருக்காக வேலை செய்ய வேண்டும்? நாமும் இதேபோல் இந்தியாவில் ஒரு ஆன்லைன் ஸ்டோர் ஆரம்பித்தால் என்ன? என்ற சிந்தனை இருவருக்கும் உதித்தது.

விஜய் கபூர் வாழ்க்கை பயணம்

தொடக்க காலம் :

அமேசானில் இருந்து வெளியேறிய இருவரும் இந்தியாவுக்கு வந்தனர். பெங்களூரில் இரண்டு பெட்ரூம் கொண்ட அப்பார்ட்மெண்டை வாங்கி அதில் தங்களது பிலிப் கார்ட் நிறுவனத்தை தொடங்கினார்கள்.

பெங்களூருவில் இருக்கும் அனைத்து கடைகள், மால்கள், நூலகங்கள் போன்ற அனைத்து இடங்களுக்கும் சென்று 10% தள்ளுபடியில் அனைத்து புத்தகங்களும் இங்கு கிடைக்கும் என்று விளம்பரம் செய்தனர்.

நிறுவனம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியும் ஒரு ஆர்டர்கூட இவர்களுக்கு வரவில்லை. ஒரு வாரம் கழித்து ஆந்திரப் பிரதேசத்திலிருந்து சந்திரன் என்பவர்ஒரு புத்தகத்தை பிலிப் கார்ட்டில் முதல் ஆர்டர் செய்தார்.

ஆனால் அவர் கேட்ட புத்தகம் எங்கு தேடியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.இறுதியில் சப்னா புக்ஹவுஸ் என்ற ஒரு புத்தகக்கடையில் அந்த புத்தகம் கிடைத்தது. அதனை விலைக்கு வாங்கி வாடிக்கையாளருக்கு முதல் முறையாக டெலிவரி செய்தனர்.

2007ம் ஆண்டு இந்நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்தது. ஆன்லைனில் புத்தகம் வாங்குவது என்றால் அனைவரும் பிலிப் கார்ட்டை பரிந்துரைக்க ஆரம்பித்தனர் அதற்கு முக்கிய காரணம் 10% தள்ளுபடி மற்றும் நேரடி விற்ப்பனை.

400-500 பேர் பணி :

2011-ல் பெங்களூரில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து பணிபுரிய ஆரம்பித்தனர். அதன்பின் இந்நிறுவனம் 400-500 பேர் பணிபுரியும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது. இந்தியர்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கே பொருளை வாங்கியபின் காசு கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன்பின் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்தது. இதனால் பிலிப்கார்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது.

குறிப்பாக மொபைல் போன் சந்தை பெரிய அளவில் இந்தியாவில் விரிவடைய தொடங்கியது.

வளர்ச்சி :

பிலிப்கார்ட்டின் இந்த வளர்ச்சியை கண்டு சீனாவிலிருந்து Tencent என்ற கம்பெனியும் ஜப்பானிலிருந்து Soft Bank என்ற கம்பெனியும் பிலிப்கார்ட்டில் 10 மில்லியன் டாலரை முதலீடு செய்தனர். இதன் மூலம் பிலிப்கார்ட் நல்ல முன்னேற்றம் அடைந்தது.

ஆகஸ்ட் 2018 இல், அமெரிக்க சில்லறை விற்பனைச் சங்கிலியான வால்மார்ட் Flipkart இல் 77% கட்டுப்பாட்டுப் பங்குகளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.

பிலிப்கார்ட் சர்ச்சை :

13 செப்டம்பர் 2014 அன்று, ஹைதராபாத்தில் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணை பிளிப்கார்ட் டெலிவரி செய்பவர் சில்மிஷம் செய்தார். இந்தச் சம்பவத்திற்காக வீட்டுப் பணிப்பெண்ணின் முதலாளி Flipkart மீது வழக்குத் தொடர்ந்தார், ஆஃப்லைன் டெலிவரி சேவைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான விதிமுறைகள் தேவை எனக் குறிப்பிட்டு.

2014 ஆம் ஆண்டில், ஃபியூச்சர் குரூப் போன்ற போட்டியாளர்கள் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்திடம் புகார் அளித்தனர், Flipkart இன் Big Billion Days தள்ளுபடிகள் மற்ற சில்லறை விற்பனையாளர்களை கொள்ளை யடிக்கும் வகையில் விலைகளைக் குறைப்பதாகக் குற்றம் சாட்டினர். புகார்கள் குறித்து ஆராயப்படும் என்று அமைச்சகம் கூறியது.

ஏப்ரல் 2015 இல், ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் வெளியீட்டு பங்குதாரராக இருந்ததற்காக பிளிப்கார்ட் விமர்சனங்களை எதிர்கொண்டது. பின்னர் பிளிப்கார்ட் திட்டத்தில் இருந்து வெளியேறியது.

2016 ஆம் ஆண்டில், டெலிவரி நிர்வாகி நஞ்சுண்ட சுவாமி ஒரு தயாரிப்புக்கு பணம் செலுத்த போதுமான பணம் இல்லாத வாடிக்கையாளரால் கொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக, Flipkart ஒரு பாதுகாப்பு முன்முயற்சியை தொடங்கியது இறந்த நிர்வாகியின் பெயரிடப்பட்டது.

மொபைல் பயன்பாட்டில் நஞ்சுண்டா பொத்தான் என அழைக்கப்படும்
SOS பட்டன் இதில் அடங்கும், இது அவசர காலங்களில் கள நிர்வாகிகளால் பயன்படுத்தப்படலாம்.

விருது :

சச்சின் பன்சால் இந்தியாவின் முன்னணி பொருளாதார நாளிதழான தி எகனாமிக் டைம்ஸ் 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த தொழில்முனைவோராக விருது பெற்றார்.

ஏப்ரல் 2016 இல், சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் டைம் இதழின் வருடாந்தர பட்டியலில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம் பெற்றனர்.

Leave a Comment