Tamil Quotes

முருங்கையில் கோடிகளை அள்ளும் கரூர் பெண் – Deepika Success Story

இன்றைய இளம் தலைமுறையில் 9-ல் இருந்து 6 வரையில் வேலையைக் காட்டிலும் சொந்த தொழில், நிறுவனம், வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே வேளையில் எந்தத் துறையிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைத்துவிடாது.

அதிலும் குறிப்பாக விவசாயத் துறையில் மிகவும் கடினம். ஆனால் விவசாயத் துறையிலும் வெற்றிபெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, அதில் ஒன்றைத் தான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபிகா என்ற பெண் கையில் எடுத்துள்ளார்.

தொடக்கம் :

குழந்தையில் இருந்து தீபிகா அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் விளை பொருட்களை விற்க போதுமான சந்தைகள் இல்லை என்பதை உணர்ந்தார் இதனால் விவசாயிகள் பல சோதனைகள் மற்றும் இன்னல்களைப் அனுபவிப்பதை கண்டு மனம் உடைந்தார்.

அவரது தந்தையும் விவசாயி என்பதால் விவசாயம், விளைபொருட்கள் அதன் வர்த்தகம் குறித்து அவரிடம் நிறையப் பேசும் பொது கரூர் பகுதியில் முருங்கை அதிகப் படியாக விளையும் என்பதை அவர் தந்தை கூறியுள்ளதாகவும் தீபிகா குறிப்பிட்டு உள்ளார்.


அப்படிப் பேசும் போதும் விவசாயத்தில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் மற்றும் அதன் மூலம் உருவாக்கும் வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தீபிகாவிற்குத் அவர் தந்தை கற்று கொடுத்தார்.

இதை அடி மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட நிலையில் படிப்பை முடித்ததும் விவசாயத்தைச் சார்ந்த வர்த்தகத்தில் இறங்கினார் தீபிகா.

எம்.ஆர்.எப் வெற்றி பயணம்

முடிவு செய்தார் தீபிகா :

தீபிகா Actuarial Science பிரிவில் எம்எஸ்சி பட்டம் பெற்ற பின் கரூர் பகுதியில் அதிகம் விளையும் முருங்கையில் அனைத்து விதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உணர்ந்து மட்டும் இல்லாமல்.

அதை விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாமல் இருப்பதையும் உணர்ந்துள்ளார். இதன் மூலம் முருங்கையை அடிப்படையாகக்
கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்தார் தீபிகா.

GOOD LEAF நிறுவனம் :

பின் அவர் தந்தை இடம் இந்த யோசனையை சொல்லி தீபிகா அவரை இணைந்து GOOD LEAF என்ற நிறுவனத்தை உருவாக்கி , முருங்கையில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உடன் பல்வேறு அழகு சார்ந்த பொருட்களைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

இவர் கரூர், திண்டுக்கல், வேலூர் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து முருங்கை சார்ந்த பல பொருட்களைக் கிலோவிற்கு 5 முதல் 100 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்து வருகிறார். இதுமட்டும் அல்லாமல் பல ஏக்கரில் முருங்கை விவசாயமும் செய்து வருகிறார்.

பொருட்கள் தயாரிப்பு :

தீபிகாவின் GOOD LEAF நிறுவனம் தற்போது முருங்கை பாட் , முருங்கை ரைஸ் மிக்ஸ், முருங்கை சட்னி பவுடர், முருங்கை டீ , அதை சார்ந்து சோப், பேஸ் ஸ்கிரப், ஹேர் ஆயில், ஹேர் சீரம் முதல் முருங்கை பேஸ் பேக்ஸ் எனப் பல பொருட்களைத் தயாரித்துள்ளார்.

விற்பனை :

தற்போது முருங்கை ஹெர்பல் டீ மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், பேஸ் பேக்ஸ் 250 முதல் முதல் 490 ரூபாய் வரையில் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுவதாகத் தீபிகா கூறியுள்ளார்.

GOOD LEAF பொருட்கள் தற்போது ரீடைல், ஆன்லைன் என அனைத்து வர்த்தகச் சந்தையிலும் விற்பனை செய்து வருகிறார் தீபிகா. இந்தக் கட்டமைப்பைக் கொண்டு தீபிகா கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து வருகிறார்.

Exit mobile version