fbpx

50 பைசாவில் தொடங்கி தொழில்முனைவோராக ஆன பாட்ரிசியா :

நாகர்கோவில் மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பாட்ரிசியா தாமஸ். இவர் பெற்றோர் இருவருமே அரசு வேலையில் பணிபுரிந்தனர். இவரது இளமை காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை.

இவர் சென்னையில் இருக்கும் குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கும் போது நாராயண் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் இந்து என்பதால் பாட்ரிசியாவின் பெற்றோர் இவர்களை ஏற்கவில்லை. பாட்ரிசியா நாராயணை திருமணம் செய்து கொண்ட போது வெறும் 17 வயது மட்டுமே ஆனது.

திருமணம் வாழ்க்கை :

திருமணம் ஆன இவர்கள் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் சில வருடம் பின் இவர் கணவர் போதை பழக்கத்திற்கு அடிமை ஆனார். இதனால் பாட்ரிசியாவின் கனவுகள் அனைத்தும் சின்னா பின்னமாகின. குடும்பத்தை நடத்தப் பணம் இல்லாமல் தவித்தார்.

வேறு ஆதரவும் இல்லை. பின் அவர் ஒரு முடிவை எடுத்தார் ஒன்று மரணம், மற்றொன்று விதியை எதிர்த்துப் போராடுவது. அப்பொழுது அவர் வயிற்றில் ஒரு குழந்தை இருந்தது அந்த சூழலில் தன் கணவரை விட்டுப் பிரிந்து வெளியேறினார். இரண்டு குழந்தைகளுடன் கதியற்று நின்றார் பாட்ரிசியா.

பனீந்திர சாமா வாழ்க்கை வரலாறு

ஊறுகாய் வியாபாரம் :

பாட்ரிசியாவுக்கு எந்த வேலையும் தெரியாது. படிப்போ சான்றிதழ்களோ இல்லை. யாரும் தனக்கு வேலை தரமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். அவர் இருந்த காலக்கட்டம் பெண்கள் அடிமையாக இருந்த நேரம். அதையே தனக்கு சாதகமாக மாற்றிக் காட்டினார் பாட்ரிசியா.

அவர் சமையல் கலையில் ஓரளவுக்கு கைதேர்ந்தவராக இருந்த அவர். தனது
வீட்டிலேயே ஊறுகாய்,ஜாம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். மிகவும் சூடு பிடித்து ஓடிய வியாபாரத்தால். சமையல் கலைதான் தனக்கும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் சோறுபோடும் என்று அப்போது அவர் முடிவுசெய்தார்.

தள்ளுவண்டிக் கடை :

எத்தனை நாட்கள் வீட்டிலேயே வியாபாரம் செய்வது என்று ஒரு முடிவு எடுத்து 1982ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெரினாவில் சிறிதாக ஒரு தள்ளுவண்டிக் கடை ஆரம்பித்தார். அதில் காபி, போண்டா,டீ போன்றவற்றை விற்க தொடங்கினார்.

முதல் நாள் வியாபாரம் 50 பைசா மனம் தளராமல் பாட்ரிசியா தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டார். அவர் சுவையால் சென்னை வாசிகள் இவர் கடையை தேடி வர தொடங்கினர். பின் ஆயிரங்களில் வருமானம் கிடைத்தது.

தொழில் பயணம் :

மெரினாவில் கொடிகட்டிப் பறந்த பாட்ரிசியாவின் தள்ளுவண்டிக் கடை எதிர்பாராத விதமாக சேரி ஒழிப்பு வாரியத்தின் கண்ணில் பட்டது. அந்த வாரியத்தின் தலைவர் தனது அலுவலகம் முன் கேண்டீன் தொடங்க சொல்லி கேட்டுக்கொண்டார்.

இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொண்ட பாட்ரிசியா பின் பல இடங்களில் கேண்டீன் தொடங்கினார். இவர் தொழில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது. மத்திய அரசு சார்பாக நடத்தி வரும் துறைமுக மேலாண்மை பயிற்சிப் பள்ளியில் சுமார் 700 மாணவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் வாய்ப்பும் பாட்ரிசியாவுக்குக் கிடைத்தது. இதனால் இவர் உணவகம் பிரபலம் ஆகி பலரும் இவரை தேடி வந்தனர்.

மகளின் இறப்பு :

இவர் தொழில் சரியாகப் போய்க்கொண்டிருந்த போது, அச்சரப்பாக்கம் பகுதியில் கார் விபத்து ஒன்றில் பாட்ரிசியாவின் மகள் சந்தீபாவும் அவரது கணவரும் உயிரிழந்தனர்.

அதிர்ச்சியில் மூழ்கிய பாட்ரிசியா தனது அனைத்து தொழிலையும் மகனிடம் ஒப்படைத்து விட்டு சோகத்தில் வீட்டில் இருந்தார். சிறிது காலம் அவர் தன்னை உக்கவித்து கொண்ட பின் மீண்டும் களத்தில் இறங்கினார்.

அச்சரப்பாக்கம் பகுதியில் தனது மகள் விபத்துக்கு உள்ளானபோது ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால்தான் மரணமடைந்தார் என்பதால் அந்தப் பகுதியில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார் பாட்ரிசியா.

அவர் மகள் நினைவாக சந்தீபா ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் உணவகம் தொடங்கினார்.

லட்சங்களில் வருமானம் :

ஒரு பெண் தன் முயற்சியால் தொழில் தொடங்கி சாதித்து இருக்கிறார். இப்போது பாட்ரிசியா ரெஸ்டாரண்ட்டில் 200- க்கும் மேற்ப்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர். 50 பைசாவில் தொடங்கிய இவரது உணவுத் தொழிலில் இப்போது ஒரு மாதம் 70 லட்சத்துக்கு மேல் வருமானம் வருகிறது.

இவரது விடா முயற்சியால் ஏற்பட்ட வளர்ச்சியைப் பாராட்டி 2010ஆம் ஆண்டில் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருதை இந்திய வர்த்தக தொழில் துறை கூட்டமைப்பு வழங்கியது.

பெண்ணாக இருந்தாலும், யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்தாலும் விடா முயற்சியும் மன உறுதியும் இருந்தால் வெற்றிபெறலாம் என்பதற்கு பாட்ரிசியாவின் வெற்றிக் கதை ஒரு உதாரணமாகும்.

தமிழ் பெண் நினைத்தாள் அவள் அடைய வேண்டிய இடத்தை அடைவாள் என்பதற்க்கு பாட்ரிசியா தான் உதாரணம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.