Phanindra Sama History in Tamil – பனீந்திர சாமா வாழ்க்கை வரலாறு

நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்களை இணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பஸ் டிக்கெட் நிறுவனம் ரெட்பஸ் ஆகும். இதன் மூலம் நீங்கள் பஸ் டிக்கெட் புக் செய்தால், விமான பயண சொகுசுடன் பேருந்தில் பயணிக்கலாம். ரெட்பஸ் பனீந்திர குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

பனீந்திர சாமா தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தார். இவர் குடும்பம் விவசாயத்தை சார்ந்து இருந்தது. பனீந்திர சாமா தாய் தந்தை இவரை ஆங்கில மொழில் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டனர்.

ஆனால் இவர் கிராமத்தில் ஆங்கில பள்ளி இல்லையென்பதால். இவர் மாமா இருக்கும் ஹைதராபாத்துக்கு இவரை அனுப்பி படிக்க வைத்தனர்.இவர் தாய் தந்தை இவருக்கு கஷ்டம் என்றால் என்ன என்று உணர்த்த. இவரிடம் பள்ளி கட்டணத்தை 120 ரூபாய் குடுத்து கட்ட சொல்வார்கள்.

அப்பொழுது பனீந்திர சாமா அந்த தொகையை கண்டு அவர் தாய் தந்தை படும் கஷ்டத்தை உணர்ந்தார். பின் நன்றாக படிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் இவர் பிறந்தது கிராமம் ஹைதராபாத்தில் பிறந்தவர்கள் இவரை விட அறிவாளியாக இருந்தார்கள்.

தன் தாய் தந்தை உழைப்பை கருத்தில் கொண்டு. நன்றாக படிக்க தொடங்கினார் இதன் விளைவாக அனைத்து ஆண்டும் தன் வகுப்பில் முதல் இடம் வந்தார். 12 ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் வந்தார்.பின் இவருக்கு பிடித்த கல்லூரியான BITS Pilani-யில் மின் பொறியியல் (Electrical Engineering) சேர்ந்தார்.

200 கோடி வெற்றி பயணம் ஹரிணி சிவகுமார்

நிறுவனத்தில் பணி :

பின் கடைசி ஆண்டில் (பயிற்சி) Internship எடுக்க டெல்லி புறப்பட்டார். அவர் கல்லூரி படிப்பு முடிந்ததும் அதே நிறுவனத்தில் பணி புரிந்தார்.

இவருக்கு சிப் வடிவமைப்பு செய்வதில் ஆர்வம் கொண்டு சேர்ந்த இவருக்கு ஒரு ஆண்டு காலம் எந்த ஒரு சிப் வடிவமைக்கும் பணியும் தரவில்லை. இதனால் இவர் கல்லூரியில் படித்த நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து. அவர்கள் எங்கே வேலை செய்கிறார்கள் என்று விசாரிக்க தொடங்கினார்.

பின் 2005 ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு பெங்களுரில் இவர் நண்பர்கள் பணிபுரியும் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸில் நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார்.

பனீந்திர சாமா யோசனை :

பெங்களுரில் இருந்து இவர் வீடு பக்கம் இருந்ததால் வார விடுமுறை நாட்களில் அங்கு செல்ல தொடங்கினார்.

அப்பொழுது அவர் வாரம் வாரம் வீட்டுக்கு செல்ல பேருந்துக்கு நேரில் சென்று முன்பதிவு செய்தார். ஒரு நாள் தீபாவளி அன்று இவர் ஊருக்கு செல்ல பேருந்து டிக்கெட் வாங்க சென்றார். ஆனால் அனைத்து டிக்கெட்டும் விற்றுவிட்டது.

இதனால் இவர் பல பஸ் நிறுவனத்துக்கு சென்று டிக்கெட் கேட்டு உள்ளார். இருக்கு எங்கும் டிக்கெட் கிடைக்காததால் பெரும் சோகத்தில் அவர் ரூம்க்கு சென்றார். அன்று இரவு இவர் தூங்காமல் கையில் பணம் இருந்தும் பேருந்து இல்லாததால் விரக்தியில் தூக்காமல் இருந்தார்.

பின் அடுத்த நாள் இவர் அந்த பஸ் நிறுவனத்துக்கு சென்றார். அவர் இடம் சில தகவல்களை. பெற்று கொண்டு அவர் நண்பர்கள் தீபாவளி முடித்து வந்ததும் இந்த சம்பவத்தை சொன்னது மட்டும் இல்லாமல். பஸ் நிறுவனத்தின் பிரச்சனைகளை சொன்னார்.

இந்த பிரச்சனையை தொழிலாக மாற்ற வேண்டும் என்று இவர் நண்பர்களிடம் சொன்னார்.

போர்ட்டலை தொடங்கினார் :

பின் பனீந்திர சாமா நண்பர்களான சுதாகர் பசுபுநூரி மற்றும் சரண் பத்மராஜி ஆகியோருடன் சேர்ந்து 5 லட்சம் சேர்ந்து ரெட்பஸ் என்ற போர்ட்டலை தொடங்கினர். பின்னர் இவர்கள் போர்ட்டலை பெங்களூரில் இருக்கும் அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் அனுப்பினர்.

இவர்கள் போர்ட்டலில் முதல் முதலில் முன் பதிவு செய்தவர் இன்போசிஸ் ஊழியர். அதன் பிறகு வேகமாக வளர்ந்த ரெட்பஸ் நிறுவனம், இப்போது 5000 வழித்தடங்களுக்கு பேருந்து மற்றும் முகவர்களை கொண்டு உள்ளது.

வளர்ச்சி :

இந்நிறுவனம் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், புனே, டெல்லி, போன்ற பல்வேறு நகரங்களில் அலுவலகம் திருந்து பணியாற்றினார். மொத்தம் ஏழு பராமரிப்பு மையங்கள், 3 செயற்கைகோள், 10 நகரங்களில் பஸ் டிக்கெட்டுகளை வீட்டுக்கே சென்று கொடுத்தார்கள்.

இந்த நிறுவனத்தின் வருவாய் 2007 ல் 50 லட்ச்சத்தில் இருந்து 2013-னில் 995 கோடியாக வளர்ந்தது. அரசு மற்றும் தனியார் பஸ் டிக்கெட்டுகளை விற்பனை செய்யவதற்காக பல மாநில சாலைப் போக்குவரத்து கழகத்துடன் ரெட்பஸ் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது.

பின் ரெட்பஸ் கண்காணிப்பு மையம் அமைத்தது. அவர்களிடம் 80000 கூட்டாளர் விற்பனை நிலையங்களும் இருந்தன.

மேலும் செல்போனிலிருந்து sms மூலம் முன்பதிவு சேவைகளை வழங்கியது. கூகிள் போன்ற நிறுவனங்களிடம் சேர்ந்து பணி தொடங்கினர்.

முடிவு :

இவ்வளவு சாதனைகள் புரிந்த ரெட் பஸ் இப்போது தென்னாப்பிரிக்காவின் Naspers இன் துணை நிறுவனமான Ibibo குழுமத்திற்க்கு விற்கப்பட்டது.

Leave a Comment