Che Guevara History in Tamil – சேகுவேரா வாழ்க்கை வரலாறு

“அடிமைபட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு, அவர்களுக்கு எனது போராட்டம் தேவையாக இருக்கிறது.”

“நானொரு கொரில்லா போராளி” அப்படி அழைக்கப்படுவதை விரும்புகிறேன் என்று கூறிய புரட்சியளர் சேகுவேரா வைத்தியராக இருந்து கொரில்லா போராளிகளாக உருவெடுத்து புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரான வரலாற்றை இப்பதிவில் காணலாம்.

Che Guevera

பிறப்பு :

1928-ஆம் ஆண்டு ஜூன் பதினான்காம் தேதி அர்ஜென்டினா மாகாணத்திலுள்ள ரொசாரியா என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா தம்பதியர்களுக்கு மூத்த மகனாக பிறந்தார் “ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா” . இது தான் சேகுவேராவிற்கு பெற்றோர் வைத்த பெயர்.

இவர் மீது தாய் தந்தையர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள். இதனாலேயே தங்கள் பெயர்களை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா என பெயர் சூட்டினர்.

அப்போது அவர்களுக்கு தெரியவில்லை தங்கள் மகன் வரலாற்றில் வேறு பெயரில் பதிவு போகிறான் என்று. இவரை வீட்டில் செல்லமாக டேட்டி என்று அழைத்தனர். இவர் ஒரு இடதுசாரி குடும்பத்தை சேர்ந்தவர்.

Fidel Castro History in Tamil – பிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாறு

இளமைப் பருவம் :

சேகுவேராவின் குடும்பம் சொந்தமாக தேயிலை, மூலிகை பண்ணைகளை வைத்து இருக்கும் அளவிற்கு பெரிய குடும்பம். எனவே அவரின் இளமைப் பருவம் மிக சிறப்பான வகையிலேயே அமைந்தது.

சேவின் தாயார் நீச்சலில் ஈடுபாடு கொண்டவர். சேகுவேராவிற்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவரை காலைப்பொழுதில் நதிக்கு அழைத்துச் சென்று நீராட வைப்பாராம். இதன் காரணமாகவே அவருக்கு நுரையீரலில் நிமோனியா நோய் தாக்கி ஆஸ்துமா ஏற்பட்டது. இந்நோய் சேகுவேராவின் வாழ்நாள் முழுவதும் பாதித்து கொண்டேதான் இருந்தது.

இருப்பினும் சேசேகுவேரா விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். அவர் ஒரு சிறந்த ரக்பி விளையாட்டு வீரர். இவரின் தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை பூசெர் என்னும் பட்டப் பெயரிட்டு அழைத்தனர்.

அதுமட்டுமில்லாமல் சேகுவேரா அரிதாகவே குளிப்பார் என்பதால் சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு. இதற்கு பன்றி என்பது பொருளாகும்.

தனது தந்தையிடம் சதுரங்க விளையாட்டை பழகிய சேகுவேரா தனது 12-வது வயதில் இருந்தே உள்ளூர் விளையாட்டுகளில் கலந்து கொள்வராம்.

சேகுவேராவின் புத்தக காதல் :

சேகுவேரா புத்தகத்தின் மீது வைத்திருந்த காதலை வெளிப்படுத்தும் வகையில் தனது வீட்டில் 3000-ற்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார். தனது வாழ்நாள் முழுவதும் கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட சேகுவேரா நெரூடா, கீட்ஸ்,மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் போன்றோரின் ஆக்கங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

சேகுவேரா காரல் மார்க்ஸ், போல்க்னர் கைடே, சல்வரி வேர்னே போன்றோர் எழுதிய புத்தகங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அது மட்டுமின்றி நேரு, காப்கா, காமுஸ், லெனின் புத்தகங்களையும் பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோர் புத்தகங்களையும் விரும்பிப் படித்தார்.

கல்வி :

தொழுநோய் பரவிக் கொண்டிருந்த காலம் அது. 1948-ஆம் ஆண்டு புவனஸ் அயாஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க சேர்ந்தார் சேகுவேரா. ஆனால் 1951-ஆம் ஆண்டு ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு அவரது நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து தொழு நோய்க்கு தன்னால் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என எண்ணி தனது ஈருருளியை எடுத்துக்கொண்டு தென் அமெரிக்கா, அமேசான் முழுவதும் சுற்றித் திரிந்தார்.

அங்கு அவர் பார்த்த ஒரு காட்சி சேகுவேராவின் புரட்சி பாதைக்கு வித்திட்டது. அமெரிக்கர்களின் ஆளுமை தான் அது. அப்போதிலிருந்து சேகுவேரா புரட்சியில் ஈடுபட தொடங்கினார். அதன்பிறகு அர்ஜென்டினா திரும்பிவந்து 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்லூரி படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றார்.

எழுத்தாளர் சேகுவேரா:

தொழுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பயணத்தில், தென்அமெரிக்கா, அமேசான் போன்ற நாடுகளில் சுற்றித் திரிந்து எடுத்த குறிப்புகளை மோட்டார் ஈருருளிப் குறிப்புகள்( The Motorcycle Diaries) என்ற நூலில் எழுதினார்.

இந்நூல் பின்நாட்களில் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை செய்யப்பட்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இந்நூலின் பெயரில் 2004-ஆம் ஆண்டில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு பல விருதுகளையும் குவித்தது.

சேகுவேராவின் பயணங்கள் :

1953-ஆம் ஆண்டு மீண்டும் தன் பயணத்தை தொடங்கினார். இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கோஸ்தாரிக்கா, நீக்கராகுவா, எல் சல்வடோர், ஹெண்டூராஸ், குவாதமாலா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

காஸ்ட்ரோவின் சந்திப்பு :

குவாதமாலாவில் மக்களாட்சி அடிப்படையில் நடந்து கொண்டிருந்த நில சீர்திருத்தம் மூலம் பெருந்தோட்ட முறையை ஒழித்து கொண்டிருந்த குடியரசு தலைவர் ஜாக்கோபோ ஆர்பன்ஸ் குஸ்மான் ஆட்சியை கண்ட சேகுவேரா உண்மையான போராளி ஆவதற்கும் புரட்சியாளர் ஆவதற்கும் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குவாததமாலாவில் தங்க முடிவு செய்தார்.

சேகுவேராவிற்கு குவாதமாலாவின் கம்யூனிஸ்ட் அரசு ஆதரவு கொடுக்கின்ற காரணத்திற்காக குவாத்தமாலா அரசை கவிழ்க்க அமெரிக்கா திட்டம் தீட்டி, தன் சிஐஏ மூலம் அத்திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

குவாதமாலாவில் ஹில்டா கடேயோ அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் சேவிற்கு கிடைத்தது. அவர் பெரு நாட்டை சேர்ந்த பொருளியலாளர்.இடதுசாரி சார்பு உள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தை சேர்ந்தவர்.

இவரின் மூலமாக சேகுவேராவிற்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் கிடைத்தது. அதன் பிறகு சேகுவேரா மெக்சிகோ சென்றார். அங்கு தான் அவருக்கு காஸ்ட்ரோவின் அறிமுகம் கிடைத்தது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு – Netaji Subhas Chandra Bose History in Tamil

கியூப புரட்சி :

1954-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்த சேகுவேரா கம்யூனிஸ்டுகளிடம் நெருங்கி பழகினார். மார்க்சிய லெனினிய பாதையே தன் பாதை என்பதையும் உணர்ந்தார்.

இச்சமயத்தில் நிக்கோலோப போராளியை பின்பற்றிய சேகுவேரா கியூபாவின் விடுதலைக்காக போராட முடிவெடுத்தார். இதைப்பற்றி காஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல்காஸ்ட்ரோவிடம் பேசினார். காஸ்ட்ரோவுடன் இணைந்து போராட முனைந்தார்.

காஸ்ட்ரோவுக்காவது கியூபா சொந்த நாடு, ஆனால் சேகுவேராவிற்கு அப்படி இல்லை. இருப்பினும் சேகுவேரா கியூபாவின் விடுதலைக்காக போராட முடிவெடுத்தார். இதனாலேயே அவர் மனிதருள் மாமனிதராக போற்றப்படுகிறார்.

கியூப விடுதலை :

புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆயுதப் பயிற்சி நடைபெற்றது. கொரில்லா போர்முறை தாக்குதல் மூலம் அப்போதைய பாடிஸ்டா ராணுவத்தை முடக்க நீர் வழி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். க்ரான்மா எனும் கள்ளத் தோணியில் சேகுவேரா, காஸ்ட்ரோ உட்பட 82 வீரர்கள் 1956-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கியூபாவிற்கு பயணப்பட்டனர்.

1957-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி பாடிஸ்டா ராணுவ தளபதி லாஃப்லட்டோ கொல்லப்பட்டார். இதுவே புரட்சியாளர்களின் முதல் வெற்றியாக அமைந்தது.

1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கியூபா தலைநகர் ஹவானா புரட்சிபடை வசம் வந்தது. அதன் பின் கியூபா-வின் ஆட்சி அதிகாரம் காஸ்ட்ரோவிடம் வந்தது.

1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ கியூபா பிரதமராக பதவியேற்றவுடன் சேகுவேரா தேசிய வங்கியின் அதிபராகவும், விவசாயத் துறையில் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

எளிமை :

1961-ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொல்பொருள் அமைச்சராக பதவி ஏற்ற பின் தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகள் உடன் பணியாற்றிய சேகுவேரா 1966-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹொங்குவை விட்டு வெளியேறி போலி கடவுச்சீட்டுடன் பொலிவிய நாட்டுக்குள் நுழைந்தார்.

அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணால் பொலிவிய ராணுவத்திற்கு சேகுவேரா பற்றிய தகவல் கிடைத்ததும், பொலிவிய ராணுவம் அவரை சுற்றி வளைத்து சுட்டது.

சேகுவேரா பிடிபட்டார் என பொலிவிய ராணுவம் சிஐஏ-விற்கு தகவல் தெரிவித்தது. அதே நேரத்தில் சேகுவேரா உயிருடன் இருக்கும் பொழுதே இறந்துவிட்டார் என பொலிவிய ராணுவத்தால் மக்களுக்கு பொய்யான தகவல் பரப்பப்பட்டது.

சேகுவேராவை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால் புரட்சி வெடிக்கும் என்பதால் அவரைக் கொன்று விடுங்கள் என்று சிஐஏ-விடம் இருந்து தகவல் வந்தது.

மரணம் :

காலை 11 மணியளவில் சேகுவேராவை சுட்டுக் கொல்ல ராணுவம் முடிவுசெய்தது. ஆனால் அதை யார் செய்வது என்று குழப்பம் ஏற்படவே மரியோ எனும் ராணுவ சர்ஜன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனிமையான இடத்திற்கு மரியோ சேவை அழைத்து சென்று கொல்ல தயாரானார்.

“முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது மேல்” என்பார் சேகுவேரா.

ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாரானார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவேரா கேட்டார். அதை ஒரு பொருட்டாகவே மரியோ எடுத்துக்கொள்ளவில்லை.

உலகப் புகழ்பெற்ற, விடுதலைக்காகப் போராடிய, சாதி, மதம்,மொழி, இனம் என்று எதுவும் பாராத ஒரு மாமனிதனை நோக்கி ஒன்பது தோட்டாக்கள் பாய்ந்தது. அதில் ஒன்று சேகுவேராவின்இதயத்தை பதம் பார்த்தது. அக்டோபர் 9, 1967-ஆம் ஆண்டு ஒரு மாபெரும் புரட்சியாளன் இந்த உலகை விட்டு மறைந்து போனார்.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

சேகுவேரா வாழ்க்கை வரலாறு, Che Guevara History in Tamil, Che Guevera, Che Guevera Biography tamil, Che Guevera full History Tamil, Che Guevera History, Che Guevera History in Tamil, Che Guevera History Tamil, Che Guevera Life History Tamil, Che Guevera Valkai Varalaru, Se Sguvera History i Tamil

Leave a Comment