பிறப்பு :
1926-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி கியூபாவில் உள்ள பிரான் என்னும் இடத்தில் ஏன்சல் காஸ்ட்ரோ, லினா என்னும் காதலர்களுக்கு பிடல் அய்ஜாந்திரோ காஸ்ட்ரோ மகனாக பிறந்தார்.
காஸ்ட்ரோ பிறந்தத பிறகே அவரது தாய் தந்தையர் திருமணம் செய்து கொண்டனர். அது காஸ்ட்ரோவுக்கு நினைவு தெரிந்த வயது என்பதால் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பும் காஸ்ட்ரோவுக்கு கிடைத்தது.
காஸ்ட்ரோ சிறுவயதிலிருந்தே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இவருடைய தந்தை சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது கடின உழைப்பினால் ஒரு பண்ணையாராக உருவாக்கினார். இவருடைய பண்ணையில் ஆயிரக்கணக்கில் கியூப மக்கள் பணிபுரிந்தனர். இவர் கிட்டத்தட்ட 1940 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பண்ணையை சொந்தமாக வைத்திருந்தார் Fidel Castro History in Tamil.
கல்வி :
பிடல் காஸ்ட்ரோ 1930-ஆம் ஆண்டு சான்டியாகோ-டி- கியூபா எனும் ஊரிலுள்ள லாசேல் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கி அதன் பிறகு டோலோரஸ் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார்.
பின் 1941-ம் ஆண்டு பெலன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு கம்யூனிச கொள்கைகள் முதன் முதலில் அறிமுகமானது. ஆரம்ப காலத்தில் கம்யூனிச கொள்கைகளில் பெரிய அளவு நாட்டம் காஸ்ட்ரோவுக்கு இல்லை.
1945 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப்போர் முடிவுக்கு வந்த சமயத்தில் தான் காஸ்ட்ரோ தனது கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார். 1945-ஆம் ஆண்டு ஹவானா சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். அப்போதுதான் கம்யூனிச கொள்கைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் அவர் ஒரு முழு கம்யூனிச வாதியாக மாறியிருந்தார்.
Che Guevera History in Tamil – சேகுவேரா வாழ்க்கை வரலாறு
அரசியல் பயணம் :
ஹவானா பல்கலைக்கழகத்தில் இரு கட்சி தலைமைகள் இருந்தன.ஒன்று 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஆர்த்தோடாக்ஸ் இயக்கம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியலில் கொஞ்சம், கொஞ்சமாக ஈடுபட்ட காஸ்ட்ரோ முதல் தேர்தலிலே பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார். அத்தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
மேலும் கல்லூரியில் பயிலும் போதே பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தன் அபார பேச்சு திறமையால் மக்களை பெரிய அளவில் கவர்ந்தார் காஸ்ட்ரோ.
கியூபாவின் எல்லா வளங்களும், சொத்துக்களும் கியூபாவுக்கும், கியூப மக்களுக்குமே சொந்தம், வேறு எந்த நாட்டவர்களுக்கும் கிடையாது என மக்களிடம் முழங்கினார்.
1952 ஆம் ஆண்டு பாடிஸ்டா கியூபாவின் ஆட்சியை கைப்பற்றினார். அப்போது காஸ்ட்ரோ “குற்றம் சாட்டுகிறேன்” என்னும் இதழை துவக்கி அதில் பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளையும் பாடிஸ்டா அமெரிக்காவின் கைப்பாவை என்பதையும் அம்பலப்படுத்தி மக்களை புரட்சிக்கு அணி திரட்டினார்.
முதல் புரட்சி :
ஜூலை 26, 1953-ஆம் ஆண்டு மொன்காடாத் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்த காஸ்ட்ரோ திட்டமிட்டிருந்தார். இருப்பினும் காஸ்ட்ரோவின் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதை தொடர்ந்து காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார்.
1953-ஆம் ஆண்டு வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது காஸ்ட்ரோ புரட்சி திட்டம் தீட்டியது ஒப்புக்கொண்டார். பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர்ந்து, அமெரிக்காவை கடுமையாக சாடினார் காஸ்ட்ரோ.
இருப்பினும் சிறையில் அடைக்கப்பட்ட காஸ்ட்ரோ 15 மே, 1955 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா போர்முறை தாக்குதலை கற்றுத்தேர்ந்தார்.
காஸ்ட்ரோவும் சேகுவேராவும் :
காஸ்ட்ரோ மெக்சிகோவில் இருந்தபோது அவருக்கு போராளி சேகுவாரா அறிமுகமானார். அவர் கியூபா விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
காஸ்ட்ரோவும், சேகுவேராவும் க்ரான்மா என்னும் கள்ளத் தோனியின் மூலம் கியூபா நாட்டை வந்தடைந்தனர். அடர்ந்த மரங்கள் நிறைந்த சியார்ரா மேஸ்தாரவில் தங்கிருந்தபடியே கியூபா விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்படுத்தினர்.
பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையில் சோசியலிச குடியரசு கட்சி ஆட்சி அமைத்தது.
அமெரிக்காவின் ஆதிக்கம் :
கியூபாவில் காஸ்ட்ரோவின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் அமெரிக்கா காஸ்ட்ரோவை தன்வசம் இழுக்க முயற்சி செய்தது. ஆனால் அமெரிக்காவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூப மக்களுக்கே சொந்தம் என கூறினார் காஸ்ட்ரோ. அதன் காரணமாக அமெரிக்கா, கியூபா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. இருப்பினும் அவற்றை எல்லாம் சாதுரியமாக எதிர் கொண்டார் காஸ்ட்ரோ.
கொலை முயற்சி :
அமெரிக்கா கியூபாவை அடைய முடியாமல் போனதால் அதற்கு காரணமான காஸ்ட்ரோவை கொல்ல திட்டம் தீட்டியது. ஒருமுறை இருமுறை அல்ல 638 முறை காஸ்ட்ரோவை கொள்ள அமெரிக்காவின் சி.ஐ.ஏ முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.
காஸ்ட்ரோவின் ஆட்சி :
கியூபாவில் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார்.
இம்முயற்சியின் பலனாக 1995-ஆம் ஆண்டு கியூபாவின் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆக உயர்ந்தது என யுனெஸ்கோ ஆய்வில் தெரியவந்தது.
கியூபாவில் தொழில் துறையில் பணிபுரிபவர்களில் 60% பேர் பெண்கள் என்றும் கணக்கிடப்பட்டது.
மருத்துவத்துறையில் உலகிலேயே சிறந்த நாடாக கியூபா இன்றளவும் விளங்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக மகப்பேறின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைவாக உள்ள நாடாக கியூபா விளங்குகிறது.
Jhansi Rani History in Tamil – ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு
எழுத்தறிவு இயக்கம் :
நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்த அரசை முடக்கி நாட்டை தன் வசப்படு தீய காஸ்ட்ரோ முதல் பணியாக எழுத்தறிவு இயக்கம் ஒன்றை தொடங்கினார்.
“தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள் தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்” என்பது அந்த இயக்கத்தின் தாரக மந்திரமாக இருந்தது.
சுரங்கத் தொழிலாளர்கள் பணியை முடித்ததும் நேராக வகுப்பறைக்கு படையெடுத்தனர். கடப்பாரைகளை வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு எழுதுகோல் ஏந்தி எழுத கற்றுக் கொண்டனர்.
மரம் வெட்டுபவர்கள் கத்தியை மூலையில் வைத்துவிட்டு நூல்களை மடியில் ஏந்தினர்கள். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பாடம் நடத்தினார்கள். பற்களை இழந்த மூத்த குடிமக்களும் படிக்கத் தொடங்கினார்கள்.
எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் ஒரே ஆண்டில் 30 சதவீதமாக இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 98.2 சதவீதமாக உயர்ந்தது.
அதுமட்டுமின்றி படிக்க சென்ற ஒருவரிடம் கூட அரசாங்கம் ஒரு பைசா கூட வசூலிக்கவில்லை அனைவருக்கும் கல்வியை இலவசமாகவே வழங்கியது.
இறுதி காலம் :
1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், அதன் பின் 1976 முதல் 2008 வரை கியூபாவின் அதிபராக இருந்த காஸ்ட்ரோ வயது மூப்பின் காரணமாகவும் உணவு செரிமான பிரச்னைகளாலும் பதவி விலகினார். அதன் பின் காஸ்ட்ரோ தன் தமையனான ராவுல் காஸ்ட்ரோவிடம் அதிபர் பதவியை ஒப்படைத்தார்.
மரணம் :
பதவியை ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்து வந்த காஸ்ட்ரோவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது . இந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி இரவு பத்தரை மணி அளவில் தனது 90 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பது போல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கு பின்னும் கியூப மக்கள் மனதில் அவர் விதைத்த கம்யூனிச கொள்கைகள் வேரூன்றி நிற்கின்றன. பொதுவுடைமை கொள்கைகளுக்கு இன்றளவும் சாட்சியாக பிடல் காஸ்ட்ரோ கட்டியமைத்த கியூபாவும் அதன் மக்களும் திகழ்கின்றனர்.