Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு

bharathiyar in tamil

முறுக்கு மீசையுடன் முண்டாசு கட்டிக்கொண்டு “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று உணர்ச்சி பொங்க முழங்கிய கவிஞரை பார்த்து மிரண்டு நின்றது பிரிட்டிஷ்  அரசாங்கம் – Bharathiyar in Tamil.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பாரதியின் பேனாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறின. ஓர் கவிஞனாய் இருந்து கொண்டு தன் பாடல் வரிகள் மூலம் மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி பிரிட்டிஷ் ஆதிக்கத்தை மிரள செய்த மகாகவி பாரதி பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் –

பிறப்பு மற்றும் இளமை காலம்:

மகாகவி சுப்ரமணிய பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ஆம் நாள் சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சுப்பிரமணியன். தன் ஐந்தாவது வயதில் தாயை இழந்த பாரதி, சிறு வயது முதலே பாரதியார் தமிழ் மீது அளவற்ற பற்றும் புலமையும் கொண்டிருந்தார். தன் 11-ஆவது வயதில் கவி பாட தொடங்கினார். இவருடைய கவி புலமையால் ஈர்க்கப்பட்ட எட்டயபுர மன்னர் இவருக்கு “பாரதி” என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார். சுப்ரமணியனாக இருந்தவர் அன்று முதல் “சுப்ரமணிய பாரதி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

திருமண வழக்கை :

1897-ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே செல்லம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தன் தந்தை இறந்த பிறகு வறுமை காரணமாக காசிக்கு சென்று சிறிது காலம் தங்கி இருந்தார். பிற்காலத்தில் எட்டயபுர மன்னரின் அழைப்பின் பேரில் அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியின் மொழி ஆளுமை :

பாரதியார் தமிழ் மட்டும் அல்லாமல் சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சிறந்த புலமை பெற்று இருந்தார். பல மொழிகளை கற்ற பின்னர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் ” என்று பாரதி பாடிய பாடல் தமிழ் மொழியின் சிறப்பை உலகறிய செய்தது.

1912-ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழி பெயர்த்த பாரதியார் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற பல புகழ்பெற்ற காவியங்களை படைத்தார்.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

பாரதியார் வரலாறு தமிழ், பாரதியார் வரலாறு தமிழில், பாரதியார் கட்டுரைகள், பாரதியார் கட்டுரை தமிழ், பாரதியார் கட்டுரை முன்னுரை, bharathiar history tamil, bharathiyar kurippu in tamil, bharathiyar asiriyar kurippu in tamil, bharathiyar aasiriyar kurippu in tamil, mahakavi bharathiyar history tamil, mahakavi bharathiyar history in tamil, bharathiyar biography in tamil, bharathiyar katturai in tamil munnurai, Bharathiyar biography in Tamil.

சுதந்திர போராட்டத்தில் பாரதி :

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றோர் துப்பாக்கியுடனும், மகாத்மா காந்தி போன்றோர் அகிம்சை வழியிலும் போராடி கொண்டிருக்க பாரதியோ கூர் தீட்டிய பாடல் வரிகள் மூலம் மக்களிடம் விடுதலை உணர்வை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்.

1904-ஆம் ஆண்டு முதல் சுதேச மித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த பாரதி மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல கட்டுரைகளை பத்திரிகை மூலம் கொண்டு சேர்த்தார். பாரதியின் எழுத்துகளுக்கு மக்களிடையே பெருகும் ஆதரவை கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் அவருடைய பத்திரிகையை தடை செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே “ஆடுவோமே பள்ளு படுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே” என்று பாடி தன் சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தினார்.

ஜாதி ஒழிப்பு:

பிராமண குடும்பத்தில் பிறந்த பாரதி ஜாதிய வேறுபாடுகளை அறவே வெறுத்தார்.

சாதிகள், இல்லையடி பாப்பா! – குலத் தாழிச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

என்று அவர் பாடிய பாடல் இதற்கு சிறந்த உதாரணமாகும். மனிதருள் வேறுபாடுகள் இல்லை மனிதராய்  பிறந்த அனைவரும் சமம் என்று தொடர்ந்து பாடி வந்தார். 

இறப்பு:

பாரதியின் இறப்பு ஒரு அகால மரணமாக நிகழ்ந்துவிட்டது. 1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது கோவில் யானை மிதித்ததால் நோய்வாய்ப்பட்ட பாரதி 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி தன்னுடைய 19-ஆம் வயதில் உயிர் துறந்தார்.

நினைவு சின்னங்கள்:

எட்டயபுரத்தில் சென்னையிலும் பாரதியார் வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் திருஉருவ சிலையும், மணிமண்டபமும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாரதியார் பெயரில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும்  சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment