Tamil Actor Prabhu Deva History in Tamil – நடிகர் பிரபுதேவா வாழ்க்கை வரலாறு

மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.

ஒரு நடன இயக்குனராக 100-க்கும் அதிகமான திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் அதிகமானதிரைப்படங்களும் நடித்து உள்ளார், அதுமட்டும் இல்லாமல் இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார்.

தமிழ் தெலுங்கு, இந்தி என 3மொழிகளிலும் வெற்றிப்பட இயக்குனராக இருக்கும் பிரபுதேவாவின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் நாள் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் பிரபுதேவா பிறந்தார். இவரோட தந்தை சுந்தரம் மாஸ்டர் மற்றும் தாயார் பெயர் மகாதேவம்மா.

இவருக்கு ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை முகூர் சுந்தர் பரபல நடன இயக்குனர்களுள் ஒருவர் ஆவார்.

நடிகை மனோரமா வாழ்க்கை வரலாறு

திரையுலக வாழ்க்கை :

மைசூரிலிருந்து சென்னைக்கு வந்த பிரபு தேவா குடும்பம். தன்னுடைய தந்தையின் நடனக் கலையில் அதிக ஆர்வம் கொண்ட அவர், இந்தியப் பாரம்பரியக் கலையான பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டார்.

நாளடைவில் மேற்கத்திய நடனக்கலையை கற்றுக்கொண்டா அவர், 1988 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் நடனக் கலைஞராக தனது முதல் முயற்ச்சியை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் இருந்து உள்ளார்.

இதில் ஒரு சில பாடல் காட்சிகளில் அவரே நடித்தும் வந்தார். பின் இந்து என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் பிரபு தேவ . அதற்க்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். வேகமாக நடனமாடும் திறமைக்காக இவரை மைக்கல் ஜாக்சன் என அழைத்தார்கள், ஒரு நடன இயக்குனராக மட்டுமல்லாமல், திரைப்படத்தில் பலவிதமான நடன அசைவுகளைத் தந்து கோலிவுட் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மிகவும்
பிரபலம் ஆனாது. அதை தொடர்ந்து முக்காலா முக்காபலா பாடல் மிகவும்
பிரபலம் ஆனாது . இந்த பாடலில் இடம்பெற்ற நடனக் காட்சிகள் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனத்திற்காக தேசிய விருது பெற்றார்.

இல்லற வாழ்க்கை :

பிரபுதேவா , ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்தார். அவர் மனைவி ‘ரமலத்’ என்ற பெயரை ‘லதா’ என்று பின் மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. முதல் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

2008 ஆம் ஆண்டு ‘வில்லு’ படத்தின் போது இவருக்கு நயனதாராவுடன் காதல் ஏற்பட்டது, இறுதியில் திருமணம் செய்துகொள்ள முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். பின் அவர் நயனதாரவை விட்டும் பிரிந்தார்.

பிறப் பணிகள் :

தமிழ் திரைப்படத்துறையில் இருந்த அவர் தெலுங்கு,இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களை இயக்கிய அவருக்கு, 2012 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘ரவுடி ராத்தோர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்தது.

தற்போது இவர் இயக்கதில் நடிக்கப் பல முன்னணி இந்தி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய திரைப்படங்கள் போக்கிரி (தமிழ்), வில்லு (தமிழ்), எங்கேயும் காதல் (தமிழ்), வெடி (தமிழ்),நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா (தெலுங்கு), பெளர்ணமி (தெலுங்கு), சங்கர் தாதா சிந்தாபாத் (தெலுங்கு), வாண்டட் (இந்தி), டெட் அண்டு அலைவ் (தமிழ்), ரவுடி ராத்தோர் (இந்தி).

விருதுகள் :

1997 ஆம் ஆண்டு மின்சார கனவு திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது’.

2004 ஆம் ஆண்டு லக்ஸ்ஷயா’ (இந்தி) திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது’.

2005 ஆம் ஆண்டு போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது, ஸ்டார் க்ரீன் விருது, விஜய் டிவி விருது மற்றும் மாத்ருபூமி விருது.

Leave a Comment